Headlines

வெனிசுவேலாவில் கடும் மின் தட்டுப்பாடு – வேலை நாட்கள் குறைப்பு!




வெனிசுவேலாவில் நிலவும் கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வேலை எனும் கட்டுப்பாட்டை அரசு விதித்துள்ளது.

மின்சாரப் பிரச்சினை தீரும் வரை அரசு ஊழியர்கள் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் மாத்திரமே வேலைக்கு வரவேண்டும் என துணை ஜனாதிபதி அரிஸ்டோபுலோ இஸ்துரிஸ் தெரிவித்துள்ளார். மின்சார நெருக்கடி காரணமாக சுமார் இருபது லட்சம் அரசு ஊழியர்கள் இனி வாரத்தில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பணிக்கு வந்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை தற்காலிகமானது என்றும், மின் பிரச்சினை தீரும் வரை இது நடைமுறையில் இருக்கும் எனவும் நாட்டின் துணை ஜனாதிபதி தேசியத் தொலைக்காட்சியில் அறிவித்துள்ளார். காலநிலை மாற்றம் மற்றும் பெரும் வறட்சி பிரச்சனைகள் காரணமாக நீர்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும், அதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அரசு கூறுகிறது. அதேபோல் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வெள்ளிக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பிரச்சனையை அரசு சரியாக கையாளாததாலேயே இது முற்றியுள்ளது என எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. ஏற்கனவே மின்சாரப் பயன்பாட்டினை குறைக்க அரச ஊழியர்களுக்கு வௌ்ளிக்கிழமை தினமும் வேலையற்ற தினமாக அரசு அமுல்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *