Headlines

நாம் முட்டாள்கள் கிடையாது! டிலான்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தும் அளவிற்கும் நாம் முட்டாள்கள் கிடையாது என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Read More

காலிக்கு வந்ததில் 1/4 பங்கினரே கிருளப்பனைக்கு சென்றனர்

காலியில் இடம்பெற்ற மேதின ஊர்வலங்களுக்கு வந்தவர்களில் 1/4 பங்கினரே கிருளப்பனைக்கு சென்றிருந்ததாக, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர், எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (3)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இம்முறை தமக்கு ஒரு சவால் இருந்ததாக குறிப்பிட்ட அவர், கிருளப்பனையில் மேதினம் ஏற்பாடு செய்யப்பட்டது தமக்கு சவாலாகவே எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சியின் பொருளாளர் என்ற ரீதியில் 2100 பஸ்களுக்கு கட்டணம் செலுத்தியதாகவும் ஆனால் காலிக்கு 3000க்கும் அதிகமான பஸ்கள் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்….

Read More

நாமலின் விதி சில தினங்களில் தெரியும் – ரவி கருணாநாயக்க

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் விதியினை நாளை அல்லது மறுநாள் வரும் போது பார்க்க முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் மேதின பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்று வருகின்ற விசாரணைகளின்படி நாமல் ராஜபக்ஷ பணம் மறைக்கப்பட்ட இடம் மற்றும் அவருடை அரண்மனை பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும் கடந்த ஆட்சியின் போது ஊழல், மோசடியில் ஈடுபட்ட அனைவரையும் மக்கள் முன்னிலையில் முழங்கால் இடச்செய்யவுள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க…

Read More

காலிக்கு வராத சுக உறுப்பினர்கள் குறித்து விரைவில் தீர்மானம்

கட்சியின் மே தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளாது, கட்சியின் யாப்பை மீறும் வகையில் செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை பிரதிநிதிகள் தொடர்பில் விரைவில் தீர்மானிக்கப்படும் என, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Read More

தமக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படலாம் – மஹிந்த

கிருலப்பனையில் நடைபெற்ற மேதின கூட்டத்தில் கலந்து கொண்டமைக்காக, தமக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மகிந்த ஆதரவாளர்களால் நேற்றைய தினம் (1) கிருலப்பனையில் மேதினக் கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மகிந்த ராஜபக்ஷ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். இந்த நிலையில் தமக்கும், தமக்கு ஆதரவாக செயற்பட்ட சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்…

Read More

முஸ்லிம்கள் அமைதியற்று இருக்க முடியாது: இரா.சம்பந்தன்

– என்.எம்.அப்துல்லாஹ் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் 1-5-2016 அன்று யாழ்ப்பாணம் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மைதானத்தில் பெருந்திரளான மக்கள், கட்சிப்பிரமுகர்கள் மத்தியில் இடம்பெற்றது. அதன்போது சிறப்புரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சித்தலைவருமாகிய இரா சம்பந்தன் அவர்கள் “எமது பிராந்தியத்தில் முஸ்லிம்கள் அமைதியற்று இருக்க முடியாது” என்று குறிப்பிட்டார், நாம் ஒரு நீண்ட அமைதியற்ற காலத்தை கடந்துவந்திருக்கின்றோம், இவ்வாறான சூழ்நிலை மீண்டுமொருதடவை எமக்குத் தேவையற்றது, நாம் எமது பிராந்தியத்தில் அமைதியாக…

Read More

கார்ட்போர்ட் துட்டகை முனுக்களுக்கு இடமில்லை : பிரதமர்

எங்களுக்காக அர்ப்பணித்த மக்களுக்களின் நலனுக்காக நான் என்னையே அர்ப்பணிக்க தயாராக உள்ளேன். முழு பாராளுமன்றத்தை அரசாங்கமாக மாற்றி எங்களுடைய வேலைகளை துரிதமாக முன்னெடுத்த பின்னர் மக்களுக்கான பிரச்சினைகளை தீர்ப்போம். ஐக்கிய தேசியக் கட்சியை அழிப்பதற்கு கார்ட்போர்ட் துட்டகை முனுக்களுக்கு இடமில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். உலக மகா திருடர் உதயங்க வீரதுங்கவுடன் கை போட்டு ஒன்றாக விருந்து உண்ணும்  கார்ட் போர்ட் துட்டகை முனு, எதிரணியினர் விசேட நிதி குற்றப் புலனாய்விடம் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்….

Read More

கிருலப்பனை மேதின பேரணியில் மயங்கி விழுந்த எம்.பி

நேற்று, (01) கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர, மேதின பேரணியில் செல்கையில் திடீரென மயங்கிவிழுந்தார். அவர், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிருலப்பனையில் இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் மேதின பேரணியில் பங்கேற்றிருந்தபோதே அவர், மயங்கிவிழுந்துவிட்டார்.

Read More

மைத்திரியுடன் மே தின சமரில், மஹிந்த படுதோல்வி

– நஜீப் பின் கபூர் – நேற்று (01) நடைபெற்ற மே தினம் ஜனாதிபதி மைத்திரிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்குமிடையிலான ஒரு நேரடி யுத்தமாகவும் ஒரு கௌரவப் பிரச்சினையாகவும் இருந்தது. இலங்கை வரலாற்றில் மிகப் பெரிய மே தினத்தை நாம் கிருலபனையியே நடாத்துவேம் என்று அவர்கள் நேற்றுவரை மார் தட்டிக் கொண்டிருந்தார்கள். அதே போன்று தங்கள் அணியிலுள்ள 52 பேரில் மூன்று பேரைத்தவிர ஏனைய அனைத்துப் பாரளுமன்ற உறுப்பினர்களும் கட்டாயம் கிருலபனைக்கு சமூகம் தருவார்கள் என்றும் அவர்கள்…

Read More

முஸ்லிம்களின் எதிர்காலம் சூனியமாகிவிடும் – முஜிபுர் ரஹ்மான் உருக்கம்

கொழும்பு நகர் கல்வி வலயத்திற்குள்ளே வைத்தியர்கள் சட்டத்தரணிகள் பொறியியலாளர்கள் உருவாக்கத்தின் தேவையை விட ஆசிரியர்களை உருவாக்குவது அத்தியவசியமாக மாறியிருக்கின்றது. இதனை நாம் செய்யாவிடின் எமது சமூகத்தின் எதிர்காலம் சூனியமாகிவிடும் என கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை விடுத்தார். கொம்பனி தெரு மதரஸா ஒன்றின் வருடாந்த மீலாத் தின நிகழ்வு (29) இரவு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அவர்…

Read More

விரைவில் அலரிமாளிகையை கைப்பற்றுவோம் – ஜே.வி.பி

மக்களின் பிரச்சினைகளுக்கு முதலாளித்துவம் தீர்வன்று என்பதை மீள வலியுறுத்தியுள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), அலரிமாளிகையில் எங்களுக்கும் அறை இருப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர். அலரிமாளிகையில் எங்களுக்கு அறையில்லை. ஆனால், விரைவில் அதனை கைப்பற்றுவோம் என்றும் தெரிவித்துள்ளது. ஹெவலொக் நகரத்தின் பி.ஆர்.சி மைதானத்தில் நேற்று (1) இடம்பெற்ற, ஜே.வி.பியின் மே தினக் கூட்டத்திலேயே இக்கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டன. ஒன்றுகூடியிருந்த மக்களிடம் உரையாற்றிய ஜே.வி.பி  அநுர குமார திஸாநாயக்க, ‘தற்போது, வடக்கிலும் தெற்கிலும் கூட, மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். நாட்டை ஆளும் திறனற்றதாக…

Read More

மே தினம் மறக்கக் கூடாத வரலாறு! (கட்டுரை)

– S.சஜீத் – இப்போதெல்லாம் அரைத் தூக்கத்தில் எழுந்து அவசர அவசரமாகப் பள்ளிக்கு ஓடுகிறோம். அப்பாவும், பல வீடுகளில் அம்மாவும் மற்றொரு பக்கம் வேலைக்கு ஓடுகிறார்கள். மாலையில் அனைவரும் களைத்துப்போய்விடுகிறோம். ஆனால் அம்மா மட்டும் வேலைக்குச் சென்று வந்தாலும்கூட வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்கிறார்கள். தொடர்ந்து அவர்கள் உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த உலகம் ஒவ்வொரு நொடியும் இயங்க மனித உழைப்புதான் காரணமாக இருக்கிறது. ஆனால், ஒருவர் எதற்காக உழைக்கிறார்? மகிழ்ச்சியாக வாழ்வதற்காக! ஆனால், நாள் முழுக்க உழைத்துக்கொண்டே இருப்பவர்களுக்கு…

Read More