Headlines

முன்னாள் பொலிஸ் அதிபரின் வீட்டில் திருட்டு

முன்னாள் பொலிஸ் அதிபரான விக்டர் பெரேராவின் வீட்டில் திருட்டு சம்வபம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாணந்துறையில் உள்ள அவரது வீட்டில் நேற்றிரவு (8) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஒரு மில்லியன் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை திருடனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். சம்வபம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

நான்கு வர்த்தக நிலையங்கள் உடைத்து திருட்டு.!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் இன்று (18)  அதிகாலை நான்கு வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளன. புதிய காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள மூன்று பல சரக்கு விற்பணை நிலையங்களும், ஒரு மென்பானம் விற்பனை செய்யும் வர்த்தக நிலையமும் உடைக்கப்பட்டு அங்கிருந்த பணம் மற்றும் பொருட்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்த வர்த்தக நிலையங்களுக்கு போடப்பட்டிருந்த பூட்டுக்கள் உடைக்கப்பட்டு இந்த கொள்ளைச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக இந்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளார்கள் காத்தான்குடி பொலிஸ்…

Read More

வீதிகளில் தனிமையில் செல்லும் பொதுமக்கள் மிக அவதானம்

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் அண்மைக்காலங்களாக வீதியோரத் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளமையினால் வீதிகளில் தனிமையாகச் செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக நடந்துகொள்ளுமாறு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக பொலிசார் தெரிவிக்கையில். கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல கிராமங்களில் உள்ள சன நடமாட்டம் குறைவாக உள்ள உள்வீதிகளினால் பொதுமக்கள் தங்க ஆபரணங்களை அணிந்து செல்லும்போது மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்து வருபவர்கள் தங்க ஆபரணங்களை அபகரித்துச்செல்லும் நடவடிக்கைகள் அதிகரித்துக்  காணப்படுகின்றது. இதனை தவிர்த்துக்கொள்வதற்காக வேண்டி குறிப்பாக பெண்கள்…

Read More