Headlines

காத்தான்குடி ஷுஹதாக்களின் சுவனவாழ்வுக்காக பிரார்த்திப்போம்

காத்தான்குடி பள்ளிவாசல்களில் மிலேச்சத்தனாமாக படுகொலை செய்யப்பட்ட ஷுஹதாக்களின் சுவனவாழ்வுக்காக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரார்த்திப்பதாக அக்கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். 199௦ ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி, தமிழ் பேசும் மக்களின் வரலாற்றில் ஏற்பட்ட இந்தக்கறை அனைவரின் மனங்களிலும் நீங்காதுள்ளது. காத்தான்குடி மீரா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் ஹுசைனியா தைக்காவில் இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது புலிகள் மேற்கொண்ட இக்குரூரக் கொலைகளில் ஷஹீதாக்கப்பட்ட 103 முஸ்லிம்களின் குடும்பங்களுக்கும், உறவினர்களுக்கும்…

Read More

4 வியாபாரிகள் கைது

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 4 வியாபாரிகள் பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை நுகர்வோருக்கு விற்பனை செய்ய முயன்ற குற்றத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

Read More

புனித றமழான் விசேட அறிவியல் போட்டி-2016

காத்தான்குடி அல்மனார் நிறுவனம் நடாத்தும் புனித றமழான் விசேட அறிவியல் போட்டிக்கான வினாக்கொத்துகள் விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்நிறுவனத்தின் செயலாளர் நாயகம் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனியின் வழிகாட்டலில் நடைபெறும் இச்செயற்றிட்டத்தின் மூலம் இப்புனித மாதத்தில் குர்ஆன், ஹதீதுகளுடன் தொடர்புபட்ட ஒரு சமூக குழாமொன்றை உருவாக்கி அதன் பலனை அவர்களது வாழ்க்கையிலும் கடைப்பிடித்து வாழும் உயரிய பணி இதனூடாக கட்டியெழுப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. நோன்பு காலங்களில் மார்க்க அறிவினை விருத்தி செய்யும் நந்நோக்கில் இவ்வினாக்கொத்து தற்போது வெளியாக்கப்பட்டுள்ளது….

Read More

காணாமல் போன இரண்டரை வயது குழந்தை மீட்பு: காத்தான்குடியில் சம்பவம்

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் செவ்வாய்க்கிழமை (14.6.2016) மாலை காணாமல் போன இரண்டரை வயதுயை குழந்தை செவ்வாய்க்கிழமை இரவு ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள கர்பலா கிராமத்தில் வைத்து மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது காத்தான்குடி ஆறாம் குறிச்சி ஜன்னத் மாவத்தையைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தையான எம்.ஜே.ஜியாஸ் எனும் ஆண் குழந்தையொன்று (14.6.2016 செவ்வாய்க்கிழமை மாலை காணாமல் போயுள்ளது. வீட்டுவாசலில் நின்று கொண்டிருந்த இந்தக் குழந்தை காணாமல் போனதையடுத்து பெற்றாரும், உறவினர்களும், அயலவர்களும் குழந்தையை தேடியுள்ளனர்….

Read More

(Full Story) காத்தான்குடி சிறுமி சூடு விவகாரம்; வளர்ப்புத் தாய்க்கு நீதிமன்றில் நடந்த சோகம்

– விஷேட நிருபர் – காத்தான்குடியில் சிறுமியொருவருக்கு சூடு வைத்த சம்பவம் தொடர்பில் விளக்க மறியலில் இருந்து வந்த சிறுமியின் வளர்ப்புத்தாய் மற்றும் சிறுமியின் தந்தை ஆகிய இருவருக்கும் நேற்று (24) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட போதிலும், சிறுமிக்கு சூடு வைத்ததாக கூறப்படும் சிறுமியின் வளர்ப்புத்தாய்க்கு எவரும் சரீரப்பிணை நிற்பதற்கு முன் வராததால் சிறுமியின் வளர்ப்புத்தாய் மீண்டும் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்க மறியிலில் வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காத்தான்குடியில் சிறுமியொருவருக்கு சூடு…

Read More

வெள்ளப்பெருக்கு ; காத்தான்குடி பள்ளிவாயல்கள் விடுத்துள்ள அறிவித்தல்

-பழுலுல்லாஹ் பர்ஹான் – தற்போது நமது நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அதிகளவான பிரதேசங்கள் முற்றாக நீரில் மூழ்கி தங்களது வீடுகளை விட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதை நாம் அறிவோம். 2011 ம் ஆண்டு நமது பிரதேசத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ள அணர்த்தத்தின் போது தற்போது பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் நமக்கு அதிகளவான நிவாரண உதவிகள் செய்ததை நாம் மறக்க முடியாது. அதனடிப்படையில் நமது பிரதேசம் தழுவியதாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெள்ள அனர்த்த நிவாரன நிதி…

Read More

சூடு வைக்கப்பட்ட சிறுமியின் அழுகுரல் (அவசியம் வாசியுங்கள்)

எனக்கு காயம் சுகமாகி நான் எப்போது வீடு போவேன்? இது காத்தான்குடியில் வளர்ப்புத்தாயினால் சூடு வைக்கப்பட்டு படுகாயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் எதிர்பார்ப்பு. சூடு வைக்கப்பட்டு படுகாயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காத்தான்குடி அப்துல் ஜவாத் ஆலீம் வீதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் இன்றுடன் பூர்த்தியாகின்றன. இந்த இரண்டு மாதங்களும் அந்த சூடு வைக்கப்பட்ட சிறுமியின் சூட்டுக் காயங்களுக்கு மருந்து போட்டு சிகிச்சைகள்…

Read More

காத்தான்குடியில் புதிய வர்த்தக சங்கம் உதயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் சிறப்பாக இயங்கிவரும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் அனுசரணையோடு காத்தான்குடி பிரதேசத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட வர்த்தக சங்கம் ஒன்று அமைக்கப்பட வேண்டிய தேவை தற்போது எல்லோராலும் உணரப்பட்டதன் நோக்காகக் கொண்டு புதிய வர்த்தக சங்கம் அமைப்பது தொடர்பான முதலாவது அங்குரார்ப்பண நிகழ்வு 06-05-2016 நேற்று வெள்ளிக்கிழமை இரவு காத்தான்குடி-01 மீரா பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது. காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தற்போதைய தலைவர் றஊப் ஏ மஜீத் ஜேபி…

Read More

இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் விமானி

– முகம்மத் பர்சாத் – புதிய காத்தான்குடியை சேர்ந்த லண்டனை வசிப்பிடமாக கொன்ட றீமா பாயிஸ் (Age 16) இலங்கையின் முதல் “முதல் முஸ்லிம் பெண் விமானியாகும்” முயற்சியில் முதல்கட்டமாக லண்டனில் பிரசித்திபெற்ற (சையில்  போர்ன்  கிளைடிங் கிளப்)ல் இனைந்து  ஒருவருட பயிற்சியை ஆரம்பித்துள்ளார். கடந்த கிழமை பறக்கும் விமானத்தில் 10000 அடி உயரத்தில் பரசூட் மூலம் குதித்து தனது சாதனையை ஆரம்பித்த றீமாபாயிஸ் தொடர்ச்சியாக பயிற்சியில் ஈடுபடுகிரார் நேற்று  சிறுவிமானத்தில் பறக்கும் பயிற்சியில் ஈடுபட்டார்… “முஸ்லிம் பெண் விமானியாக” எமது…

Read More

நான்கு வர்த்தக நிலையங்கள் உடைத்து திருட்டு.!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் இன்று (18)  அதிகாலை நான்கு வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளன. புதிய காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள மூன்று பல சரக்கு விற்பணை நிலையங்களும், ஒரு மென்பானம் விற்பனை செய்யும் வர்த்தக நிலையமும் உடைக்கப்பட்டு அங்கிருந்த பணம் மற்றும் பொருட்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்த வர்த்தக நிலையங்களுக்கு போடப்பட்டிருந்த பூட்டுக்கள் உடைக்கப்பட்டு இந்த கொள்ளைச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக இந்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளார்கள் காத்தான்குடி பொலிஸ்…

Read More

பிரத்தியேக வகுப்புக்களை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு வேண்டுகோள்

– எம்.ஐ.அப்துல் நஸார் – வெப்பாமான காலநிலை காரணமாக பிரத்தியேக வகுப்புக்களை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு புதிய காத்தான்குடி சிவில் பாதுகாப்புக் குழு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 167B புதிய காத்தான்குடி கிழக்கு கிராம சேவகர் பிரிவில் இயங்கிவரும் சிவில் பாதுகாப்புக் குழுவின் தலைவர் ஏ.எல்.முனீர் அஹமட் மற்றும் அதன் செயலாளர் திருமதி சில்மியா அன்சார் ஆகியோரால் கையொப்பமிடப்பட்டு 09.04.2016 திகதியிட்டு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் மூலமே இவ் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது….

Read More

மின்தடையால் ஏற்பட்ட வினை

மட்டக்களப்பு – காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடொன்றின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. நேற்று (13) நாடுபூராகவும் ஏற்பட்ட மின்தடையின் காரணமாக வெளிச்சத்திற்காக ஏற்றி வைக்கப்பட்ட மெழுகுவர்த்தியால் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மஞ்சந்தொடுவாய் தொழிநுட்ப கல்லூரி வீதியில் வசிக்கும் கோமலன் சுதா என்பவரின் வீட்டிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு சுமார் 9.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் வீட்டில் இருந்த கட்டில், அலுமாரி,…

Read More