Headlines

மது போதையில் வாகனம் செலுத்திய 254 சாரதிகள் கைது




கடந்த 24 மணித்தியாலங்களில் மது போதையில் வாகனம் செலுத்திய 254 சாரதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளாவிய ரீதியாக பொலிஸாரால் முன்னெடுக்கபட்டு வரும் சோதனை நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

கடந்த 10 ஆம் திகதி முதல் இதுவரையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 473 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களே அதிகமாக கைதுச்செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொலிஸாரால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *