Headlines

பருவகாலத்தில் அதிக வேக பாதையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சரிவு

பருவகாலத்தில் அதிக வேக பாதையை பயன்படுத்துவோரின் அளவு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடகுறைந்துள்ளமை காணக்கூடியதாகவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. சித்திரை புத்தாண்டின் பின்னர் அதிவேக பாதையில் ஏற்படக்கூடும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக  அதிவேக பாதையின் பராமரிப்பு நடவடிக்கைகள் தொடர்பான இயக்குனர் சமன் ஓபநாயக்க குறிப்பிட்டுள்ளார். சி.சி.டி.வி கெமராக்கள் உதவியுடன் அதிவேக பாதையில் குடிபோதையுடன் உள் நுழையும் சாரதிகளை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Read More

களனி கங்கையில் நீராடச்சென்ற சிறுவன் காணவில்லை

தொம்பே, கப்புகொடை அருகில் களனி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த 10 வயது பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். குறித்த சம்பவத்தில் காணாமல் போன சிறுவனை பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Read More

மது போதையில் வாகனம் செலுத்திய 254 சாரதிகள் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் மது போதையில் வாகனம் செலுத்திய 254 சாரதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடாளாவிய ரீதியாக பொலிஸாரால் முன்னெடுக்கபட்டு வரும் சோதனை நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன. கடந்த 10 ஆம் திகதி முதல் இதுவரையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 473 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களே அதிகமாக கைதுச்செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொலிஸாரால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

வாகன வீபத்தில் 11 பேர் காயம்

அவிசாவளை ரண்வல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றும் அதற்கு எதிர் திசையில் வந்துள்ள கார் ஒன்றும் மோதுண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது படு காயமடைந்துள்ள காரின் சாரதி அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read More

இலங்கைக்குள் மகினாமி மற்றும் சுசுனாமி

ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான மகினாமி மற்றும் சுசுனாமி என்ற இரு  கடற்படைக் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன. இரு நாட்டு கடற்படைகளுக்குமிடையிலான நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கில் அவை இலங்கையை வந்தடைந்துள்ளதாகவும் இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையில் தொழில்சார் நிபுணத்துவத்துவத்தை வளர்த்துக் கொள்வதற்காக கடற்படைப் பயிற்சிகளை நடத்துவதற்கும் தீர்மானித்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இவ்விரு கப்பல்களும் எதிர்வரும் 14 ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Read More

சுபீட்சமிக்க தேசத்தை கட்டியெழுப்புவதற்கு உறுதி கொள்வோம் : ஜனாதிபதி வாழ்த்து

நற்குணங்களை மேலோங்கச் செய்யும் புத்தாண்டாக அமைய மனமார பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாந்தியும் சமாதானமும் நிறைந்த சுபீட்சமிக்க தேசத்தை கட்டியெழுப்புவதற்கு உறுதி கொள்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Read More

மாட்டுவண்டி சவாரி மற்றும் யானை சவாரிக்கு தடை

சித்திரை புதுவருட கொண்டாட்ட நிகழ்வுகளின்போது மாட்டுவண்டி சவாரி போட்டி மற்றும் யானை சவாரி போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மிருக வதையை தடுக்கும் வகையில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ள சுற்று நிரூபத்தின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read More

குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி

தென்மாகாணத்தில் பல பகுதிகளில் பொதுமக்கள் குடிநீர் பற்றாக்குறையை ஏதிர்நோக்கியுள்ளது. காலி, ஹம்பாந்தோட்டை, கதிர்காமம், திஸ்ஸமகாராம, தனமல்வில, செல்லக்கதிர்காமம் ஆகிய பகுதிகளில் பாரிய குடிநீர் பற்றாக்குறையால் புத்தாண்டு தினத்திலும் தமது அன்றாட பணிகளை நிறைவு செய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

Read More