Headlines

எரிவாயு கசிவால் வீடு முற்றாக எரிந்து நாசம்




ராஜகிரிய – நாவல பகுதியில் எரிவாயு கசிவு காரணமான வீடு தீப்பற்றிய சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீட்டில் பரவிய தீயை கோட்டை மாநகர சபையின் தீயனைப்பு பிரிவினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

திடீரென ஏற்பட்ட தீ காரணமாக உயிர் ஆபத்துக்கள் ஏற்படவில்லை எனவும், வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *