Headlines

மலேரியாவை பரப்ப இந்தியா சதி : மருத்துவ அதிகாரிகள் குற்றச்சாட்டு

இலங்கையில் சுமார் 40 வருடங்களாக மலேரியா நோய் காணப்படவில்லை. ஆனால் தற்போது நுவரெலியாவில் இந்தியர் ஒருவர் மலேரியா நோயுடன் இனம்காணப்பட்டுள்ளார். மலேரியா நோய் இல்லாத நாடாக காணப்பட்ட இலங்கையில் மலேரியாவை பரப்புவதற்கு இந்தியா சதித் திட்டம் செய்துள்ளது என இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

Read More

காக்கைதீவு கடற்கரைப்பூங்கா திறந்து வைப்பு

கொழும்பு வடக்கில்  275 மில்லியன் ரூபா செலவில் மீள்நிர்மாணிக்கப்பட்ட காக்கைதீவு கடற்கரைப்பூங்கா கடந்த சனிக்கிழமை பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இதனை அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், ரவி கருணாநாயக்க மற்றும் கொழும்பு மாநகர சபை முதல்வர் முஸம்மில் ஆகியோர் திறந்து வைத்தனர். 7.5 ஹெடேயர் பரப்பளவைக் கொண்ட காக்கைதீவு கடற்கரைப்பூங்கா, 275 மில்லியன் ரூபா செலவில் மீள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சிறுவர் பூங்கா, 24 கடைகள் மற்றும் ரெஸ்டுரட் வசதிகளையும் கொண்டமைந்த இக் கடற்கரைப்பூங்கா வெளிநாட்டு…

Read More

தொடர்ச்சியாக எட்டு வாகனங்களை முட்டித்தள்ளிய பஸ்!

அவிசாவளையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று எட்டு வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பஸ்சில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்து இரண்டு லொறிகள், கார், முச்சக்கர வண்டி மற்றும் வேன் போன்ற வாகனங்களுடன் தொடர்ச்சியாக மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த விபத்தின் காரணமாக கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் காயமடைந்த மூவர் சிகிச்சைகளுக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்…

Read More

சிறிதுகாலம் பொறுத்திருங்கள் – ரவி கருணாநாயக்க

நல்லாட்சியை  வழங்கிய மக்கள் இன்னும் சிறிது காலம் பொறுத்திருங்கள் நீங்கள் எதிர்பார்த்த  வசந்த காலம் வரும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். 7.5 ஹெடேயர் பரப்பளவைக் கொண்ட காக்கைதீவு கடற்கரைப்பூங்கா, 275 மில்லியன் ரூபா செலவில் மீள் நிர்மாணிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை திறந்து வைக்கபட்டது. இதனை அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், ரவி கருணாநாயக்க மற்றும் கொழும்பு மாநகர சபை முதல்வர் முஸம்மில் ஆகியோர் திறந்து வைத்தனர். இதன்போது பேசுகையிலேயே நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க மேற்கண்டவாறு…

Read More

இலக்கு இல்லாதவர்களின் பயணம் வெற்றி அளிக்காது – அமீர் அலி

– வாழைச்சேனை நிருபர் – இலக்கு இல்லாதவர்களின் பயணம் வெற்றி அளிக்காது, இந்தப் பயிற்சியினை பெறும் மாணவர்கள் உயர்ந்த இலக்கினைக்கொண்டு செயற்படுவது மகிழ்ச்சியான விடயமாகும்.என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ் அமீர் அலி  தெரிவித்தார். நேற்று (10) மாலை மீராவோடை சைபுல்லாஹ் தற்காப்புக் கலைக் கழகத்தின் காரியாலய திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்தப்பிரதேசத்தின் ஆண் மாணவர்கள், இளைஞர்கள் திட்டமிட்டு போதைவஸ்துப்பாவனைக்கு…

Read More

றிஷாத் பதியுதீனை குறிவைக்கும் இனவாத இயக்கங்கள்

மஹிந்த அரசாங்கத்தைவிட்டு றிஷாத் பதியுதீன் வெளியேறியதனாலேயே பொதுபலா சேனா போன்ற இயக்கங்கள் அவரைத் தொடர்ச்சியாகத் தாக்கி வருகின்றன. மஹிந்த ராஜபக்சவுடன் அமைச்சர் றிசாத் இருந்திருந்தால், அவரை நல்லவர் என்று கூறியிருப்பார்கள். இவ்வாறு வடக்கு, கிழக்கு பிரதான சங்க சபா தலைவர் சியம்பலாகஸ்வெவ விமலசார தேரர் கூறினார். வவுனியா மகா போதியில் தேரரின் தலைமையிலான பௌத்த தூதுக் குழுவினரை, அமைச்சர் றிசாத் சந்தித்து கலந்துரையாடியபோது அவர் இவ்வாறு கூறினார். இந்த சந்திப்பின்போது வவுனியா, உளுக்குளம் ஸ்ரீ சுமணராப்பதி, சுமணதிஸ்ஸ…

Read More

பிரத்தியேக வகுப்புக்களை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு வேண்டுகோள்

– எம்.ஐ.அப்துல் நஸார் – வெப்பாமான காலநிலை காரணமாக பிரத்தியேக வகுப்புக்களை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு புதிய காத்தான்குடி சிவில் பாதுகாப்புக் குழு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 167B புதிய காத்தான்குடி கிழக்கு கிராம சேவகர் பிரிவில் இயங்கிவரும் சிவில் பாதுகாப்புக் குழுவின் தலைவர் ஏ.எல்.முனீர் அஹமட் மற்றும் அதன் செயலாளர் திருமதி சில்மியா அன்சார் ஆகியோரால் கையொப்பமிடப்பட்டு 09.04.2016 திகதியிட்டு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் மூலமே இவ் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது….

Read More

ஹிட்லருக்கு ஆதரவாக டுவிட் செய்த பெண் சஸ்பெண்ட்

இங்கிலாந்து ஹிட்லருக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து பதிவிட்ட பெண்கள் தொழிலாளர் கவுன்சிலர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் லூடன் பகுதி கவுன்சிலர் ஆய்செகல் குர்பஸ் என்பவர் தனது டுவிட்டர் வலைதளத்தில் ஹிட்லர் வரலாற்றில் சிறந்த மனிதர் என்று கருத்து பதிவு செய்திருந்தார். அதேபோல், உலக வரைபடத்தில் இருந்து ஈராக் நாட்டை துடைத்து எரிய ஈரான் நாட்டால் அணு ஆயுதங்களை உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற கருத்திற்கு ஆதரவும் தெரிவித்திருந்தார். குர்பஸ், லூடனின் மிகவும் இளம் கவுன்சிலர். மேலும்,…

Read More

கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 25 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்ப்பிக்கப்படவுள்ளதாக திருகோணமலை வளாக முதல்வர் வல்லிபுரம் கனகசிங்கம் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள மாணவர்கள் எதிர்வரும் 24 ஆம் திகதி தங்களின் விடுதிக்கு சமூகமளிக்க முடியும் எனவும், திருகோணமலை வளாகத்தில் இரு மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான ஒழுக்காற்று குழுவின் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய விசாரணை அறிக்கை…

Read More

பதவி வெற்றிடம்

நாடு முழுவதும் 1800 குடும்ப நல சுகாதார அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வெற்றிடங்களை நிரப்பும் வகையில் முதல் கட்டமாக 750 பேரை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் கண்காணிப்பு மற்றும் பயிற்சிப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சுனில் டி அல்விஸ் குறிப்பிட்டுள்ளார். இதுவரை விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்ற மாணவர்கள் மாத்திரமே சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும், எதிர்வரும் காலங்களில் ஏனைய பிரிவுகளில் கற்கைநெறியை பூர்த்தி செய்தவர்களும்…

Read More

கடுவலை சுது கைது

பாதாள உலக தலைவர் கடுவலை வசந்த என அழைக்கப்படும் பல கொலைகளுடன் தொடர்புடைய நபர் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளார். கடுவலை சுது என அழைக்கப்படும் பெல்லகே சுதத் கித்சிறி என்ற பாதாள உலக தலைவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடுவலை கொத்தலாவல, பங்களாவத்தை பிரசேத்தில் வைத்து பேலியகொடை குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரினால், இவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

Read More

எரிவாயு கசிவால் வீடு முற்றாக எரிந்து நாசம்

ராஜகிரிய – நாவல பகுதியில் எரிவாயு கசிவு காரணமான வீடு தீப்பற்றிய சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டில் பரவிய தீயை கோட்டை மாநகர சபையின் தீயனைப்பு பிரிவினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். திடீரென ஏற்பட்ட தீ காரணமாக உயிர் ஆபத்துக்கள் ஏற்படவில்லை எனவும், வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More