Headlines

யாழில் இந்திய மீனவர்கள் கைது




இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் இராமேஸ்வரத்தை சேர்ந்த குறித்த நான்கு மீனவர்களும் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட வேளை ரோந்துப் பணியில்  ஈடுபட்டுக் கொண்டிருந்த காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் இவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய ஒரு இழுவைப் படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று(05) யாழ். கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதுடன் அவர்களை ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் யாழ்மாவட்ட பணிப்பாளர் ரமேஸ் கண்ணா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *