Headlines

தீவுப் பாடசாலை மாணவர்களுக்கு உதைபந்தாட்ட பயிற்சி!

இலங்கை கடற்படையின் வடக்கு கடற்படை கட்டளையகத்தினால் யாழ் குடா தீவுப் பகுதி பாடசாலை மாணவர்களுக்கு காங்கேசன்துறை பிரதேசத்தில் இரண்டாம் கட்டமாக உதைபந்தாட்ட பயிற்சியொன்று அண்மையில் (25) நடாத்தப்பட்டது. இச்செயற்றிட்டம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்தர விஜேகுணவர்தனவின் வழிகாட்டலின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. மேற்படி உதைபந்தாட்ட பயிற்சியின் ஒரு கட்டமாக அண்மையில் (27) மண்டை தீவில் அமைந்துள்ள வெலுசுமன கடற்படை முகாமில் நயினாதீவு மற்றும் மண்டை தீவு அணிகளுக்கிடையிலான உதைப்பந்தாட்டபோட்டி நடைபெற்றது. மேற்படி போட்டிகளின் மூலம் தேசிய மட்டத்தில்…

Read More

யாழில் இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் இராமேஸ்வரத்தை சேர்ந்த குறித்த நான்கு மீனவர்களும் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட வேளை ரோந்துப் பணியில்  ஈடுபட்டுக் கொண்டிருந்த காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் இவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய ஒரு இழுவைப் படகும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று(05) யாழ். கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதுடன் அவர்களை ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக…

Read More