Headlines

தம்மிக்க ரணதுங்க தம்மிக்க ரணதுங்க நிலையத்தில் ஆஜர்

இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிக்க ரணதுங்க வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார். சட்டத்தரணியுடன் சென்ற அவர் எதிர்வரும் 24 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுவதாக அறிவிப்பதற்காக அங்கு சென்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. துறைமுக அதிகார சபையின் தலைவர் தம்மிக்க ரணதுங்க, அண்மையில் நீதிமன்றத்திற்கு வெளியில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியதுடன் அவர்களை செல்போனில் படம் பிடித்தார். இது குறித்து ஊடகவியலாளர்கள் வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். இதனையடுத்து பொலிஸ் இது குறித்து…

Read More

ஜாஎல பிரதேசத்தில் மின்மாற்றி வெடிப்பு

சற்று நேரத்திற்கு முன்னர் ஜாஎல – கொட்டுகொடை பிரதேசத்தில் உள்ள மின்மாற்றி ஒன்று வெடித்து தீப்பற்றியுள்ளதாக தெரிய வந்துள்ளது. கொட்டுகொடை பிரதேசத்தில் உள்ள உப மின் நிலையத்திலேயே இவ்வாறு தீப்பற்றியுள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் அபிவிருத்திப் பணிப்பாளர் சுலக்ஷனா ஜயவர்தன தெரிவித்தார். 

Read More

பிள்ளையானுக்கு பிணை மறுப்பு

– ஜவ்பர்கான் – முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் ஏப்ரல் 1ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிபதி உத்தரவிட்டுள்ளது. கடந்த 2005.12.25 ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவந்தமை  குறிப்பிடத்தக்கது.

Read More

விமல் வீரவன்ச பிணையில் விடுதலை

கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உட்பட 7 பேரை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. விமல் வீரவன்ச, வீரகுமார திசாநாயக்க, ஜயந்த சமரவீர, மொஹமட் முசம்மில், ரோஜர் செனவிரத்ன, பியசிறி விஜேயநாயக்க உள்ளிட்ட 07 பேர்களை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான்…

Read More

ஆறாவது ஆசிய அபிவிருத்தி மாநாடு கொழும்பில் ஆரம்பம்

ஆறாவது ஆசிய அபிவிருத்தி மாநாடு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதி தலைவர் பெம்பெக் சுசன்டோனோ ஆகியோர் தலைமையில், இன்று வெள்ளிக்கிழமை சினமன் லேக்சைட் ஹோட்டலில் ஆரம்பமாகியுள்ளது.. இலங்கை அரசின் உதவியுடன் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதி தலைவர் பெம்பென்க் சுசன்டோனோ ஆரம்ப உரையாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளின் ஆலோசனையின் பேரில் 2010ம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி மாநாடானது ஆரம்பமாகியது. கடந்த மாநாடனது கொரியா, ஜப்பான், தாய்லாந்து…

Read More

சபாநாயகர் சாம்பியா பயணம்

அனைத்து பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துக் கொள்வதற்காக சபாநாயகர் கருஜயசூரிய சாம்பியா நாட்டை நோக்கி பயணமாகியுள்ளார். சாம்பியாவின் லுலகா நகரில் இடம்பெறும் இந்தக் கூட்டத்தொடரானது 167வது கூட்டத் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்க 167 நாடுகளைச் சேர்ந்த சபாநாயகர்கள் உட்பட 2000 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கையிலிருந்து சபாநாயகர் கருஜயசூரியவுடன் இராஜங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க,பிரதி அமைச்சர் சுதர்சினி பெர்னான்டோபுள்ளே, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான்,கே.கோடீஸ்வரன், பாராளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்க…

Read More

இன்று முதல் கரையோர ரயில் சேவைகளில் தாமதம்

கரையோர பகுதிகளுக்கான ரயில் சேவைகள் இன்றிரவு 8 மணி முதல் தாமதமாகுமென ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது. கொழும்பு வெள்ளவத்தையினூடான ரயில் பாதையிலுள்ள பாலம் புனரமைக்கப்படுவதால் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்படக்கூடும் எனவும் இன்றிரவு 8 மணி முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி மாலை 4.30 வரை கொழும்பு கோட்டையிலிருந்து கல்கிஸ்ஸை வரையும் ஒரு பாதையிலான ரயில் சேவை மாத்திரமே முன்னெடுக்கப்படும் எனவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், தூர இடங்களுக்கான ரயில் சேவைகளை…

Read More

எனது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது; மஹிந்த

தான் ஆட்சிக்கு வரும்போது நாடு உணவு நெருக்கடி, சுனாமி பேரழிவு, எண்ணெய் நெருக்கடி மற்றும் பயங்கரவாத நெருக்கடி ஆகியவற்றிற்கு முகங்கொடுத்திருந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். நேற்று (17) கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சிகளின் மக்கள் பேரணியின் போது அவர் இதனைக் கூறியுள்ளார். அவ்வாறான ஒரு நிலையிலும் கூட, சர்வதேச நாடுகளில் தங்கி வாழ்வதை தவிர்த்து நாட்டை அரிசியில் அபிவிருத்தி செய்வதற்கு மற்றும் விடுதலைப் புலிகளை இல்லாதொழிப்பதற்கு முடிந்ததாகவும், மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை…

Read More

என்னை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்காவிட்டால் கலவரங்கள் ஏற்படலாம் – ட்ரம்ப்

ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகக் குடி­ய­ரசுக் கட்சி தன்னை நிய­மிக்­கா­விட்டால், கல­வ­ரங்கள் ஏற்­ப­டலாம் என்று தாம் நினைப்­பதா­க டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்­துள்ளார். குடி­ய­ர­சு­ கட்சி சார்பில் ஜனா­தி­பதி வேட்­பாளர் தேர்­தலில் முன்­னணி­யி­லி­ருக்கும் டொனால்ட் ட்ரம்பின் கடு­மை­யான வார்த்தை பிர­யோ­கங்­களால் குடி­ய­ரசுக் கட்சி, அதன் பேர­வையில் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக மற்­றொ­ரு­வரை முன்­மொ­ழிய வாய்ப்­பி­ருப்­ப­தாகக் கூறப்­ப­டு­கி­றது. ஜன­நா­யகக் கட்­சியைப் பொறுத்­த­வரை ஹிலாரி கிளிண்டன் தொடர்ந்து முன்­ன­ணியில் உள்ளார். அமெ­ரிக்க  ஜனா­தி­பதி தேர்தல் எதிர்­வரும் நவம்பர் மாதம் 8 ஆம்  திகதி நடை­பெ­ற­வுள்ள நிலையில் ஜனா­தி­பதி…

Read More

“வேர்ல்ட் எக்ஸ்போ” 2017 கண்காட்சியில் இலங்கை

கசகஸ்தான் நாட்டின் அஸ்தானா நகரில் நடைபெறவுள்ள “வேர்ல்ட் எக்ஸ்போ” 2017 கண்காட்சியில் நமது நாடும் பங்குபற்றி சிறந்த வௌிக்காட்டல்களை வழங்கவுள்ளது என பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை உப பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டில் நேற்று (17) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். அவ்வகையில் 2017 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 10…

Read More

காசநோயினால் வருடத்துக்கு 14 ஆயிரம் பேர் பாதிப்பு

உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் அறிக்­கையின் பிர­காரம் வரு­ட­மொன்­றுக்கு உல­க­ளவில் 5 இலட்சம் பேர் காச நோயினால் உயி­ரி­ழப்­ப­தோடு இலங்­கையை பொறுத்­த­வரை ஒரு வரு­டத்­திற்கு மாத்­திரம் 14 ஆயிரம் பேர் இந்­நோ­யினால் பாதிக்­கப்­ப­டு­வ­தாக இனங்­காணப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார கல்வி பணி­யகம் தெரிவித்­தது. மக்கள் மத்­தியில் இந்நோய் தொடர்பில் எவ்­வ­ளவு தூரம் தெளிவின்மை காணப்­ப­டு­கின்­றதோ அந்­த­ளவில் இந்­நோ­யினால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­களின் எண்­ணிக்­கை­யினை குறைத்து காச நோயினை எமது நாட்டில் முற்று முழு­வ­து­மாக கட்­டுப்­ப­டுத்த முடியும் எனவும் தெளிவு­ப­டுத்­தி­யது. இம்­மாதம் 24ஆம் திகதி உலக…

Read More

வடகொரியா பிரஜைகளை விடுவிக்குமாறு இலங்கையிடம் கோரிக்கை

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது நாட்டுப் பிரஜைகளை விடுவிக்குமாறு வடகொரியா கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் அமைந்துள்ள வடகொரிய தூதரகம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது. 150,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த போது வடகொரியப் பிரஜைகளை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்திருந்தனர். இந்த வடகொரியர்கள் ஓமானிலிருந்து சீனா நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையின் சட்டத்தின் பிரகாரம் 10,000 அமெரிக்க டாலர்களுக்கு அதிகமாக எடுத்துச் செல்ல வேண்டுமாயின் அதற்கான உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்…

Read More