Headlines

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள்: கால எல்லை நீடிப்பு

மண்சரிவு, வெள்ளம் மற்றும் சாலாவ வெடிப்புச் சம்பவம் ஆகிய அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களின் மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்களை செலுத்துவதற்கான காலத்தை இரண்டு மாதங்களாக நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, வாகனங்களை குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்தவர்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை வங்கிகளில் கடன் பெற்றுள்ளவர்களும் தமது தவணைக் கட்டணங்களை இரண்டு மாதங்கள் காலம் தாமதமாகி செலுத்தலாம். இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் தமது மின்சார மற்றும் தண்ணீர்…

Read More

பல பிரதேசங்களில் மின்சாரம் தடை

தென் மற்றும் சப்ரகமுவ மாகணங்களில் பல பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டதாக   இலங்கை மின்சார சபை தெரிவித்தது. குறித்த மின் தடையானது  சுமார் 40 நிமிடங்கள்  நீடித்துள்ளது. லக்ஷபான  மின் விநியோக பாதையில் மரமொன்று சரிந்து வீழ்ந்ததிலேயே மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், சுமார் 40 நிமிடங்களின் பின்னர் மின்சாரம் மீண்டும் வழமை  நிலைக்கு திரும்பியுள்ளது.

Read More

கொழும்பில் மின் தடை!

கொழும்பு நகருக்கு மின் விநியோகத்தை வழங்கும் இரு மின் நிலையங்களின் இணைப்பில்  புதிதாக மாற்றம் செய்ய இருப்பதால் கொழும்பு நகரில் மின் தடை ஏற்படலாம் என மின்சார சபை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை காலமும் கொழும்பு நகருக்கு ஒரு இணைப்பின் ஊடாகவே மின்சாரம் வழங்கப்படுகின்றது. இந்த இணைப்பில் திருத்தம் மேற்கொள்ளும் போது மின் தடை ஏற்படலாம்  என மின்சார சபை ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.

Read More

2018 இல் மின்சார பற்றாக்குறை

இலங்கையில் 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மின்சார நெருக்கடி ஏற்படக்கூடும் என மின்சாரத்துறை பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

Read More

மின்னுயர்த்திக்குள் சிக்கிக்கொண்ட யுவதி

மின்­சாரம் தடைப்­பட்­ட­தனால் மின்­னு­யர்த்­திக்குள் சிக்­கிக்­கொண்ட யுவ­தி­யொ­ருவர் 45 நிமி­டங்­க­ளுக்குப் பின்னர் உயி­ருடன் மீட்­கப்­பட்ட சம்­பவம் கொழும்பு- 02, கொம்­பனி வீதியில் இடம்­பெற்­றுள்­ளது. கொம்­பனி வீதியில் உள்ள புகை­யி­ரத வீட­மைப்பு தொகு­தியில் வசிக்கும் யுவ­தியே இவ்­வாறு மீட்­கப்பட்டவராவார். குறித்த யுவதி, மின்­னு­யர்த்­தியின் மூல­மாக ஏழா­வது மாடி­யி­லி­ருந்து, கீழே வந்­து­கொண்­டி­ருந்­த­போதே, திடீ­ரென மின்­சாரம் தடைப்­பட்­டதால் இடை­ந­டுவில் சிக்­கிக்­கொண்­டுள்ளார். இந்த சம்­பவம் தொடர்பில், தீய­ணைப்பு சேவை திணைக்­க­ளத்­துக்கு அறி­விக்­கப்­பட்­ட­ தை­ய­டுத்து விரைந்து செயற்­பட்ட தீய­ணைப்பு பிரி­வினர், அந்த யுவ­தியை மீட்­டுள்­ளனர். மின்­னு­யர்த்­தி­யா­னது…

Read More

புத்தாண்டு காலத்தில் தடையின்றி மின்சார விநியோகம்!

தமிழ் சிங்கள புத்தாண்டு காலப் பகுதியில் இடையறாது மின்சாரம் விநியோகம்செய்யப்படும் என பிரதி மின்வலு அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (12) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத்தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், புத்தாண்டு காலத்தில் மின்சார விநியோகத்தை துண்டிக்க எவ்வித அவசியமும்கிடையாது. மின்சார விநியோகம் செய்யும் பகுதியில் தொழில் நுட்ப கோளாறு ஏற்படாது எனநம்புகின்றோம். புத்தாண்டு காலத்தில் பாரியளவிலான கைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதனால்மின் தேவை வீழ்ச்சியடையும் என அவர் தெரிவித்துள்ளார்.

Read More

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் மின் கசிவு

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாவது கட்டிடத்தில் மின் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் மின் வழங்கலில் நெருக்கடி நிலைமை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள குழாய் ஒன்றில் ஏற்பட்ட மின் கசிவே இந்த நெருக்கடி நிலைக்கு காரணம் என இலங்கை மின்சார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் மின்வழங்கலில் தடை எதுவும் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இந்த மின் கசிவை சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை மின்…

Read More

மின்சார நெருக்கடியை ஏற்படுத்த சிலர் முயற்சி

திட்டமிட்டு நீர் மட்டத்தைக் குறைத்து நீர்மின் உற்பத்தியில் நெருக்கடி நிலையை ஏற்படுத்த மின்சார சபையில் உள்ள சிலர் முயற்சிகளை மேற்கொள்வதாக பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் மின்சார நெருக்கடி தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். மின்சாரக் கட்டமைப்பில் சமநிலையைக் குழப்பி மின் நெருக்கடியை தோற்றுவிக்க மின்சார சபையில் உள்ள சிலர்…

Read More

கட்டணத்தைக் குறைத்தால் இலவச மின்சாரம்

மின் கட்டணத்தைக் குறைத்துக்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு ‘மின்சாரப் பரிசு’ வழங்கும் வேலைத்திட்டமொன்றை, இலங்கை மின்சார சபை ஆரம்பித்துள்ளது. கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட மின்வலுத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ‘கடந்த ஜனவரி மாதம் முதல் மின் கட்டணத்தைக் குறைத்துக்கொண்டவர்களும் இந்த போட்டியில் உள்ளடக்கப்படுவார்கள்’ என்று கூறினார். இந்தப் போட்டியில் வெற்றிபெறும் வாடிக்கையாளர்களுக்கு, எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இலவசமாக மின்சாரம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Read More

பம்பலபிட்டி மின்மாற்றியில் தீ : தொடரும் மர்மம்

பம்பலபிட்டி  லோரிஸ் வீதியிற்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருக்கும் மின்மாற்றியில் இன்று (29)  காலை திடீரென தீப்பிடித்துள்ளது. தீயிற்கான காரணம் இதுவரையும்  கண்டறியப்படவில்லை.

Read More

ஜாஎல பிரதேசத்தில் மின்மாற்றி வெடிப்பு

சற்று நேரத்திற்கு முன்னர் ஜாஎல – கொட்டுகொடை பிரதேசத்தில் உள்ள மின்மாற்றி ஒன்று வெடித்து தீப்பற்றியுள்ளதாக தெரிய வந்துள்ளது. கொட்டுகொடை பிரதேசத்தில் உள்ள உப மின் நிலையத்திலேயே இவ்வாறு தீப்பற்றியுள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் அபிவிருத்திப் பணிப்பாளர் சுலக்ஷனா ஜயவர்தன தெரிவித்தார். 

Read More

மின்சார விநியோகத் தடை இனி இல்லை!- பிரதியமைச்சர் அஜித் பெரேரா

நுரைச்சோலை அனல் மின்சார மைய திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளமையால் இனிமேல் மின்சார விநியோக தடையிருக்காது என்று மின்சக்தித்துறை பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி நுரைச்சோலையில் இருந்து முழுமையான 900 மெகாவோட்ஸ் மின்சார அலகையும் நேற்று நள்ளிரவுடன் தேசிய மின்சார விநியோகத்துக்கு வழங்கக்கூடியதாக இருக்கும் என்று அவர் நேற்று மாலை வெளியிட்ட தகவல் ஒன்றில் தெரிவிக்கிறார். எனவே அமைச்சரின் கருத்துப்படி இன்று முதல் மின்சார விநியோகத்தடை இருக்காது என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேவேளை நாட்டின் மின்சார…

Read More