Headlines

கொழும்பில் 16 மணித்தியாலங்கள் நீர்வெட்டு

கலட்டுவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் கொழும்பில் சில பகுதிகளில் 16 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய ஹங்வெல்ல, மீபே, பாதுக்க, ஹோமாகம, கொட்டாவ, கலு அக்கல, ருக்மல்கம, பெலவத்த, கொடகம, பன்னிப்பிட்டிய, மத்தேகொட ஆகிய பகுதிகளிலேயே நாளை (20) பிற்பகல் 01 மணி முதல் மறுநாள் 21 ஆம் திகதி வரையிலான 16 மணித்தியாலங்கள் குறித்த நீர் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது….

Read More

ஹோமாகம நீதவான் நீதிமன்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

ஹோமாகம நீதவான் நீதிமன்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும்,நீர் நிரப்பப்பட்ட பௌசர் வாகனம் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் நேற்றைய (15) தினம் ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த 4 பிக்குமாறும் இன்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த இருப்பதாலேயே இங்கு பாதுபாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த நான்கு பிக்குகளையும் இன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு ஹோமாகம மஜிஸ்ட்ரேட் நீதவான் ரங்க திஸாநாயக்க நேற்று…

Read More

சரணடைந்த பிக்குகள் அடையாள அணிவகுப்பு

ஹோமாகம பொலிஸில்  சரணடைந்த நான்கு பிக்குகளையும் இன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட போது, நீதிமன்ற வளாகத்தில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் பல தேரர்களுக்கு ஹோமாகம நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. இந்தவகையில், ராவணா பலய அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்தாகந்தே சத்தாதிஸ்ஸ, சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன, மெதிரிகிரிய புஞ்ஞாசார மற்றும் பஸ்ஸர நந்தஜீவ…

Read More

இன்று நீதிமன்றத்தில் ஞானசார தேரர்

ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக பொதுபல சேனா அமைப்பின் பிரதான பொதுச் செயலாளர் கலகொட ஞானசார தேரர், இன்று (16) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். நீதிமன்றத்தை அவமதித்த சம்பவம் தொடர்பாக கடந்த 9 ஆம் திகதி பிணை வழங்கபட்ட போதிலும், அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக மீண்டும் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

இரண்டு பேருக்கு மரண தண்டனை விதிப்பு

கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் இரண்டு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டு இரத்தினபுரி, மன்ததெனிய பிரதேச நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பான வழக்கு 17 வருடமாக  இடம்பெற்று வந்த நிலையில் இரத்தினபுரி மேல் நீதிமன்றம் நேற்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஹோமாகம மற்றும் அநுராதபுரம் பகுதிகளை சேர்ந்த இருவருக்கே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Read More

ஞானசார தேரருக்கு பிணை

ஹோமாகம நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்ப்பட்ட ஞானசார தேரரின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேற்று (10) ஞானசார தேரர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இரண்டு லட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் அவரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

Read More

ஞானசார தேரர், நீதிமன்றில் ஆஜர்படுத்த தயார்

நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். நீதிமன்றத்துக்கு அண்மையில் உள்ள இரண்டு வீதிகள், இரும்பு கம்பிகளான தடைகள் போட்டு மறிக்கப்பட்டுள்ளன. வழக்கு விசாரணைக்களுக்கு வருகைதந்தவர்களை தவிர, வேறு எவரும் நீதிமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனம் தயாராக வைக்கப்பட்டுள்ளதுடன்  கலகம் அடக்கும் பொலிஸாரும் உஷாராக வைக்கப்பட்டுள்ளனர். பட உதவி: லங்காதீப

Read More

சிங்கள ராவய பிக்குகள் மஹர சிறைக்கு மாற்றம்

அண்மையில் ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்க மறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சிங்கள ராவய அமைப்பின் இரண்டு பௌத்த பிக்குகளும் மஹர சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இடப் பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இவ்வாறு மஹர சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் மற்றும் படல்கும்புரே ஆரியசாந்த ஆகிய தேரர்களே கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலையிலிருந்து மஹர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலையில்…

Read More

சிங்கள ராவய அமைப்பின் செயலாளருக்கும் விளக்கமறியல்

பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஹோமாகம நீதிமன்றத்தில் குழப்பம் விளைவித்த தினத்தில் (26), அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நீதிமன்ற நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்படுத்திய சந்தேக நபர்களான பிக்குகள் இருவர் நேற்று (01) ஹோமாகம பொலிஸில் சரணடைந்தனர்.   குறித்த இருவரில், சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்த சுதத்த தேரரும் ஒருவராவார்.குறித்த இருவரையும் வரும் ஒன்பதாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More

ஹோமாகம நீதிமன்றின் முன் ஆர்பாட்டம் செய்த மூன்று பேர் கைது

ஹோமாகம நீதிமன்றத்தில் நுழைந்து நீதிமன்றை அவமதிக்கும் வித்தில் நடந்துகொண்ட ஞானசார தேரர்  அக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அன்றையதினம் (25) நீதிமன்றின் முன்னால் அத்துமீறிய செயற்பாடுகளில் ஈடுபட்டோரை கைது செய்து அடுத்த வழக்கு தினத்தில் மன்றில் சமர்ப்பிக்குமாறு ஹோமாகம நீதிமன்றம் நேற்று (27) உத்தரவிட்டிருந்து. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் முச்சக்கர வண்டி சாரதி உட்பட மூவர் இன்று (28) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

ஞானசார தேரர் சற்றுமுன்னர் கைது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னளியகொடவின் மனைவிக்கு நீதிமன்றில் வைத்து அச்சுறுத்தியது, ஏசியது ஆகிய  குற்றச்சாட்டுகளில் ஹோமாகம நீதிமன்றால் நேற்று (25) பிடியாணை உத்தரவு பிடிக்கபட்டு இன்று காலை 10.00 மணியளவில் ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் சரணடைந்த நிலையில், அவர் கைது செய்யபட்டுள்ளதாக போலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. தற்போது கைது செய்யபட்டு போலிஸ் காவலில் இருக்கும்  ஞானசார தேரர் இன்று ஹோமாகம நீதிமன்றில் ஆஜர் படுததபடுவார் எனவும் போலிஸ் ஊடகப்பிரிவு மேலும்…

Read More

(ஹோமாகம) பாடசாலை உட்கட்டமைப்பை பார்வை

ஹோமாகமவில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷ தேசிய பாடசாலையின் அமைப்புப் பணிகளை கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் பார்வையிட்டுள்ளார்.முன்னாள் அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பந்துல குணவர்தனவின் அழைப்பின் பேரில் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு சென்றார். அமைச்சராக இருந்தபோது பந்துல குணவர்தன அவர்கள் இந்த பாடசாலையினை இங்கு உருவாக்கினார்.இந்த பாடசாலையில் உட்கட்டமைப்பு வசதிகளை கண்டறியவருமாறு,இவ்வாறான அமைப்பு ரீதியான பாடசாலைகளை கிராமப் புறங்களிலும் உருவாக்குவதன் அவசியத்தை முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இதன் போது விளக்கமளித்தார்.

Read More