Headlines

பர்தா அணியக் கூடாது என, சட்டம் கொண்டுவந்த அரசு மண் கவ்வியது

கனடா பொதுத் தேர்தலில்; கடந்த ஒரு தசாப்தமாக நீடி த்த கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்திருப்ப தோடு லிபரல் கட்சி வெற்றி யீட்டியுள்ளது. இதன்மூலம் கனடாவின் முன்னாள் பிரதமர் பியெர் ட்ருதாவின் மகனும் லிபரல் கட்சி தலைவருமான ஜஸ்டின் ட்ருதா அந்நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பே ற்கவுள்ளார். கடந்த திங்கட்கிழமை நடை பெற்ற தேர்தலில் லிபரல் கட்சி 188 தேர்தல் மாவட்டங்களில் முன்னிலையில் இருந்தது. மொத் தமுள்ள 338 தேர்தல் மாவட் டங்களில் ஆட்சி அமைக்க…

Read More

மஹிந்தவை புகழ்ந்து பேசுவதற்கு, நான் எப்போதும் தயார் – ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தான் புகழ்ந்து பேசுவதை ஐ.ம.சு.மு. வினால் பொறுத்துக்கொள்ள முடியாமலிருப்பது ஆச்சரியமளிப்பதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மகிந்தவை புகழ்ந்து பேசுவதற்கு தான் எப்போதும் தயாராகவிருப்பதாகவும் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று (20)  செவ்வாய்க்கிழமை தனது ஜப்பான் விஜயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விளக்கமளித்தார். இதன்போது அவர், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜப்பான் நீதிபதியான மொடோ றகூசியை அழைத்திருந்ததை ஜப்பானின் பிரதமர்…

Read More

கடிகாரம் செய்து கைதான, முஸ்லிம் மாணவர் ஒபாமாவுடன் சந்திப்பு

அமெரிக்காவில் சொந்தமாகக் கடிகாரம் செய்து வகுப்புக்கு எடுத்து வந்தபோது, அதனை வெடிகுண்டு என ஆசிரியர்கள் தவறாகக் கருதியதால் கைதான முஸ்லிம் மாணவர் அகமது முகமதை அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் திங்கள்கிழமை சந்தித்தார். டெக்ஸாஸ் மாகாணம், இர்விங் நகரில் பயிலும் அகமது முகமது, சூடான் வம்சாவளியைச் சேர்ந்தவர். அறிவியலில் மிகவும் ஆர்வம் கொண்ட அவர், பென்சில்கள் வைப்பதற்கான சிறு பெட்டியில் சொந்தமாக ஒரு கடிகாரத்தைச் செய்து, அதனை கடந்த மாதம் தனது வகுப்புக்குக் கொண்டு வந்து ஆசிரியரிடம்…

Read More

ஜனவரி.08 அலரிமாளிகை சதி முயற்சி ;சீ.சீ.ரீ.வி. பதிவுகள் அனைத்தும் அழிப்பு

கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி அலரி மாளிகையில் தீட்டப்பட்டதாக கூறப்படும் சதி தொடர்பில், முக்கிய ஆதாரமாக கருதப்படும் அலரி மாளிகையின் சீ.சீ.ரீ.வி.கண்காணிப்பு கமரா பதிவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் கீழ், குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு அதன் அறிக்கை மேலதிக ஆலோசனைகளுக்காக சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எவ்வாறாயினும்…

Read More

தினக்கூலிகளை வேலையிலிருந்து துரத்தும் முயற்சியில் சாம்சங்

இன்னும் மனிதர்கள் குறைந்த தொகைக்கே தினக்கூலியாக கிடைப்பதால்தான் எந்திரங்கள் பெரிய அளவில் பல தொழில்களில் ஈடுபடுத்தப்படவில்லை. ஆனால், இந்தப் பணிகளையும் விரைவில் ரோபோக்களே கைப்பற்றப் போகின்றது. ஆனால், சாம்சங் நிறுவனம் தற்போது தென் கொரியாவின் வர்த்தகம், தொழில் மற்றும் சக்தி அமைச்சகத்துடன் இணைந்து 6.75 பில்லியன் அமெரிக்க டாலரில் ஒரு புராஜெக்ட்டை தொடங்கியுள்ளது. இதில், குறைந்த செலவில் ரோபோக்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இதனால், மாபெரும் தொழில் நிறுவனங்களில் தற்போது மிகக்குறைந்த ஊதியத்துக்கு வேலை செய்யும்…

Read More

பாலஸ்தீனிய பெண்ணின் பரிதாப் கொலை தொடரும் இஸ்ரேலிய தீவிரவாதம்

உலகிலேயே ராணுவத்தில் சக்தி வாய்ந்த 5 வது நாடாக திகழும் தீவிரவாத இஸ்ரேலிய காட்டுமிராண்டி இராணுவ நாய்களால் கடந்த 70 ஆண்டுகளில் பாலஸ்தீனை 90சதவீதம் சுரண்டி லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்களை கொன்று குவித்துள்ளது. அமெரிக்காவின் கள்ளக்குழந்தையாக இருக்கும் இஸ்ரேல் பாலஸ்தீன் மீது நடத்தக்கூடிய தீவிரவாத தாக்குதலை பற்றி எந்த மீடியாக்களும் வாய் திறப்பதில்லை. ஐநா சபை, மனித உரிமை ஆணையம், சர்வதேச நீதிமன்றம் என்று எல்லாம் இருந்தும் முஸ்லிம்களுக்கு தீங்கு என்றால் அனைத்தும் மௌனமாகி விடுகின்றன. பாலஸ்தீனத்தின்…

Read More

மஹிந்தவின் ஊடகப் பேச்சாளரிடம் வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் ரொஹான் வெலிவிட வாக்குமூலம் வழங்குவதற்காக ஹோமாகம பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவிலிருந்த பல காணொளிகள் காணாமல் போனமை தொடர்பிலேயே இவரிடம் வாக்குமூலம் பெற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

மனித உரிமை ஆணைக்குழுவிற்கு செல்லும் கொண்டயா

சிறுமி சேயா கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதான கொண்டயா என அழைக்கப்படும் துனேஷ் பிரியசாந்த மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். பொலிஸார், தன்னை அடித்து துன்புறுத்தி, பலாத்காரமாக பொய்யான வாக்குமூலமொன்றை பெற்றதாக குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த முறைப்பாட்டின் பிரதிவாதியாக, குற்றப் புலனாய்வு திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.  சேயாவின் உடலிலிருந்து பெறப்பட்ட மரபணு மற்றும் ஏனைய சாட்சிகளுடன் ஒப்பிடுகையில் கொண்டயா குற்றமற்றவர் என நேற்றைய தினம்  விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  இதேவேளை, குறித்த…

Read More

சஜின் வாஸ் சிங்கப்பூர் செல்ல அனுமதி

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன 5 நாட்களுக்கு மட்டும் சிங்கப்பூர் செல்ல கொழும்பு சிரேஷ்ட நீதவான் கிஹான் பிலபிட்டிய அனுமதியளித்துள்ளார். சஜின் வாஸ் குணவர்தன பிணையில் விடுதலை செய்யட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கவேண்டுமென கோரி, நேற்று கொழும்பு முதன்மை நீதவான் நீதிமன்றத்தில் சஜின் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். குறித்த மனுவை ஆராய்ந்த பின்னர், 5 நாட்களுக்கு மட்டும் சிங்கப்பூர் சென்று திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Read More

விமானத்தில் வாலிபர் கடித்து கொலை: பெண் பயணி வெறிச்செயல்

அயர்லாந்து விமானம் போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பனில் இருந்து டூப்ளினுக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு வந்தது. அதில் 165 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது பிரேசிலை சேர்ந்த 24 வயது வாலிபருக்கும், அவரது அருகே அமர்ந்திருந்த பெண் பயணிக்கும் இடையே வாக்குவாதமும், அதை தொடர்ந்து தகராறும் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண் பயணி, பிரேசில் வாலிபரை கடித்துக் குதறினார். இதனால் அலறிய அவர் திடீரென மயங்கி…

Read More

யானை தாக்கி கணவன் மற்றும் கர்ப்பிணி மனைவி பலி! (2ம் இணைப்பு)

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை, நெல்லிக்காடு பகுதியில் யானை தாக்கியதன் காரணமாக மூன்று மாத கர்ப்பிணியும் அவரது கணவரும் உயிரிழந்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு 1.00 மணியளவில் குறித்த குடும்பம் வசித்த வீட்டை தாக்கிய போது வீடு உடைந்த நிலையில் அதனுள் இருந்த மனைவி உயிரிழந்துள்ளார். இதன்போது யானையின் தாக்குதலில் இருந்து தப்ப முனைந்த கணவரும் யானையின் தாக்குதலினால் உயிரிழந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். மூதுரை பிறப்பிடமாகவும் நெல்லிக்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட எஸ்.மோகனதாஸ் (30வயது)  அவரது…

Read More

“சமூக வலைத் தளங்களுக்கு எதிராக வருகிறது புதிய சட்டம்”

சமூக வலை­த்த­ளங்­களில் தனி நபரை இழி­வு­ப­டுத்தும் வகை­யி­லான பதி­வேற்­ற ங்­க­ளுக்கு எதி­ராக புதிய சட்­ட­மொன்றை அர­சாங்கம் கொண்­டு­வ­ர­வுள்­ள­தாக நீதி மற்றும் புத்­த­சா­சன அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ தெரி­வித்தார். மேலும் வழக்­கு­களின் கால­தா­மதத்தை குறைப்­ப­தற்கு விசேட நட­வ­டிக்­கை­களை அரசு முன்­னெ­டுக்­க­வுள்­ளது என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.நீதி அமைச்சில் நேற்று இடம்­பெற்ற சட்டம் ஒழுங்­கு­ப­டுத்தல் ஆணைக்­கு­ழுக்­க ளின் பிர­தி­நி­தி­க­ளு­ட­னான கூட்­டத்­தொ­ட ரின் பின்­னரே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அங்கு அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், தற்­போ­தைய காலத்­திற்கு ஏற்ற வகையில்…

Read More