Headlines

அரசாங்கம் சரியான பாதையில் பயணிக்கிறது

சர்­வ­தேச அழுத்­தங்கள் மற்றும் உள்­ளக அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் நோக்­குடன் எமது அர­சாங்கம் இன்று மிகச்­ச­ரி­யான பாதையில் பய­ணித்து வரு­கின்­றது என அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் ஊட­கத்­துறை அமைச்­ச­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக தெரி­வித்தார். மஹிந்­த­விடம் இருந்து நாட்டை மீட்­ட­போதே அனைத்து பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு எட்­டப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். அர­சாங்­கத்தின் சர்­வ­தேச கொள்­கைகள் மற்றும் உடன்­ப­டிக்­கைகள் தொடர்பில் மஹிந்த அணி­யினர் தொடர்ச்­சி­யாக விமர்­சித்து வரும் நிலையில் அர­சாங்­கத்தின் அர­சியல் செயற்­பா­டுகள் தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்….

Read More

100 அடி பள்ளத்தில் முச்சக்கர வண்டி பாய்ந்து விபத்து: இருவர் படுகாயம்

அவிசாவளையிலிருந்து ஹட்டன் வழியாக நுவரெலியா நோக்கி சென்ற முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்று அதிகாலை 4.00 மணியளவில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை கரோலினா பகுதியில் பிரதான வீதியை விலகி 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதி மற்றும் பெண் ஆகிய இருவரும் படுங்காயம்பட்டு வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் பின் இருவரும் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள்…

Read More

மட்டக்களப்பில் யானை தாக்கி கணவன் மற்றும் மனைவி பலி!

யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் பலியாகிய சம்பவம் ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை காவற்துறை பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை – நெல்லிக்காடு பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று நள்ளிரவு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். நெல்லிக்காட்டிலுள்ள அவர்களது வீட்டை உடைத்த யானை, உறங்கிக் கொண்டிருந்த குறித்த இருவரையும் தாக்கிக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதீக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

கல்குடாவில் அதிகரித்து வரும் ஷியாக்களின் அட்டகாசம்

– வை.எம்.பைரூஸ் வாழைச்சேனை – இலங்கையில் பல தசாப்த காலம் தொட்டு இன்று வரை முஸ்லிம்களின் ஈமானுக்கு மா பெரும் சவாலாக உருவெடுத்துள்ள இந்த ஷீஆக்கள் அவர்களின் கேடு கெட்ட கொள்கையை எமது நாடு பூராகவும் அதி தீவிரமாக பரப்பிக் கொண்டிருக்கிறா்கள் என்பதை நாம் அறிந்ததே இந்த ஷீஆக்களின் வளர்ச்சியின் முக்கிய பங்கானது எமது கல் குடாவையே சாரும் என்றாலும் மிகையில்லை எவ்வாறெனில் ஈரானிலிருந்து இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர் குழைப்பதற்காகவே அனுப்பப்பட்ட முக்கிய பெயர்…

Read More

சோபித தேரரின் நலம் விசாரிக்கச் சென்ற மஹிந்த

சுகவீனம் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாதுளுவாவே சோபித தேரரின் நலம் விசாரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.   கடந்த பதினெட்டாம் திகதி இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. கடுமையான சுகவீனம் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாதுளுவாவே சோபித தேரரின் நலனை விசாரிப்பதற்காக மஹிந்த ராஜபக்ச குறித்த மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் வருகை தந்துள்ளார். இதன் போது இருவரும் சுமார் அரை மணிநேரம் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டுள்ளனர்….

Read More

ரோயல் கல்லூரி மாணவர்களின் நடைப்பயணத்தில் ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

எதிர்வரும் 24ம் திகதி நடைபெறவுள்ள ரோயல் கல்லூரி மாணவர்களின் நடைப்பயணம் ஒன்றில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்து கொள்ளவுள்ளனர். செயற்கை நிறமூர்த்தங்கள் மற்றும் சுவையூட்டிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பானங்களுக்குப் பதிலாக தண்ணீர் அருந்துதல், புகைப்பழக்கத்தை ஒழித்தல், போசாக்கான உணவுகளை மட்டும் தெரிவு செய்தல் ஆகிய மூன்று விடயங்களை வலியுறுத்தி இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது. ரோயல் கல்லூரியின் சுமார் 15 ஆயிரம் மாணவர்கள் இந்த நடைப்பயணத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். 24ம் திகதி காலை ஏழுமணிக்கு நெளும்பொக்குண அருகில் ஆரம்பமாகும்…

Read More

டிஜிட்டல் என்றால் என்னவென்றே எனக்குத் தெரிந்திருக்கவில்லை! அமைச்சர் ஹரின்

டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சுப் பதவி கிடைக்கும் வரை டிஜிட்டல் என்றால் என்னவென்றே தனக்குத் தெரிந்திருக்கவில்லை என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மொனராகலை, வெல்லவாய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நமது பிரதேசத்தில் எப்போது மழை பெய்யும், காலநிலை எவ்வாறு இருக்கின்றது என்பதை நம் கைகளில் வைத்திருக்கும் மொபைல் போன்கள் ஊடாக…

Read More

இராவணன் தொடர்பில் கிரமமான ஆய்வு நடத்தப்பட வேண்டும்!- புத்திக்க பத்திரண

இராவண மன்னன் தொடர்பில் கிரமமான ஆய்வு நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இது தொடர்பில் புத்திக்க பத்திரண யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார். இராவண மன்னன் தொடர்பில் திடமான வரலாற்றுத் தகவல்கள் இல்லாத போதிலும், கிரமமான ஆய்வின் மூலம் இராவண மன்னன் தொடர்பிலான மக்களின் எண்ணக்கருக்களை மேம்படுத்த முடியும். இராவண மன்னனிடம் காணப்பட்ட அறிவினை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்திக் கொள்ள முடியும். இலங்கை வரலாற்றில்…

Read More

ஹஜ் முறைகேடுகளை ஆராய விசேட குழு!

இம்முறை ஹஜ்ஜின்போது இலங்கை யாத்திரிகர்கள் எதிர்நோக்கிய அசௌகரியங்கள் பற்றி விசாரணைகளை மேற்கொள்ள முஸ்லிம் சமய கலாசார அமைச்சு விசேட குழுவொன்றை நியமிக்கவுள்ளது. இது தொடர்பான தீர்மானங்களை எடுக்க எதிர்வரும் 22 ஆம் திகதி ஹஜ் கமிட்டி கூடவுள்ளது. இலங்கையிலிருந்து யாத்திரிகர்களை அழைத்துச்சென்ற சில முகவர் நிலையங்கள் வாக்குறுதி அளித்தபடி சேவைகளை வழங்காததால் ஹஜ் யாத்திரிகர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர். இது தொடர்பான முறைப்பாடுகளை ஆராயவே மேற்படி விசாரணைக்குழு நியமிக்கப்படவுள்ளது. ஓய்வுபெற்ற நீதியரசர் ஒருவரை தலைமையாகக்கொண்டே இந்த விசாரணைக்குழு…

Read More

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

கிழக்கு மாகாணத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கான ஒருநாள் செயலமர்வு கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் நட்சத்திர ஹோட்டலில் இடம்பெற்றது. ‘ஜேர்னோஸ் மீட்டப் – 2015’ எனும் தலைப்பில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் ஆகிய மூவினங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்கள கலந்துகொண்ட இந்த செயலமர்வு விடியல் இணையத்தளத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. விடியல் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் றிப்தி அலி தலைமையில் இடம்பெற்ற இந்த செயலமர்வில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார்…

Read More

சுவிட்சர்லாந்து தேர்தல், சொல்லும் செய்திகள்..!

சுவிட்சர்லாந்து பாராளுமன்றத்திற்கான பொது தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வெளியாகி உள்ள நிலையில், அந்நாட்டின் முக்கிய கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றியை பெற்றுள்ளது. சுவிஸில் நேற்று தொடங்கிய பொது தேர்தலுக்கான வாக்குபதிவின் முடிவுகள் நள்ளிரவு முதல் வெளியாகி வந்துள்ளது. 200 பாராளுமன்ற கீழ் சபை உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்ட சுவிஸின் 3 முக்கிய கட்சிகளான சுவிஸ் மக்கள் கட்சி(SVP) 65 தொகுதிகளிலும், சமூக ஜனநாயக கட்சி(SP) 43 தொகுதிகளிலும் மற்றும் லிபரல் கட்சி(FDP)…

Read More

வதைப்படும் அகதிகள்..!

ஐரோப்பிய எல்லைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளால் ஆயிரக்கணக்கான அகதிகள் சிக்கித்தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வறுமை மற்றும் போர் காரணமாக மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைய படையெடுத்து வருகின்றனர். இந்த ஆண்டும் மட்டும் ஐரோப்பாவுக்குள் 5 லட்சம் அகதிகள் நுழைந்துள்ளதால், தற்போது எல்லைகளில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஸ்லோவேனியா மற்றும் க்ரோயேஷியாவுக்கு இடையிலான, எந்த நாட்டின் கட்டுப்பாட்டிலும் இல்லாத பகுதியில், மழை மற்றும் கடுங்குளிரில், தங்க இடமில்லாமல்,…

Read More