Headlines

இலவசச் சீருடைத் திட்டத்தில் மாற்றம்

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படக்கூடிய சீருடைக்குப் பதிலாக 2016ம் ஆண்டு முதல் கூப்பன் வழங்குவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் டபிள்யுபி. எம். பந்துசேன தெரிவித்தார். எனினும் அவற்றை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பான மேலதிக செயற்பாடுகள் பற்றி இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் ஆலோசனைக்கமைய இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். இதனூடாக…

Read More

கடவுச்சீட்டு பிரச்சினையில் சிக்கிய துமிந்த சில்வா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டில் கடந்த செவ்வாய்கிழமை சிங்கப்பூர் செல்ல முயற்சித்த போதிலும், அந்த கடவுச்சீட்டில் செல்வதற்கு அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ஈகே 348 விமானத்தில் சிங்கப்பூர் செல்வதற்கு அவர் கடந்த செவ்வாய்கிழமை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். எனினும் அவரை செல்ல அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. எப்படியிருப்பினும் அவர் நேற்று சாதாரண வெளிநாட்டு கடவுச்சீட்டில் சிங்கப்பூர் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Read More

சோபித தேரருக்கு காத்தான்குடியில் முஸ்லிம்களால் அஞ்சலி

– ஜவ்பர்கான் – மறைந்த சங்கைக்குரிய மாதுலுவாவே சோபித தேரருக்கு காத்தான்குடி பிரதேச முஸ்லிம் மக்களால் அஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தமிழ் முஸ்லிம் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் சங்கைக்குரிய சோபித தேரர் ஞாபகார்த் உரை சிங்களத்திலும் தமிழிலும் நிகழ்த்தப்பட்டது. தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு பிரதேசமெங்கும் துக்கதினம் அனுஸ்டிக்கப்பட்டதுடன் அவரது ஞாபகார்த்தமாக பதாதைகளும் தொங்கவிடப்பட்டிருந்தன.

Read More

இலங்கை – சேர்பியா இடையே புதிய விமான சேவை

இலங்கை மற்றும் சேர்பியா  ஆகிய நாடுகளுக்கு இடையில் புதிய விமான சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையில் விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் இரு நாடுகளின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் குறித்த தீர்மானம் தொடர்பில் அமைச்சரவையில் அங்கீகாரத்தை பெறுவதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை மேற்படி அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Read More

கீழிறங்கியுள்ள நுவரெலியா – ஹட்டன் வீதி

– க.கிஷாந்தன் – நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நிலம் கீழிறங்கியுள்ளது. நுவரெலியாவிற்கும் நானுஓயாவிற்கும் இடையில் 2 வெவ்வேறு இடங்களில் பாதையின் ஒருப்பகுதி கீழ் இறங்கியுள்ளது. சுமார் 5 மீற்றர் தூரமான வீதி கீழ்றங்கியுள்ளதால் இரு வழி பாதையான இதில் இந்த பகுதியில் ஒரு வழியில் மாத்திரமே வாகனங்கள் பயணிக்கக் கூடியதாக உள்ளது. கடந்த 3 மாதங்களாக இப்பகுதியில் பெய்த கடும் மழையை தொடர்ந்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளமான பகுதியில் வீதி கீழ்றங்கியுள்ளதால் இந்த பாதையை…

Read More

வடக்கு புகையிரத சேவைகள் பாதிப்பு

புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால் வடக்கு புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வவுனியாவில் இருந்து மாத்தறை நோக்கி சென்ற புகையிரதம் ஒன்று இன்று காலை தம்புத்தேகம புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் தடம் புரண்டதால் வடக்கு புகையிரத சேவைகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Read More

தனி­யா­ருக்கு 2500 ரூபா சம்­பள அதி­க­ரிப்பு?

தனியார் துறை­யி­ன­ருக்­கான ரூபா 2500 சம்­பள உயர்வு வழங்கல் மற்றும் அடிப்­படைச் சம்­பளம் ரூபா 10000 ஆக இருக்க வேண்டும் என்ற விட­யங்கள் சட்­ட­மாக்­கப்­படும் எனத் தெரி­வித்த தொழில் மற்றும் தொழி­லாளர் உற­வுகள் அமைச்சர் ஜோன் சென­வி­ரட்ண. ஊழியர் சேமா­லாப நிதி, நம்­பிக்கை நிதி இரண்­டையும் இணைத்து ஓய்­வூ­தியத் திட்­ட­மொன்று அறி­மு­கப்­ப­டுத்­த­வுள்­ள­தா­கவும் தெரி­வித்தார். கொழும்பில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும்போதே அமைச்சர் ஜோன் சென­வி­ரட்ண இதனை தெரி­வித்தார். கடந்த 100 நாள் ஆட்­சியில் நிதி­ய­மைச்சர் அரச…

Read More

ஜனாதிபதி தலைமையில் முஸ்லிம்கள் தொடர்பில் விசேட கூட்டம்

– அஸ்ரப் ஏ சமத் – வட கிழக்கில் இடம் பெயா்ந்த முஸ்லிம்கள் சம்பந்தமாக நேற்று (11) திகதி பி.ப 2.மணிககு ஜனாதிபதித் தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் விசேட கூட்டம் ஒன்று  நடைபெற்றது. இதில் அமைச்சா்களான  றிஷாத் பதியுதீன், டி.எம். சுவாமிநாதன்,  ரவூப் ஹக்கீம், பாட்டலி சம்பிக்க ரணவக்க, தயா கமகே, சஜித் பிரேமதாச, லக்ஸ்மன் கிரியெல்ல,  ராஜித்த சேனாரத்தின, கிழக்கு முதலமைச்சா் நசீர் அஹமட், வடக்கு ,கிழக்கு ஆளுணா்கள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனா்….

Read More

அவன்கார்ட் உடன்படிக்கை ரத்து

அவன்கார்ட் மெரிடைம் நிறுவனத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலுள்ள அனைத்து உடன்படிக்கைகளையும் ரத்து செய்து அதனை கடற்படையின் கீழ் கொண்டு வருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று பிற்பகல் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில் பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி, கடற்படை தளபதி, ரக்னா லங்கா பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டிருந்ததுடன், அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, விஜயதாஸ ராஸபக்க்ஷ,…

Read More

மத்திய கிழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள 9 இலங்கை பெண்கள்

மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக வேலை செய்யும் இலங்கையைச் சேர்ந்த 09 பெண்களுக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியா மற்றும் லெபனானில் பணிபுரியும் பெண்களுக்கே அந்நாட்டு நீதிமன்றங்களால் இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபிய நீதிமன்றங்களின் தீர்ப்புக்களின் பிரகாரம், இலங்கையின் பெண்கள் சிலர் கல்லெறிந்து கொல்லப்படும் நிலைக்கு உள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

மெகா சீரியல் (Poem)

கிழவியும் குமரியும் கிறுக்குத் தனமாய் பல பல நாடகம் பார்த்து ரசிக்கிறார். சேரியில் வாழும் சின்ன வீட்டிலும் சீரியல் பார்க்க LCD உண்டு. நாடகம் சொல்லும் நாறிய கருத்தால் கோடு ஏறிய குடும்பங்கள் எத்தனை? அடுத்தவன் மனைவிக்கு ஆட்டையை போடல் உடுத்த உடுப்புடன் ஓடிப் போதல் கொடுத்து உதவி குழியைத் தோண்டல் மருமகள் வாழ்வை மாமியார் கெடுத்தல் அருமையாய் பேசி ஆம்பிளையை கவிழ்த்தல் உரிமையைப் பேசி உம்மாவைப் பிரித்தல் தரித்திர நாடகத் தாக்கங்கள் ஆயிரம் இரண்டு வரிகளில்…

Read More

கெக்கிராவையில் குண்டு வெடிப்பு: 2 பேர் பலி

– விஷேட செய்தியாளர் – அனுராதபுரம், கெக்கிராவையில் சற்று முன் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கெக்கிராவை தனியார் வங்கி ஒன்றிலேயே இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம் பெற்றுள்ளது. இந்த வெடிப்பில் ஸ்தலத்திலேயே இரண்டு பேர் பலியாகியுள்ளனர். தனியார் வங்கியில் கொள்ளையிட வந்தவர்களாலேயே குண்டு வெடிக்க வைக்கப் பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More