ஒரு அங்குலமேனும் அரச காணிகளை நான் பெற்றிருக்கவில்லை – அமைச்சர் றிஷாத்
– அபூ அஸ்ஜத் – நான் வில்பத்து காட்டுக்குள் 600 ஏக்கர் வாழைத்தோட்டம் வைத்திருப்பதாக பொய்களை அவிழ்த்துவிட்டு அரைவேக்காட்டுத்தன அரசியல் செய்பவர்கள் அதனை நிரூபித்துக்காட்டுமாறு சவால்விடுத்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் அல்லாஹ்வின் மீது சத்தியமாகக் ஒரு கூறுகின்றேன்,ஒரு அங்குலமேனும் அரச காணிகளை நான் மன்னாரிலோ,வவுனியாவிலோ,முல்லைத்தீவிலோ பெற்றிருக்கவில்லை ,என பகிரங்கமாக தெரிவிப்பதாகவும் கூறினார். முசலி பிரதேச கல்வி மேம்பாட்டுக்கும்,வளர்ச்சிக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆற்றியுள்ள பங்களிப்பு அத்தோடு…
