Headlines

மேல் மாகாண முஸ்லிம்களின் கல்வியில் இனவாதம்?

– றிஹாம் – மேல் மாகாண கல்வித்திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட நாடகப்போட்டி  இரத்மலானை கொழும்பு இந்துக் கல்லூரியில்  உயர் கல்வி அதிகாரி ஒருவரின் தலைமையில் நேற்று  நடைபெற்றது. குறித்த இப்போட்டி நிகழ்ச்சியில் 07 பாடசாலைகள் பங்கு பற்றின. அதில் இரண்டு பாடசாலைகள் முஸ்லிம் பாடசாலைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்  நிகழ்ச்சிகள் அனைத்தும்  குறித்த பாடசாலையின் மண்டபத்தில் நடைபெற்றபோதும் அம்மண்டபத்தின் அனைத்து நுழைவாயில்கள், ஜன்னல்கள் குறித்த  கல்வி அதிகாரியினால்  மூடப்பட்டன.​ அத்தோடு மூடிய அறையில் அரங்கேற்றப்பட்ட நிகழ்சிக்கு…

Read More

பிரதமர் வேட்பாளராக மஹிந்தவுக்கு இடமில்லை: ஜனாதிபதி

நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்ஷவை, ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன நிறுத்தமாட்டார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மைத்திரிபால சிறிசேன தலைமையில் செவ்வாய்க்கிழமை நடந்த கூட்டத்தில், மகிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் சிலர் வலியுறுத்தியிருந்தனர். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக ஆராய ஆறு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. சுசில் பிரேம் ஜெயந்த, அனுர பிரியதர்சன…

Read More

அவசரமாக கூடுகிறது ஐ.தே.க

முக்கியமான விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் அவசர செயற்குழுக் கூட்டம் நாளை கொழும்பில் நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாளை காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பது கட்டாயம் என்றும், வர முடியாதவர்கள், ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதற்கான காரணத்தை விளக்கி முன் அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய…

Read More

நாளை றமழான் நோன்பு  இலங்கையில் ஆரம்பம்

நேற்று, ஹிஜ்ரி 1436 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத் திலும் தென்படாததால் இன்று ஷஃபான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து நாளை (19) ரமழான் முதல் நோன்பை ஆரம்பிப்பதென கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு நேற்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்துகொண்ட   உலமாக்கள் – கதீப்மார்கள், இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்களம், ஷரீஆ கவுன்ஸில் பிரதிநிதிகள், பள்ளிவாசல்கள் நிர்வாகிகள்…

Read More

அஸ்பாக் அகமட் ஹாபீஸானார்

– அஸ்ரப் ஏ சமத் – அக்கரைப்பற்றை பிறப்பிடமாகவும் தெஹிவளையை வசிப்பிடமாக கொண்ட பட்டய பொறியியலாளர் இர்சாத் அகமட்டின் மகன் அஸ்பாக் அகமட்  தெஹிவளை செயினப் பள்ளிவாசலின் மத்ரசாவில் பகுதி நேர மாணவப்பிரிவில் 3 வருடத்திற்குள்  முழுக் குர்ஆன் மனனம் செய்துள்ளார்.  இம் மாணவன் தரம் 8 லைசியம் சர்வதேச பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார். இவருக்கான பாராட்டு விழா அன்மையில் தெஹிவளையில் நடைபெற்றது.  இந் நிகழ்வில் அஷ;ஷேக் யூசுப் முப்தி சிறப்புரையாற்றினார்.

Read More

தரம் ஒன்றிற்கு விண்ணப்பங்களை ஜுலை 10 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பவும் – கல்வி அமைச்சு

அப்துல்லாஹ் 2016 ஆம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு பிள்ளைகளை அனுமதிப்பதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை எதிர்வரும் ஜுலை மாதம் 10 ஆம் திகதிக்கு முன்பதாக பாடசாலைகளின் அதிபர்களுக்கு பதிவுத் தபாலில் அனுப்பிவைக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை இவ்வாறான அனுமதியின்போது அரசியல்வாதிகள் தாம் விருப்பிய பிள்ளைகளின் பெயர்ப் பட்டியல்களை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவித்துள்ளார். தேசிய மற்றும் மாகாண மட்டத்திலுள்ள அரசியல்வாதிகள் பலர் கடந்த காலத்தில் தம்முடன்…

Read More

அந்தரத்தில் குலுங்கிய ஸ்ரீ லங்கன் விமானம்; 5 ஊழியர்கள் காயம்

பிரான்ஸின் பாரிஸ் நகரிலிருந்து 193 பயணிகளுடன் கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானமொன்று வளிமண்டலவியல் பாதிப்புக்கு உள்ளானதில், அதில் சேவைக்கு அமர்த்தப்பட்டிருந்த ஊழியர்களில் ஐவர், சிறு உபாதைகளுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களில் நால்வர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல்.564 என்ற விமானத்தில் வந்த ஊழியர்களே இவ்வாறு உபாதைகளுக்கு உள்ளாகியுள்ளனர் என்று மேற்படி விமான சேவையின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா தெரிவித்தார். சம்பவத்தின் போது குறித்த விமானத்தில்…

Read More

மகளிா் அமைப்பினால் 200 குடும்பங்களுக்கு உதவி

– அஸ்ரப் ஏ சமத் –  அகில இலங்கை வை.எம்.ஏயின் மகளிா் அமைப்பினால் நோன்பு கால உலா் உணா்வு பொதிகள் 200 குடும்பங்களுக்கு தெமட்டக்கொடையில் வைத்து வழங்கப்பட்டது. ஒவ்வொரு பொதியும் 5ஆயிரம் பெருமதி வாய்ந்த பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. கலாநிதி ஹாரீஸ் டீன் முன்னாள் இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம். அஸ்வா்  வை.எம்.ஏ.யின் மகளிா் அமைப்பின் தலைவி மக்கியா ஆகியோறும் கலந்து கொண்டு ஏழை மக்களுக்கு ரமலான் நோன்புப் பொதிகள் பகிா்ந்தளித்தனா். அத்துடன் பாத்திமா ஆனாதை இல்லத்துக்கு , கலாநிதி ஹாரீஷ்…

Read More

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் தரைவழி பாதை

இலங்கை – இந்தியாவை தரை வழி மார்க்கத்தால் இணைக்கும் திட்டத்தை இரு நாடுகளும் இணைந்து செயற்படுத்த விரும்புவதாக இந்திய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுடன் இந்தியா மோட்டார் வாகனங்களுக்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே நிதின் கட்காரி இத்தகவலை வெளியிட்டார். இந்தியாவின் தனுஸ்கோடிக்கும் இலங்கை எல்லைக்கும் இடையிலான 23 கிலோமீற்றர் தூரத்தை பாலம் வழியாக இணைப்பது அல்லது பாம்பன்…

Read More

சவூதி அரேபியாவிற்கு விஜயம், மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு

இலங்கையில் 7 ஆண்டுகள் சேவையாற்றிய பின்னர், நாடு திரும்பும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் அசீஸ் அல் ஜமாஸ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்த தூதுவர் மேற்கொண்ட பணிகளை ஜனாதிபதி பாராட்டியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் செயற்படுத்தி வரும் வேலைத்திட்டங்களுக்கு சவூதி அரேபியா தொடர்ந்தும் உதவும் என அப்துல் அசீஸ் அல் ஜமாஸ் கூறியுள்ளார். அத்துடன் சவூதி அரேபியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறும் அவர்…

Read More

உரிமைக்காக குரல் கொடுக்கும் றிஷாதுக்கு; புனித மாதத்தில் துஆ செய்யுங்கள்

– அபூஹஸ்மி – கண்ணியமிக்க ரமழான் மாதம் எம்மை வந்தடைந்துள்ளது. முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் இப்புனிதமிகு நோன்பு காலத்தை பயபக்தியோடும் இறை அச்சத்தோடும் எதிர்கொண்டு பூரண பலன் அடைய முயற்சிக்க வேண்டும். கடந்து சென்ற ரமளானில் நமது சமூகம் பெரியதொரு நெருக்கடியை சந்தித்தது. அதுதான் கிரிஸ் பூதம் என்றும் கொள்ளையர்கள் என்ற பெயரிலும் எமது சமூகத்தின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் விடப்பட்டது. நாட்டின் நாலா புறங்களிலும் காணப்பட்ட முஸ்லிம் கிராமங்களில் உள்ள பெண்கள் ஆண்கள் இரவு நேரங்களில்…

Read More

கத்தாரில் தலைப்பிறை தென்பட்டது, நாளை நோன்பு

கத்தாரிலிருந்து எம்.ஏ.பீ வசீம் அக்ரம் வளைக்குடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் ஹிஜ்ரி 1436 க்கான புனித ரமழான் மாதத் தலைப்பிறை தென்பட்டது. இதனடிப்படையில் (18-06-2015) நாளை வியாழக்கிழமை அனைத்து முஸ்லிம்களும் நோன்பு நோற்குமாறு கத்தார் இஸ்லாமிய அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இன்றைய நாட்களில் 40 பாகை செல்சியஸில் வெப்பநிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More