Headlines

நம்பத்தகுந்த பொறிமுறை அவசியம்- செய்ட் அல் ஹுசைன்

இலங்கையில் சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்போது நம்பத்தகுந்த பொறிமுறை ஒன்று அவசியம் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன், 29வது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆரம்ப நிகழ்வில் நேற்று பங்கேற்று இந்த கோரிக்கையை விடுத்தார். இலங்கை அதிகாரிகள் இந்த விடயத்தில் தெளிவான கலந்துரையாடல்களை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இலங்கை அரசாங்கம் நிறைவேற்றிய அரசியல்அமைப்பு திருத்தம், நாட்டில் புதிய ஜனநாயக ஆட்சி தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது…

Read More

வருட இறுதியில் இலங்கை வருகிறார் ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இந்த வருட இறுதியில் இலங்கை வரவுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Read More

பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தல்

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைய, தரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை கட்டளைகள் நிறுவனம் வர்த்தகர்களுக்கு அறிவித்துள்ளது. தரச் சான்றிதழை பெற்றுக்கொள்வதற்குத் தேவையான வசதிகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி லலித் சேனவீர தெரிவித்தார். நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைய, குடிநீர் பாவனைக்கு பயன்படுத்தும் பிலாஸ்டிக் போத்தல்கள் உற்பத்தி, இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் வழிகாட்டல்களுக்கு அமைய முன்னெடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்வுகளுக்கு உணவுப் பொருட்கள் மற்றும்…

Read More

திறந்தவெளி மிருகக்காட்சிசாலைக்கு வருகை தருவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பின்னவல திறந்தவெளி மிருகக்காட்சிசாலைக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் வருகையால், 08 மில்லியனுக்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ரேணுகா பண்டாரநாயக்க குறிப்பிட்டார். நாளாந்தம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகவும் அவர் தெரிவித்தார். பின்னவல திறந்தவெளி மிருகக்காட்சிசாலையில் 40 இற்கும் அதிகமான விசேட உயிரினங்களை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

நீதிமன்றில் மயங்கி விழுந்த வித்தியாவின் அண்ணன்!

யாழ்.ஊர்காவல்துறை நீதிமன்றில் இன்று நடைபெற்ற வித்தியா கொலை வழக்கு விசாரணையில் சாட்சியமளித்த அவரது அண்ணனான நிசாந்தன் மயக்கமடைந்த நிலையில் ஊர்காவல்த்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஊர்காவல்துறை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வித்தியாவின் படுகொலைக்குப் பின்னர் அவரது குடும்பத்தினர் உளவியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதன் காரணமாகவே இன்று நீதிமன்றத்தில் வித்தியாவின் அண்ணன் மயங்கி விழுந்துள்ளதாக அவர்களது உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Read More

சியாம் கொலை – வாஸ் குணவர்தனவுக்கு பிணை?

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐந்து பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. கோடீஸ்வர வர்த்தகரான சியாம் மொஹமட் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட குழுவினர், சுமார் இரண்டு வருடகாலமாக சிறை வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மகனும் அடங்குவார். எனினும் சட்டவிரோத ஆயுதங்களை தம்மிடம்…

Read More

உங்கள் உணவில் விஷம் உள்ளது.!

ஆம்… அன்றாடம் நாம் உண்ணும் உணவில் ஒன்றற கலந்திருக்கிறது ஏராளமான நச்சுப் பொருட்கள். அப்படியா! என உங்களின் ஆச் சரிய வார்த்தை காதில் விழுகிறது. முதலில் காலை முதல் இரவு வரை நீங்கள் உண்ணும் உணவு வகை களை பட்டியல் போடு வோமா? காலை எழுந்தவுடன் பால் சாப்பிடுகிறீங்க… அப்புறம் 5 இட்லி, தேங்காய் சட்னியுடன் காலை டிபன். மதியம் அரிசி சாதம், சாம்பாருடன், சுவையான சிக்கன் 65. ராத் திரி திடீர்னு ஒரு போன் வரும்….

Read More

தோட்டத்தொழிலாளர்களுக்கான வீடுகள் கட்டும் பணி ஆரம்பம்!

தோட்டத்தொழிலாளர்களுக்கான வீடுகள் அமைத்துக் கொடுக்கும் திட்டத்தினை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு முன்னெடுத்துள்ளது. 25000 வீடுகளை அமைத்துக் கொடுக்கும் இத்திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அவ்வகையில் இவ்வீடுகள் கட்டும் பணி மீரியபெத்தையிலிருந்து ஆரம்பிக்கப்படுகிறது. நாட்டின் அபிவிருத்திக்கும் ஏற்றுமதி வருமானங்களுக்கும் சிறந்த முன்னேற்றத்தினை வழங்குவது தோட்டத் தொழிலாளர்களின் அரிய பங்களிப்பாகும். அவ்வகையில் அவர்களுக்கான இவ் வீட்டுத்திட்டத்தினை வழங்குவதில் இந்திய அரசாங்கமும் தமது உதவிகளை வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். ஒவ்வொருவருக்கும் சுமார் 07 பேர்ச்சஸ்…

Read More

இளகிய மனம் கொண்டவர்களே இவர்களுக்கு உதவுங்கள் !!

(16/05/2015) கணவன் மனைவி கல்வி கற்கின்ற இரண்டு பெண் பிள்ளைகளையும் இரண்டு ஆண் பிள்ளைகளுமாக வாழும் இந்த குடும்பமானது வருமானமே இல்லாத நிலையில் குடும்ப தலைவியின் நெல் குத்தி கிடைக்கும் சிறிய வருமானத்தினால் இந்த குடும்பம் கஸ்டத்தின் மத்தியில் செல்கின்றது. படத்தில் காணப் படுகின்ற 4 பிள்ளைகளின் தகப்பனார் தலையில் உள்ள நரம்பு பாதிக்கப் பட்டு தான் என்ன செய்கின்றோம் என்று கூட தெரியாமல் சில வேளைகளில் நினைவிழந்து செயற்படுகிரார் . இதனை சரி செய்வதர்க்காக பல…

Read More

அமைச்சர் றிஷாதை கைது செய்ய கோரும் சிங்கள ராவயவிடம் சில கேள்விகள்?

-சித்திக் காரியப்பர் – எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னர் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீனைக் கைது செய்ய வேண்டுமென்றும் அவ்வாறு நடைபெறாவிட்டால் எதிரான போராட்டம் வெடிக்கும் என்றும் சிங்கள ராவய என்ற இனவாத அமைப்பு தெரிவித்துள்ளது. வில்பத்து தேசிய வனம் மற்றும் மடு பிரதேசம் ஆகியவற்றில் இயற்கை வளங்களை அழித்தமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட வேண்டும். கைது செய்யப்படாவிடின் குற்ற விசாரணைப் பிரிவின் முன்பாக போராட்டம் நடத்தப் போவதாகவும் அந்த அமைப்பின் செயலாளர் நாயகமான மாகல்கந்த…

Read More

முஸ்லிம்களின் எதிர்ப்பினை தேடிக்கொள்ள மஹிந்தவும் அவரது குடும்பமுமே காரணம்: எஸ்.பி

மஹிந்த ராஜபக் ஷ யுத்­தத்தை வெற்றி கொண்­டதன் மூலம் 96 வீத­மான நன்­மை­களை வடக்கு தமிழ் மக்­களே பெற்றுக் கொண்­டார்கள். ஆனால் தமிழ் மக்­களை மஹிந்த ராஜபக் ஷவினால் வெற்றி கொள்ள முடி­யாமற் போனது. வெறு­மனே நாம் முஸ்லிம் மக்­களின் எதிர்ப்­பினைத் தேடிக் கொண்டோம். இதற்கு மஹிந்­தவும் அவ­ரது குடும்­ப­முமே காரணம் என கிரா­மிய பொரு­ளா­தார விவ­கார அமைச்சர் எஸ்.பி .திசா­நா­யக்க தெரி­வித்தார். அமைச்சர் திசா­நா­யக்க ஊட­க­மொன்­றுக்கு வழங்­கிய பேட்­டி­யொன்­றிலே இவ்­வாறு கூறி­யுள்ளார். அவர் தொடர்ந்தும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது….

Read More