Headlines

இஸ்லாத்தில் இணைந்த விமான பணிபெண் மது பானங்களை பரிமாற முடியாது என உறுதி

அமெரிக்காவின் எக்ஸ்பிரஸ் ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணி பெண்ணாக பணியாற்றி வந்த இஸ்லாமிய பெண் ஒருவர் விமான பயணத்தின்போது பயணிகளுக்கு மதுவகைகளை பரிமாற மறுத்துவிட்டார். இதற்கு எனது மார்க்கம் இடம் தரவில்லை எனவே இந்த பணியை நான் செய்ய முடியாது என்று அவர் காரணம் கூறிவிட்டார். இந்த காரணத்திற்காக குறிப்பிட்ட அந்த நிறுவனம் அந்த பணி பெண்ணின் பதவியை பறித்ததுள்ளது. இதை எதிர்த்து நீதி மன்றம் சென்ற அவர் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தார். பணிநீக்கம்…

Read More

கெஹலிய பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரவுக்கு வருகை

பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு விசாரணைக்காக வருகை தந்துள்ளார். செலசினே நிறுவனத்தில் இடம்பெற்ற பொலிஸ் நிதி மோசடி தொடர்பில் விசாரணை செய்யவே இவர்  நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

உயிருடன் இருக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டினேன்’: சிறுவனின் சடலத்தை எடுத்த பொலிஸ் அதிகாரி

“சிறுவனை பார்த்த போது உயிருடன் இருக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டினேன். ஆனால் உயிரிழந்து காணப்பட்டான்’ என்று துருக்கி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட சிறுவனின் சடலத்தை எடுத்த துருக்கி பொலிஸ் அதிகாரி மெக்மெட் சிப்லாட் தெரிவித்துள்ளார். சிரியாவின் இடம்பெறும் உள்நாட்டுப் போர் காரணமாக அந்நாட்டு மக்கள்  துருக்கி வழியாக அண்டை நாடான ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர். ஆனால் தனது நாடுகளில் அகதிகள் குடியேறுவதை ஐரோப்பிய நாடுகள் வண்மையாக எதிர்த்து வந்தன. இந்நிலையில் துருக்கி…

Read More

பேராதனை பல்கலைகழக முதற்கலை வெளிவாரிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்

பேராதனை பல்கலைக்கழகத்தின் தொலைகல்வி நிலையத்தின் முதல்கலைத் வெளிவாரிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி இம்மாதம் 30ஆம் திகதியாகும். இப்பரீட்சைக்காக 2011ஆம் ஆண்டுக்குப் பின்னரும் செல்லுபடியான பதிவை மேற்கொண்டோர் பரீட்சைக்காக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப்படிவங்களையும் மேலதிக விபரங்களையும் www.pdn.ac.lk என்ற இணையதள முகவரியினூடாக பெற்றுக்கொள்ளலாம். அல்லது அலுவலக நேரங்களில் பேராதனை பல்கலைக்கழகத்தின் தொடர் தொலைக்கல்வி நிலையத்திற்கு நேரடியாக சமூகமளித்து விபரங்களையும் விண்ணப்பப்படிவங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.

Read More

முறை தவறி நடக்கும் மாணவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை

க.பொ.த உயர்தரப்பரீட்சைகள் இன்றுடன் (08) நிறைவடையவுள்ளது. பரீட்சை இறுதிநாளான இன்று பாடசாலைகளின் உள்ளேயும் வௌியேயும் ஒழுக்கத்தைப் பேணுமாறும் அவ்வாறு தவறும்பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் புஷ்பகுமார தெரிவித்துள்ளார். அவ்வாறு முறைதவறி நடக்கும் மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகள் ரத்து செய்யப்படும் என ஆணையாளர் எச்சரித்துள்ளார். கடந்த வருடம் மாணவர்கள் முறைகேடாக நடந்தமையினால் இவ்வருடம் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் ஆணையாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். பாடசாலை வளாகத்தினுல் முறைதவறி நடக்கும் மாணவர்களின் பெயர்விபரங்களை தனக்கு அனுப்பி…

Read More

மேல் மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான முதலமைச்சர்கள் நியமனம்

– ஜனாதிபதி ஊடகப்பிரிவு – மேல் மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான புதிய முதலமைச்சர்கள் இருவர் இன்று (8) காலை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் தமக்கான நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர். அதன்பிரகாரம் இசுரு தேவப்பிரிய அவர்கள் மேல் மாகாணசபை முதலமைச்சாராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தமக்கான நியமனக் கடிதத்தினை ஜனாதிபதியின் முன்னிலையில் மேல்மாகாண ஆளுனர் கே.சி.லோகேஸ்வரன் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். அதேபோல் தர்மசிறி தஸநாயக்க அவர்கள் வடமேல் மாகாணசபை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தமக்கான நியமனக் கடிதத்தினை…

Read More

கெசினோவுக்கு விரைவில் தடை!

கெசினோ விளையாட்டில் உள்ளுர்வாசிகள் பங்கேற்பது தடைசெய்யப்படுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனை தெரிவித்துள்ளார். இந்தநிலையில் கெசினோ சூது விளையாட்டுக்களில் வெளிநாட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கெசினோ காரணமாக இலங்கையில் பாரிய கலாசார சீரழிவுகள் ஏற்பட்டுள்ளமையை பல்வேறு மதக்குருமாரும் சுட்டிக்காட்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Read More

எந்தவொரு காவல்துறை அதிகாரிக்கும் போக்குவரத்து தொடர்பாக வழக்கொன்றை கோரமுடியும்

சீருடை அணிந்துள்ள எந்தவொரு காவல்துறை அதிகாரிக்கும் போக்குவரத்து தொடர்பாக வழக்கொன்றை கோரமுடியும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். இது தொடர்பில் விளக்கமளித்த அவர், போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் பணியில் ஈடுபடாத காவல்துறை அதிகாரியாக இருந்தாலும், அவர் சீருடை அணிந்திருப்பாராயின், முறையற்ற வகையில் செல்லும் வாகனங்களை நிறுத்தும் அதிகாரத்தை கொண்டுள்ளார் என தெரிவித்தார். குறித்த காவல்துறை அதிகாரி வாகனத்தை நிறுத்தி விசாரிக்க முற்படும் போது சாரதி நிறுத்தாமல் சென்றால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறான சாரதிகளுக்கு…

Read More

டுபாய் விமானத்தில், நச்சுப் பாம்பு!

துபாய் விமானத்தின் சரக்குப் பகுதியில் கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்பு ஒன்று பிடிபட்டதாக துபாய் நகராட்சி தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெப்பப் பிரதேச காடுகளில் வாழும் கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்பு ஒன்று துபாய் விமானத்தின் சரக்குப் பகுதியில் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. இவ்வகை விஷப்பாம்பு ஆப்பிரிக்க நாடுகள், ஓமன், தென்மேற்கு சவுதி அரேபியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளில் பரவலாக காணப்படும். இந்நிலையில், இந்த விஷப் பாம்பு எவ்வாறு துபாய் விமானத்தில் புகுந்தது என்பது பற்றி எந்த தகவலும்…

Read More

அகதிகளுக்காக நான் வாங்கும் தீவுக்கு ‘அய்லான் தீவு’ என பெயர் சூட்டுவேன்

அகதிகளுக்காக ஒரு தீவையே விலைக்கு வாங்க எகிப்து நாட்டை சேர்ந்த நகுய்ப் சாகுரிஸ் என்ற கோடிஸ்வரர் முன்வந்துள்ளார். தான் வாங்கும் தீவிற்கு பலியான 3 வயது சிறுவன் அய்லானின் பெயரை சூட்ட  நகுய்ப் சாகுரிஸ் தீர்மானித்துள்ளார். துருக்கியின் கோஸ் தீவில் கரை ஒதுங்கிய 3 வயது சிறுவன் அய்லானின் சடலமும், அதை போலீஸ்காரர் ஒருவர் கையில் ஏந்திச் சென்ற புகைப்படங்கள் உலகையே கண்ணீர் சிந்த வைத்துள்ளது. இந்த சம்பவத்தையடுத்து பேஸ்புக் மற்றும் சமூக வலைத் தளங்களில் பலர்…

Read More

வசிம் தாஜூதீன் பயன்படுத்திய, கைத்தொலைபேசி மீட்பு

சந்தேகத்துக்குரிய மரணத்தை தழுவிய, ரக்பீ வீரர் வசிம் தாஜூடீன், மரணமாவதற்கு முன்னர் பயன்படுத்திய கைத்தொலைபேசி நுவரெலியா, அக்கரப்பத்தனை பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ் பேச்சாளார் ருவன் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.  2012ஆம் ஆண்டு தாஜூடீன் கொழும்பில் வைத்து விபத்து ஒன்றில் மரணமானதாக அறிவிக்கப்பட்டது. எனினும் அந்த மரணம் விபத்தால் அல்ல. கொலை என்று தற்போது தெரியவந்துள்ளது. இந்தநிலையில் குறித்த காலத்தில் நாரஹேன்பிட்டியில் உள்ள விருந்தினர் உபசரிப்பு நிலையத்தில் பணியாற்றிய ஒருவர் தமது மகனுக்கு தாஜூடீன் பயன்படுத்திய தொலைபேசியை…

Read More

அராபியர்களுக்கு வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் – மங்கள

அராபிய முதலீட்டாளர்களுக்கு இலங்கையின் தொழில்துறைகளில் முதலீடு செய்வதற்கு கூடுதலான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சையித் அல் நயான் உடனான சந்திப்பின் போதே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மங்கள சமரவீர, ஐக்கிய அரபு இராச்சியத்தின் சுற்றுலாப் பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களின் சொர்க்காபுரியாக இலங்கை மாற்றமடைய…

Read More