புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளில் 3 நாட்களுக்கு மின்வெட்டு
புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய காலை 8.30 மணி முதல் மாலை 4 மணிவரையான காலப்பகுதிக்குள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் புத்தளம் மாவட்ட மின் பொறியிலாளர் பணிமனை அறிவித்துள்ளது. உயர் அழுத்த மின் கம்பி கட்டமைப்புகளில் முன்னெடுக்கப்படவுள்ள அவசர திருத்த வேலை காரணமாக மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலாவி தொடக்கம் கற்பிட்டிக்கு இடைப்பட்ட பல பகுதிகளில் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது ….
