Headlines

சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்வு கூறல் பிழையானது: நிதி அமைச்சர்

சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்வு கூறல் பிழையானது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். முதலீட்டு மேம்பாட்டு நிகழ்வு ஒன்றிற்காக லண்டனுக்கு விஜயம் செய்துள்ள ரவி கருணாநாயக்க சர்வதேச ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச நாணய நிதியம் எதிர்வு கூறல் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டில் இலங்கை 5 முதல் 5.5 வீத பொருளாதார வளர்ச்சியை எட்டும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்வு கூறியுள்ளது. எனினும்…

Read More

அவன் கார்ட் கப்பலை இரசாயன பகுப்பாய்வாளர்கள் சோதனை!

அண்மையில் கடற்படையினரால் மீட்கப்பட்ட அவன்ட் கார்ட் கப்பலை அரச இரசாயன பகுப்பாய்வாளர்கள் சோதனையிட உள்ளனர். இன்று இரசாயன பகுப்பாய்வாளர்கள் கப்பலுக்குள் சென்று பரிசோதனை நடத்த உள்ளனர். கப்பலில் காணப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் ஆய்வு நடத்தப்பட உள்ளது. பாரிய நிதி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவினர் கடந்த 29ம் திகதி கப்பலுக்குள் பிரவேசித்து கப்பலில் காணப்பட்ட 810 ஆயுதங்களையும் பரிசோதனையிட்டுள்ளனர். இந்த ஆயுதக் கப்பல் தொடர்பில் அரசாங்கம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

தாஜூடின் விசாரணை: உறவினருக்கு அச்சுறுத்தல்

ரகர் வீரர் வசீம் தாஜூடின் மரணம் தொடர்பிலான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என அவரது நெருங்கிய உறவினர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸிடம் இதனைத் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அச்சுறுத்தல் விடுப்பது யார் ஏன் இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது என்பது குறித்து தனியான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அண்மையில் தாஜூடினின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு மீளவும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. தாஜூடினின் தாயாரிடம் இரத்த மாதிரி பெற்றுக்கொள்ளப்பட்டு தோண்டி…

Read More

தாய்லாந்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

நாட்டினுள் சுதந்திரம், ஜனநாயகம் உறுதியாகியுள்ளமையினால் மீண்டும் தாய் நாட்டிற்கு வருமாறு தாய்லாந்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, நேற்று இடம்பெற்ற ஊடகவிலயாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பின் மூலம் உறுதியளித்துள்ள அனைத்து உரிமைகளை வலுப்படுத்துவதற்கு சுயாதீன விசாரணைக் குழு நிறுவப்படுவதற்கு தங்கள் அரசாங்கம் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன் போது மேலும் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தூதரக அலுவலகத்தினால்…

Read More

விமானமொன்று மத்தளையில் தரையிறக்கம்

குவைத்தில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் ஒன்று திடீரென மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த குறித்த விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. யு.எல்.230 ரக விமானம் ஒன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடும் மூடுபனி காரணமாகவே குறித்த விமானம் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Read More

ரணிலிடம் அறிக்கை கையளிப்பு

கடந்த வியாழக்கிழமையன்று உயர்கணக்கியல் கற்கை நெறி மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதல் தொடர்பில் ஆரம்ப விசாரணை அறிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் திலக் மாரப்பன இந்த அறிக்கையை கையளித்துள்ளார். இந்தநிலையில் அறிக்கையின் அம்சங்களை கொண்டு இது தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கை அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பொலிஸாரின் நடவடிக்கை பிழையானது என்று கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளார்.

Read More

கராத்தே வீரரின் கொலை முக்கியஸ்தரும் கைது

கராத்தே வீரரும் இரவு களியாட்டகத்தின் உரிமையாளருமான வசந்த சொய்ஸா அநுராதபுரத்தில் வைத்து அண்மையில் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் முக்கிய சந்தேகநபரான எஸ்எப் லொக்கா என்ற இரான் ரணசிங்க கைதுசெய்யப்பட்டுள்ளார். சிலாபம் பகுதியில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எஸ்எப் லொக்காவின் சகோதரர் உட்பட்ட 20பேர் வரை வசந்தவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஹமாஸ், அக்ஸாவை மீட்பதில் திட்டவட்டம்

– அபூஷேக் முஹம்மத்- பாலஸ்தீன முக்கிய போராட்ட அமைப்புகள் ஹமாஸ்,  பத்தாஹ் , இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புக்கள் இடையே லெபனானில் சந்திப்பு நடந்தது. சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் விவரமாவது, தற்பொழுது இஸ்ரேலுக்கு எதிராக நிகழும் பாலஸ்தீனர்களின்  மூன்றாம் கல் புரட்சிப் போராட்டத்தை சிறப்பாக வழிநடத்திச்செல்ல வேண்டும். அனைத்து அமைப்புகளும் ஒற்றுமையாக செயல்பட்டு  பாலஸ்தீன விடுதலைக்கு போராட வேண்டும் . அந்த வெற்றி மஸ்ஜித் அல்-அக்ஸாவை மீட்டப்படுப்பதில்  இருக்க வேண்டும். பாலஸ்தீனத்தில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின்  புனித…

Read More

316 ஆசனங்களை வாரிச் சுருட்டியது எர்துகானின் கட்சி

துருக்கியில் ஐந்து மாதங்களுக்குள் இரண்டாவது முறையாகவும் நேற்று பாராளுமன்ற தேர்தல் இடம்பெற்றது. தேர்தலில் ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துகானினால் உருவாக்கப்பட்ட ஆளும் ஏ.கே. கட்சி பெரும்பான்மை வாக்குகளை பெற்றுள்ளது. தனது கட்சி நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதாக ஜனாதிபதி எதிர்துகான் வாக்குறுதி அளித்துள்ளார். துருக்கியின் ஆட்சியாளர்கள் துருக்கியை சீரழித்து கொண்டிருந்த நிலையில் நிண்ட காலத்திர்கு பிறகு துருக்கி அதிபர் ரஜப் எர்துகான் அவர்கள் மீண்டும் துருக்கியில் ஒரு இஸ்லாமிய சூழலை உருவாக்கினார் ரஜப் எர்துகான் அதிபராக உயர்ந்து விட்டாலும்…

Read More

ஹயஸ் வாகனம் தடம்புரண்டு வீட்டுக்குள் புகுந்தது

வவுனியா, புளியங்குளம் ஏ9 வீதியில் பயணித்த ஹயஸ் ரக வாகனம் தடம் புரண்டு அருகில் இருந்த வீட்டிற்குள் பகுந்த சம்பவம் திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ஹயஸ் ரக வாகனம் ஏ9 வீதி புளியங்குளம், புதூர் பகுதியில் பயணித்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு அருகில் இருந்த வீட்டிற்குள் புகுந்துள்ளது. இதனால் வாகனம் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் வீடும் சேதமடைந்துள்ளது. வாகனத்தில் பயணித்தவர்கள் சிறுகாயங்களுடன் மயிரிழையில்…

Read More

அமைச்சர் றிஷாத் மைத்திரிக்கு அவசர கடிதம்

மன்னார் சிலாவத்துறையில் கடற்படையினர் வசமுள்ள மக்களின் காணிகளை மீண்டும் அம்மக்களுக்கு பெற்று்க் கொடுப்பதற்கான உதவிகளை செய்யுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். 2009 ஆம் ஆண்டு வடக்கில் மன்னார் சிலவாத்துறையில் கடற்படைக்கான தளமொன்றினை பிரதேசத்தின் பாதுகாப்பு நோக்கம் குறித்து தற்காலிகமாக அமைக்கப்பட்டது.அதன் பிற்பாடு இது நிரந்தரமானதொரு முகாமாக மாற்றப்பட்டுவருகின்றது. சிலவாத்துறையின் பிரதான சனநெருக்கடி மிக்க பிரதேசத்தில் இந்த முகாம் இருப்பதால்,வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பெரிதும் சிரமங்களை…

Read More

அல் அக்ஸாவின் ஒரு கல்லைகூட விட்டுத் தரமாட்டோம் – பள்ளியின் இமாம் சூளுரை

கடந்த சில நாட்களாக பலஸ்தீனில் பலஸ்தீனர்களுக்கும் இஸ்றேலியர்களுக்கும் இடையே அக்ஸா பள்ளியை மையமாக கொண்டு தொடர்ந்து பிரச்சனைகள் வளர்ந்து வருகிறது. இளைஞர்களை பள்ளியில் தொழுகைக்கு அனுமதிக்க மாட்டோம் முதியவர்களை மட்டுமே அல்அக்ஸா பள்ளிக்கும் அனுமதிப்போம் என கூறி இஸ்றேல் அடாவடிதனம் செய்து வருகிறது. கடந்த வெள்ளியன்று பலஸ்தீன இளைஞர்கள் இந்த தடையை தகர்த்து எறிந்தனர் 30 ஆயிரத்திர்கும் அதிகமான பலஸ்தீன முஸ்லிம் இளைஞர்கள் அக்ஸா பள்ளிக்குள் தொழுகைக்காக நுழைந்தனர் இதனை தொடர்ந்து இஸ்றேல் பள்ளிக்குள் நுழைவதர்கு விதித்திருந்து…

Read More