தேவையற்ற ஆர்ப்பாட்டத்தை நடத்தினர் : லக் ஷ்மன் கிரியெல்ல
உயர் தேசிய கணக்கீடு டிப்ளோமா பாடநெறி தொடர்பான அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்த நிலையிலேயே மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இது தேவையற்றதாகும் எனத் தெரிவித்துள்ள உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல. இது தொடர்பான முழுமையான விபரங்கள் விரைவில் வெளியிடப்படுமென்றும் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாணவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டது. கடந்த 29 ஆம்…
