Headlines

காணாமல் போயிருந்த பிக்குகள் கண்டு பிடிப்பு




கடந்த 20 மணித்தியால காலப்பகுதியாக அரலகன்வில கந்தேகம காட்டு பகுதியில் காணாமல் போயிருந்த நான்கு இளம் பிக்குகள் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று காலை 11 மணி அளவில் பிக்குகள் காணாமல் போயுள்ளதாகவும் அதற்கு பின்னர் இவர்கள் தொடர்பில் எந்த தகவல்களும் கிடைக்கவில்லை.

பின்னர் இவர்கள் தொடர்பில் தகவல் கிடைக்காமையினால் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம் இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

அந்த பிரதேசத்தை சேர்ந்த மக்களும் பிக்குகளை தேடும் பணியில் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *