Headlines

இளைஞன் விவகாரம்: பொலிஸார் நால்வர் இடைநிறுத்தம்

ஹம்பாந்தோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டிருந்த இளைஞரொருவர் காணாமற்போன சம்பவம் தொடர்பில், ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வர் பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

Read More

இரண்டு சிறுவர்களை காணவில்லை ; தேடுதல் பணிகள் தீவிரம்

திருகோணமலை உப்புவெளி பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சிறுவர்கள் நேற்று (12) காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போயுள்ள சிறுவர்கள் 9 மற்றும் 11 வயதானவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சிறுவர்களை தேடும் பணிகளில் 5 பொலிஸ் குழுக்கள் ஈடுபட்டுவருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

மீண்டுமொரு முஸ்லிம் வர்த்தகரை காணவில்லை

பண்டாரகம – அடுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் சுமார் ஒரு கோடி ரூபாயுடன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 35 வயதான மொஹமட் நஸ்ரின் என்ற வர்த்தகர் வங்கியின் தங்க நகைகள் ஏல விற்பனையின் பொருட்டு தனது குழுவினருடன் நேற்றைய தினம் கந்தளாய் பிரதேசத்திற்குச் சென்றுள்ளதாக வர்த்தகரின் தந்தை பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார். நேற்று -04- முதல் இன்றுவரை அவருடனான தொடர்புகள் இல்லாமல் போயுள்ளதாகவும், எனவே இவர் காணாமல் போயிருக்கலாம் என அவரது தந்தை பண்டாரகம பொலிஸ்…

Read More

முல்லைத்தீவு மாணவன் புத்தளத்தில் மாயம் தகவல் தரக்கோரிக்கை

முல்லைத்தீவு ஹிஜ்ராபுரத்தைச் சேர்ந்த பரீத் முகம்மது இல்ஹாம் (வயது 16) என்ற மாணவன் புத்தளத்தில் வைத்து காணாமல் போயுள்ளதாக மாணவனின் பெற்றோரால் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு தண்ணீரூற்று முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தர சாதாரண தரம் கற்கும் குறித்த மாணவன் 4 அடி 8 அங்குல் உயரமுடையவர் எனவும், காணாமல் போன போது நீல நிற காற்சட்டையும், ரோஸ் நிற சேர்ட்டும் அணிந்தி ருந்து ள்ளார். கடந்த மாதம்…

Read More

கடத்தப்பட்ட வர்த்தகர் சடலமாக மீட்பு

கொழும்பில் கடத்தப்பட்ட பிரபல வர்த்தகரின் சடலம் மானனெல்ல பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று (24) இரவு மீட்கப்பட்டது. கொழும்பு பம்பலப்பிடிய பகுதியில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த வர்த்தகர் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

பம்பலப்பிட்டி வர்த்தகரை விடுவிக்க 2 கோடி ரூபா கப்பம் கோரப்பட்டுள்ளது

பம்பலபிட்டியவில் கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சாகீப் சுலைமானை கடத்திச் சென்றவர்கள் அவரை விடுவிப்பதற்காக 2 கோடி ரூபா கப்பம் கோரியுள்ளதாக பொலிசார்  தெரிவித்துள்ளனர். நிலையில் அவரின் கடத்தல் தொடர்பான தகவல்களை வழங்குபவர்களுக்குச் 5 மில்லியன் வழங்கப்படவுள்ளதாக வர்த்தகரின் தந்தையார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்த்தகரின் தந்தை – 0770101971 முன்னைய செய்தி: கடத்தப்பட்ட வர்த்தகர் தொடர்பில் தகவலளித்தால் 5 மில்லியன்!

Read More

அவசரப்பட வேண்டாம் : அரசாங்கம்

-ஆர்.யசி – பாதிக்கப்பட்ட மக்களுக்காகவே காணாமால் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.  இதில் பதிக்கப்பட்ட மக்கள் நிராகரிக்கப்படுவது என்ற குற்றச்சாட்டை ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது.  இது தொடர்பான பொறிமுறைகள் சரியான பலமடையும் வரையில் எவரும் அவசரப்பட வேண்டாம். இந்த ஆட்சியில் உண்மைகள் கண்டறியப்படும் என்று அரசாங்கம் குறிப்பிட்டது. காணாமால் போனோர்  அலுவலக   சட்டமூல உருவாக்கத்தில் மக்களின் கருத்துக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக நல்லிணக்க செயலணி தனது அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளது.    இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வினவியபோதே அமைச்சரும்…

Read More

கடத்தப்பட்ட வர்த்தகர் தொடர்பில் தகவலளித்தால் 5 மில்லியன்!

கடத்தப்பட்ட வர்த்தகர் மொஹமட் சாகீப் சுலைமான் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு 5 மில்லியன் வழங்குவதாக அவரது தந்தை அறிவித்துள்ளார். பம்பலப்பிட்டியில் நேற்று முன்தினம் வர்த்தகர் மொஹமட் சாகீப் சுலைமான் கடத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் இவரின் தந்தை சுலைமான் ஈசா இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் அறிவிக்குமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளார். மேலும், இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் 0770101971 என்ற இலக்கத்தக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Read More

பம்பலப்பிட்டியில் தொழிலதிபர் சகீம் சுலைமான் மாயம்!

பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள தொழிலதிபர் ஒருவர் நேற்றிரவு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். குறித்த நபர் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைபாட்டிற்கு அமையவே இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 29 வயதான மொஹமட் சகீம் சுலைமான் என்பவர் நேற்றிரவு வெளியில் சென்றிருந்த வேளையில் காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார்,…

Read More

இந்த மாணவனை கண்டுபிடிக்க உதவுங்கள்

சாய்ந்தமருதை சேர்ந்த K.M. இப்ராத் என்ற மாணவன் நேற்று (14) கொழும்பிலிருந்து பஸ்ஸில் தனது ஊருக்கு பயணித்தவர் இன்னும் வீடு சென்றடையவில்லை. இடை வழியில் எந்த தொடர்புகளும் இல்லாத நிலையில் காணாமல் போயுள்ளார். இவரை கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு இவரது பெற்றோர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர். இவர் பற்றிய தகவல்கள் தெரிந்தோர் 0777118327 / 0773447490 / 0773165295 என்ற இலக்கத்துக்கு தெரியப்படுத்துமாறு வினயமாய் வேண்டிக் கொள்கின்றனர்.

Read More

மஸ்கெலியா ஏழு கன்னி மலை பகுதியில் காணாமல் போனதாக கூறப்பட்ட ஐந்து பேர் மீட்பு

மஸ்கெலியா ஏழு கன்னி மலை (சப்த கன்ய) பகுதியில்  மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தபோது காணாமல் போனதாக கூறப்பட்ட ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  மீட்கப்பட்டவர்களில் வெளிநாட்டவர்கள் சிலரும்  அடங்கியுள்ளனர்.  

Read More

அங்கொட மனநல வைத்தியசாலையின் நோயாளியை காணவில்லை

அங்கொட மனநல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் ஒருவர் மர்மான முறையில் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலையின் பணியாளர்களின் துன்புறுத்தல்களை பொறுத்துகொள்ள முடியாமல் தனது மகன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறி காணாமல் போயுள்ளதாக பெற்றோர் சந்தேக்கின்றனர். ஹிக்கடுவை – களுபே பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய லக்ஷித பன்துல விக்ரமசிங்க என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். குறித்த இளைஞன் மனநிலை பாதிக்கப்பட்டமையால் கடந்த 13 ஆம் திகதி அங்கொட மனநல வைத்தியசாலையில்…

Read More