Headlines

தேசிய வனத்திற்குள் குப்பைக் கொட்ட முயற்சித்தவர்கள் கைது

பொலன்னறுவை-கல்லெல்ல தேசிய வனத்திற்குள் லொறி ஒன்றின் மூலம் குப்பைக் கொட்ட முனைந்தவர்கள், வனஜீவராசிகள் அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த லொறியானது சட்டவிரோதமாக குறித்த வனப்பகுதிக்குள் நுழைந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த வனத்திற்குள் சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டும் நடவடிக்கை பல வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் இதன்போது மற்றுமொரு ட்ரக் வண்டியொன்றில் குப்பை கொட்டுவதற்கு வந்தவர்களும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் இன்று பொலன்னறுவை நீதவான்…

Read More

“அதிகாரபூர்வ நடமாடும் சேவை – 2016” பொலன்னறுவையில்!

பொதுமக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் சென்று தீர்க்கும் நோக்கில் அரச சேவையில் சேவை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் இணைந்து மாவட்ட மட்டத்தில் “அதிகாரபூர்வ நடமாடும் சேவை – 2016” ஒன்றினை நடாத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவ்வகையில், “அதிகாரபூர்வ நடமாடும் சேவை – 2016” என பெயரிடப்பட்டுள்ள இச்சேவையின் ஆரம்ப நிகழ்வு பொலன்னறுவை மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கும் வகையில் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை வார…

Read More

அர் – றஹ்மா நலன்புரி சங்கத்தினால், சீருடை வழங்கும் நிகழ்வு

– மௌலவி முஹம்மட் றிஸ்வி (அல்-அஷ்ஹரி) – பொலன்னறுவை மாவட்டத்தில் கதுருவெல குசும்கம எனும் பிரதேசத்தில் பொது நோக்காக சுமார் 2 மாதமாக தமது பொதுச் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ள அர்-றஹ்மா நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்துள்ள மற்றுமொரு செயற்பாடாக தமது ஊரிலுள்ள இளம் மாணவ மாணவிகளுக்கு அடிப்படையான மார்க்க கல்வியை கற்றுக்கொடுக்கும் குர்ஆன் (மக்தப்) மதரசாவிற்கான அனைத்து குறைகளையும் தங்களால் முடியுமான வரை நிறைவு செய்து இலவசமாக தெரிவு செய்யப்பட்ட சுமார் 30 பிள்ளைகளுக்கு சீருடை வழங்கும்…

Read More

காணாமல் போயிருந்த பிக்குகள் கண்டு பிடிப்பு

கடந்த 20 மணித்தியால காலப்பகுதியாக அரலகன்வில கந்தேகம காட்டு பகுதியில் காணாமல் போயிருந்த நான்கு இளம் பிக்குகள் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். நேற்று காலை 11 மணி அளவில் பிக்குகள் காணாமல் போயுள்ளதாகவும் அதற்கு பின்னர் இவர்கள் தொடர்பில் எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. பின்னர் இவர்கள் தொடர்பில் தகவல் கிடைக்காமையினால் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம் இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்….

Read More

பொலன்னறுவையில் ஊடகப் பயிற்சி பாடநெறி

பொலன்னறுவை மாவட்டத்தில் ஊடாகவியலாளர்களை பயிற்றுவிப்பதற்காக ஊடகப் பயிற்சிபாடநெறி ஒன்றை ஆரம்பிப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா நடவடிக்கை எடுத்துள்ளது. இம்மாவட்டத்தில் தமிழ் மொழி மூலம் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் இல்லாததனைக் கருத்தில் கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் இப் பயிற்சியை பொலன்னறுவை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளுடன் இணைந்து நடத்தவுள்ளது. இதன் முதற்கட்டமாக ஒற்றை நாள் பயிற்சி முகாம் ஒன்று எதிர்வரும் 20 ஆம் திகதி கதுருவெல முஸ்லிம் மத்திய கல்லூரியில் நடத்தப்படவுள்ளது. இதில் பங்குபற்ற விரும்பும்…

Read More