தமிழ் மொழி கற்பிக்கும் விமலசார தேரர்
“பிற மொழியையும் தெரிந்து வைத்திருங்கள். அது பிறரோடு பழக உதவும். அடுத்தவரை அணுக உதவும். வெறும் மொழிப்பித்து என்பது உங்களைக் கிணற்றுத் தவளையாக்கிவிடும். கிணற்றுத் தவளையும் நீந்தும் உயிர்வாழும். ஆனால், உலகத்தின் அனுபவமும் அளவும் அதற்குச் சிறியதாகத் தெரியும்” என முகம் கொள்ளாத சிரிப்புடன் எம்மோடு பேசத் தொடங்கினார் குட்டிக்குளமே விமலசார தேரர். “இந்த இனிப்பான தருணத்தில் சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்” என இலக்கணத் தமிழில் தேன் சுவையாக கூறினார் 32 வயதான…
