Headlines

ஜே.வி.பியின் அகில இலங்கை தொழிற்சங்க தலைவர் பதவியில் இருந்து சந்திரசேகர் விலகினார்

அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து ராமலிங்கம் சந்திரசேகர் விலகியுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கங்களில் ஒன்றான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக பணியாற்றி வந்த சந்திரசேகர், மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினராகவும் இருந்து வருகிறார். ஹற்றன் நகரில் நேற்று நடைபெற்ற சங்கத்தின் 10 ஆவது மாநாட்டில் உரையாற்றிய சந்திரசேகர், அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். யாழ்ப்பாணத்தில் அரசியல்…

Read More

துறைமுக நகர்த்திட்டம் மூலம் நாடு அதல பாதாளத்தில் விழும் – JVP

அரசாங்கத்தினால் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் துறைமுக நகர அபிவிருத்தி  திட்டத்தின்  மூலம் நாடு அதல பாதாளத்துக்கு செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் நிலவுகின்றன. எனவே இது தொடர்பான பூரணமான அறிக்கையொன்று எதிர்வரும் வாரம் மக்கள் விடுதலை முன்னணியினால் வெளியிடப்படும்  என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே    அவர் இதனை தெரிவித்தார்.  அவர்…

Read More

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உருவாக்கப்பட வேண்டும்!

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உருவாக்கப்பட வேண்டுமென ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் (15) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில், காணாமல் போனவர்கள் பற்றி கண்டறியும் அலுவலகம் மட்டும் போதுமானதல்ல.உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்றும் அவசியமாகின்றது. ராஜபக்ச கோட்பாடு போர் செய்வதாக கூறி திறைசேரியை காலியாக்கியதேயாகும். பயங்கரவாதத்தை ஒழிப்பதனைப் போன்றே திருடர்களிடமிருந்து நாட்டை மீட்க வேண்டுமென நாம் அந்தக் காலத்தில் கூறியிருந்தோம். போர் இடம்பெற்ற காலத்தில்…

Read More

இனவாதம் புதிதாய் தோன்றியுள்ளது!

உடனடியாக அழிக்கப்பட வேண்டிய இனவாதம் ஒன்று புதிதாக தோன்றி உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவ்வாறு கூறினார். குறிப்பாக யாழ். பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற சம்பவம் மீண்டும் ஓர் இரத்தக்கரை தோன்றா வண்ணம் தடுக்கப்பட வேண்டிய விடயம் எனவும் அநுரகுமார சுட்டிக்காட்டினார். அரசு மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் ஆகியன இணைந்து இதை தடுக்காவிட்டால், இதுவரையும் தோன்றிடாத மிக பயங்கரமான இனவாதமாக மாறும்…

Read More

ஜே.வி.பி ஒன்றுபடவேண்டும்: ஜாதிக ஹெல உறுமய

ஜே.வி.பியில் இருந்து பிரிந்து சென்றுள்ளவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்ப முன்வர வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் இறுதிக் கிரியைகளின்போது அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார். சோமவன்ச அமரசிங்க, இலங்கையின் இடதுசாரி அரசியலில் சர்வதேசவாதம் மற்றும் தேசியவாதம் என்ற இரண்டு கொள்கைகளை கொண்டிருந்ததாக தேரர் குறிப்பிட்டார். இந்த நிலையில் ஜே.வி.பியில் இருந்து பிரிந்து சென்றுள்ள…

Read More

சோமவன்சவின் மறைவு நாட்டுக்கு பேரிழப்பாகும் – அமைச்சர் றிஷாத்

மக்கள் விடுதலை முன்னனியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் மறைவு இலங்கை வாழ் மக்களுக்கு பாரிய இழப்பாகுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் விடுத்துள்ள அனுதாபச்செய்தியில் தெரிவித்துள்ளார். காலஞ் சென்ற அமரசிங்க இடது சாரி சிந்தனை கொண்டவர். இடது சாரிக் கொள்கையில் பற்றுறுதியுடன் வாழ்ந்து மக்கள் நலனுக்காக அரும்பாடு பட்டவர். இன நல்லுறவுக்காகவும் உழைத்தவர். இந்நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனத்தவர்கள் சமாதானமாகவும் சரி நிகராகவும் வாழ வேண்டுமென்பதற்காக அனைத்து…

Read More

சோமவன்ச அமரசிங்க காலமானார்

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தனது 73 ஆவது வயதில் காலமானார். ராஜகிரியவில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில்  காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

விஜித்த ஹேரத்க்கு, 1500 ரூபாய் அபராதம்

மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இருந்து, பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் விடுவிக்கப்பட்டுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் பயணித்த வாகனம் தொலைபேசிக் கம்பம் ஒன்றுடன் மோதி, நேற்று முன்தினம் இரவு இராஜகிரிய பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியது. இதன்பின்னர் இவருக்கு எதிராக மது போதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. இது தொடர்பில் வெலிகடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட விஜித்த ஹேரத், பின்னர் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். எதுஎவ்வாறு…

Read More

விஜித ஹேரத் எம்.பிக்கு பிணை

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ராஜகிரியவில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்துசம்பவம் தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டார்.

Read More

அவசர அனர்த்த நிலைமையைப் பிரகடனப்படுத்தவும்: ஜே.வி.பி

இயற்கை அனர்த்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை, சபாநாயகர் கரு ஜயசூரியவினால் விடுக்கப்பட்ட அறிவிப்புத் தொடர்பில் கருத்துரைத்தபோதே ஜே.வி.பியின் பிரசார செயலாளரும் எம்.பியுமான விஜித ஹேரத், நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலைமையைக் கவனத்தில் கொண்டு, அவசர அனர்த்த நிலைமையைப் பிரகடனப்படுத்துமாறு கோரி நின்றார். ‘இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்த, பாதிக்கப்பட்டோர் மற்றும் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளோர் தொடர்பில் நாமும் எங்களுடைய அவதானத்தை செலுத்துகின்றோம். பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவுகின்ற போது „சுற்றறிக்கை… இடையூறாக இருக்கின்றது. நலன்புரி நிலையங்களில் இருக்கின்ற மக்களுக்கு மட்டுமே உணவுகளை…

Read More

சம்பந்தனின் பதவியை பறிக்க இடமளிக்கமாட்டோம் – ஜே.வி.பி.

 ஜனா­தி­பதி, பிர­தமர் கன­வுகள் கலைந்­துள்ள நிலையில் சம்பந்­தனின் எதிர்க்­கட்சி ஆச­னத்­தை­யேனும் பறிக்கும் நோக்­கத்­தி­லேயே மஹிந்த அணி­யினர் செயற்­பட்டு வரு­கின்­றனர். பாரா­ளு­மன்­றத்தில் குழப்­பங்­களை மேற்­கொள்­ளவும், பயங்­க­ர­வாத கதை­களை பரப்­பவும் இதுவே காரணம் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக்க தெரிவித்தார். எம்­மீது பொய்க்­குற்றம் சுமத்தி எதி­ரணி பலத்­தினை குறைக்க முயற்­சிக்­கின்­றனர். ஆனால் நாம் இருக்கும் வரையில் அதற்கு இட­ம­ளிக்க மாட்டோம் எனவும் அவர் குறிப்­பிட்டார். எதிர்க்­கட்சி பத­விக்­காக தொடர்ச்­சி­யாக மஹிந்த அணி­யினர் போரா­டி­வரும் நிலை­யிலும், மக்கள்…

Read More

வதந்திகள் ஊடக எம்மை பிளவுப்படுத்த முடியாது: ஜே.வி.பி

மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி), வதந்திகள் ஊடாகப் பிளவுப்படுத்த முடியாது என்று, முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். ஜே.வி.பியின் தலைமைத்துவம் தொடர்பில் கட்சிக்குள் உள்வீட்டு முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், கே.டி.லால் காந்த அல்லது கட்சியின் செயலாளர் டில்வின் சில்வாவுக்குத் தலைமையை வழங்குமாறு, கட்சியின் மத்திய குழுவின் ஒரு பிரிவினர் அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் இதனால் அக்குழுவினருக்கும், தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவளிக்கும் குழுவினருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியிருந்த நிலையிலேயே, அநுரகுமார…

Read More