Headlines

கவர்ச்சிமிக்க இடமாக கொழும்பு உருவாக்கப்படும்!

லண்டன், நியூயோர்க் மற்றும் அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்ட ஹொங்கொங்இ சிங்கப்பூர் மற்றும் டுபாய் என்பவற்றின் அனுபவங்களை பெற்று அதனை விட கவர்ச்சி மிக்க இடமாக கொழும்பு நிதி நகரத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். நேற்று (22) கொழும்பில் நடைபெற்ற முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான நிகழ்வில் உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது: துறைமுகம், விமான நிலையம் மற்றும் நிதி நகரத்தை அண்டியதாக மாநகர திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. எமது தேசிய பூகோள வரைபடத்தை மீள…

Read More

ஆசிய கிரிக்கட் சபையின் தலைமையகம் கொழும்பில்

விளையாட்டுத்துறை அமைச்சர்  தயாசிறீ ஜயசேகரவால் ஆசிய கிரிக்கட் சபையின்  தலைமையகம்  இலங்கையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு – 07 மெயிட்லாண்ட் கிரிசென்ட் வீதியில் கடந்த 20ந் திகதி ஆசிய கிரிக்கட் சபை  தமது தலைமையகத்தை திறந்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் கிரிக்கட் சரித்திரத்தில், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். குறித்த  அலுவலகத் திறப்பு விழா வைபவத்தின் பிரதம அதிதியாக நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க சமூகமளித்திருந்தார்.

Read More

கொழும்பில் மீண்டும் ஒரு போராட்டம்!

சனச அபிவிருத்தி வங்கி ஊழியர்கள் இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். கொழும்பில் உலக வர்த்தக மையத்தின் முன்னிலையில் இன்று காலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. சனச வங்கி ஊழியர்களின் தொழிற் சங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த அமைப்பை உருவாக்கிய ஒருவரை பணிநீக்கம் செய்துள்ளதாகவும் இதை கண்டித்தே தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவித்தார்கள். சனச வங்கியை மக்கள் மத்தியில் பிரசித்தி பெறச் செய்தவரே குறித்த சங்கத்தை ஸ்தாபித்தவராவார். அரசாங்கத்தின் உதவியுடன் வங்கித் தலைவர்களே இவரை…

Read More

ஆர்ப்பாட்டங்களினால் கொழும்பு நகர் முழுதும் ஸ்தம்பிதம்!

ஆயுர்வேத வைத்தியர்களும், ஆயுர்வேத மருத்துவ பீட மாணவர்களும் ஒன்றிணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளார்கள். குறித்த ஆர்ப்பாட்டம் இராஜகிரியவில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு, சுகாதார அமைச்சு வரை சென்று ஜனாதிபதி செயலகத்திற்கு செல்கின்றது. ஆயுர்வேத வைத்திய பீடத்தில் 900 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. ஆனால் அதற்கான நியமனங்கள் வழங்கப்படவில்லை, குறித்த நியமனங்களை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தாலும் அதை நிறைவேற்றவில்லை என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படுவது…

Read More

கொழும்பின் பல பிரதேசங்களிலும் நீர் வெட்டு

நுகேகொடை மற்றும் கோட்டே ஆகிய பிரதேசங்களில் இன்றைய தினம் நீர்வெட்டுஅமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய எத்துல்கோட்டே, பிட்டகோட்டே, உடஹமுல்ல, நுகேகொடை, பாகொடை, ஹலெவல் வீதியின் நுகேகொடை சந்தியிலிந்து விஜேராம சந்தி வரையான பகுதிகளுக்கே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் நாவலை வீதியிலிருந்து திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதிகள் உட்பட இதனை அண்மித்த அனைத்து பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று இரவு 10…

Read More

கொழும்பில் எலித் தொல்லை அதிகரிப்பு!

தலைநகர் கொழும்பில் கடுமையான எலித் தொல்லை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு நகரில் துரித கதியில் எலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு பிரதான சுகாதாரப் பரிசோதகர் ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் 53000 வீடுகளுக்கு எலிகளை அழிப்பதற்கான மருந்த வகைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 50000 வீடுகளுக்கு இந்த மாதத்தில் இந்த வகை மருந்துகள் வழங்கப்படவுள்ளன. கொழும்பு நகரில் எலிகளின் எண்ணிக்கை அதி வேகமாக பரவி…

Read More

கொழும்பில் புதிய படகு சேவை

உல்லாசப்பிரயாணிகள் கொழும்பின் அழகை கண்டுகளிக்க படகு சேவையொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப் ​போவதாக வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம தெரிவித்தார். அண்மையில் பத்தரமுல்ல, தியத்த உயன கடற்படை படகு போக்குவரத்தை ஆரம்பித்து வைத்த அமைச்சர் வெள்ளவத்தை வரையிலான படகு போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கான வசதிகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கினார். இத்திட்டத்திற்கு உதவி வழங்கவுள்ள நெதர்லாந்து நாட்டின் உயர்ஸ்தானிகர் திருமதி ஜோன்ஏன் டுர்னேவோட்டும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த கேளிக்கை விடுதிகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த…

Read More

வாகன நெரிசலினால் 397 பில்லியன் ரூபா நட்டம்!

நகரங்களுக்கு இடையில் காணப்படுகின்ற அதிக வாகன நெரிசல் காரணமாக கடந்த ஆண்டில் மாத்திரம் சுமார் 397 பில்லியன் ரூபா இழக்கப்பட்டுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வாகனத்தின் வேகமானது மணிக்கு 20 கிலோமீற்றரிலிருந்து 12 கிலோமீற்றர் வரை குறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் பிரதான நகரமாக கொழும்பு விளங்குகின்ற போதிலும், அங்கு 68,000 பேர் சேரிபுர வாழ்க்கையில் ஈடுபட்டு வருவதாகவும், 500ற்கும் அதிகமான யாசகர்கள் காணப்படுவதாகவும், 16,000 நாய்கள்…

Read More

டெங்கு காய்ச்சலால் 44 பேர் பலி

டெங்கு காய்ச்சலால் இந்த வருடத்தில் மாத்திரம் 44 பேர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகபடியாக (8248) டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த இரு வாரத்தில் மாத்திரம் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 24,976 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன தெரிவித்தார். கடந்த காலத்தில் நிலவிய மழையுடனான காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் டெங்கு நுளம்பு…

Read More

தமிழ் மொழி மூல பாடசாலைகளின் கல்வி மேம்பாடு குறித்து ஆராயும் கூட்டம்

கொழும்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகளின் கல்வி மேம்பாடு குறித்து ஆராயும் கூட்டம், 2015 /11 /27 கொழும்பு ஹமீட் அல்-ஹுசைனியா பாடசாலையில் நேற்று இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான முஜீபுர் ரஹ்மான், மரிக்கார், இஷாக்…

Read More

கொழும்பில் 18 மணித்தியாலங்கள் நீர்வெட்டு

கொழும்பில் சில பகுதிகளில் 18 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்தள்ளது. இதற்கமைய கோட்டை, கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ, முல்லேரியா , கொலன்னாவை ஆகிய பகுதிகளில் நாளை சனிக்கிழமை (28) காலை 11 மணியிலிருந்து 18 மணித்தியாலங்கள் குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More