Headlines

கட்டார் நாட்டின் புதிய தொழில் சட்டம்

– நவ்பர் முஹம்மது – கட்டாரில் வசிக்கும் நீங்கள் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த கட்டார் நாட்டின் புதிய தொழில் சட்டம் இன்று ( 28/10/2015)) நாட்டின் கௌரவ அமீர் தமீம் பின் ஹமத் அல தானி அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான சில விபரங்களை இன்றைய “அல் வதன்” பத்திரிகையில் இருந்து அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.1.கபாலத் முறை நீக்கப்பட்டு தொழில் வழங்குனர், தொழில் பெறுனர் என்ற முறைமை கொண்டுவரப்பட்டுள்ளது. 2. குறூஜ் எனும் வெளிநாட்டு தொழில் பெறுனர்கள் நாட்டை…

Read More

துபாயில் தானியங்கி மருத்துவ‌ பரிசோதனை நாற்காலி

துபாயில் நவீன தானியங்கி மருத்துவ‌ பரிசோதனை நாற்காலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் அமர்ந்து இரத்த அழுத்தம், இதயதுடிப்பு உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை யாருடைய உதவியுமின்றி செய்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற துபாயில் நடைபெற்ற ஜிடெக்ஸ் தொழில்நுட்ப கண்காட்சியில் துபாய் சுகாதாரத்துறையின் சார்பில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த நவீன நாற்காலியில் அமர்ந்து 6 நிமிடங்களில் பரிசோதனை முடிவுளை பெற முடியும். நவீனமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நாற்காலியில் அமர்ந்து இரத்த அழுத்தம், இதய துடிப்பு, கூடுதல் எடை,…

Read More

எனது குறைகளை சுட்டி காட்டகுடியவர்களுக்கு இறைவன் அருள் செய்வானாக!

சவூதி மன்னர் சல்மான் தாம் மாறுபட்ட ஒரு ஆட்சியாளர் என்பதை அவ்வப்போது தனது நடை முறைகள் மூலம் மெய்பித்து வருகிறார். நேற்யை தினம் செய்தியாளர்களை அவர் சந்தித்தபோது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர். மக்களின் கோரிக்கைகளை செவியுறுவதர்காக நமது சபைகளும் காதுகளும் தொலைபேசிகளும் எந்த நேரமும் தயார் நிலையில் உள்ளது என்று கூறிய அவர். எனது குறைகளை சுட்டி காட்டகுடியவர்களுக்கு இறைவன் அருள் செய்வானாக எனவும் அவர் செய்தியாளர்களுக்கு மத்தியில் தெரிவித்தார்

Read More

வாட்ஸ்அப் மெசேஜ்களின் ரகசியத்துக்கு பாதுகாப்பு இல்லையா?

செக்கோஸ்லாவாகியா நாட்டின் ப்ர்னோ தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் மூலமாக வாட்ஸ்அப்பில் ரகசியமான முறையில் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் குறிப்புக்கள் எங்கேயோ உள்ள அதன் கணிப்பொறிகளில் பதிவு செய்யப்படும் என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் நமது அலைபேசி எண்ணுடன், இதன் அழைப்புகளையும் பதிவு செய்து தமது கணிப்பொறிகளில் சேமித்துக் கொள்கின்றது. ஆகவே, இது ஹேக்கர்களின் கைகளில் சிக்கினால் நமது ரகசியம் எளிதில் வெளியே கசியலாம் என அச்சுறுத்தும் செய்தி தற்போது வெளியாகியுள்ளது. இந்தக் கணிப்பொறிகள் பாதுகாப்பு மிகுந்ததாகத்தான்…

Read More

இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தினால் புதிய பாடநெறி அறிமுகம்!

இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தினால் பொது முகாமைத்துவ முதுமானி இலத்திரனியல் ஆட்சி (MPM – Master of Public Management in E-Governance) என்ற புதிய பாடநெறியொன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஆரம்பத்தில் பொது முகாமைத்துவ முதுமானி என்ற பிரிவில் மட்டுமே நடைபெற்றது. தற்போது இக்கற்கை நெறியானது இரண்டு பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அவ்வகையில் பொது முகாமைத்துவ முதுமானி (Master of Public Management) மற்றும் இலத்திரனியல் ஆட்சி (Master of Public Management in E-Governance) என்ற இரு…

Read More

கொண்டயாவின் புகைப்படங்கள்! (photo)

கொட்டதெனியாவ சிறுமி சேயா சதேவ்மி கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கொண்டயா என்ற துனேஷ் பிரியசாந்த காவற்துறையின் தடுப்பில் இருக்கும் போது தாக்கப்படவில்லை என காவற்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார். எனினும் காவற்துறையினர் தன்னை கடுமையாக தாக்கியதாக கூறியிருந்த துனேஷ் பிரியசாந்த, காவற்துறையினரின் தாக்குதலில் உடலில் ஏற்பட்ட காயங்களின் தழும்புகள் காட்டும் புகைப்படங்களை ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார். இதனால், காவற்துறைப் பேச்சாளார் தாக்குதல் நடத்தப்படவில்லை என கூறியிருப்பது சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. சிறுமி சேயாவின் கொலை சம்பந்தமான…

Read More

ஜெயலலிதாவுக்கு நாங்கள் பயமில்லை: அமைச்சர் மஹிந்த அமரவீர

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவார்கள் என மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமுக்கு நாங்கள் பயமில்லை. இலங்கையின் கடல் எல்லையை மீறும் மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடரும். அத்துடன் எல்லை மீறி வந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் மீன்பிடி…

Read More

றிஷாத் மீதான கல்லெறியும் ஏமாற்றப்பட்ட மக்களும்

– ஏ.எச்.எம்.பூமுதீன் – அம்பாரை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு வழங்கப்படும் என்று இறுதி நேரம் வரை உறுதியளிக்கப்பட்ட முகாவின் தேசியப்பட்டடியல் புஷ்வானமாகிவிட்டது. யானைப்பசிக்கு சோளப்பொறி என்பது போல் அட்டாளைச்சேனை மக்களின் 30 வருட கால தவத்திற்கு பெரும் , எதிர்பார்ப்புக்கு கிழக்கு சுகாதார அமைச்சு என்னும் பதவியை வழங்கி மு.கா அம்மக்களை ஏமாற்றி விட்டது. பொதுத்தேர்தலின்போது நாடுபூராகவுமுள்ள முஸ்லிம் கிராமங்களுக்கெல்லாம் சென்ற ரவூப் ஹக்கீம் தேசியப்பட்டியல் ஆசையை ஊட்டி அம்மக்களின் வாக்குகளை சூரையாட பெரும் கைங்கரியங்களை எல்லாம்…

Read More

முல்லைத்தீவில் அதிர்ச்சி கொடுத்த 70 அடி நீளமான திமிங்கலம்!

முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதி கடற்பரப்பில் 70 அடி நீளமான திமிங்கலம் ஒன்று மீனவர்கள் வலையில் சிக்கியுள்ளது. எனினும் உயிருடன் பிடிபட்ட திமிங்கலம் எட்டு மணி நேர போராட்டத்தின் பின்னர் கடலினுள் மீண்டும் விடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த 23ம் திகதி கொக்கிளாய் கடற்பகுதியில் நடைபெற்றுள்ளது. ஆழ்கடலில் மீனவர்களின் வலையில் சிக்கிய திமிங்கலம் கடுமையான அலைகளால் கரைக்கு இழுத்து வரப்பட்டது. இது குறித்து முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர், முல்லைத்தீவு படைகளின் தலைமையகத் தளபதி மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து உயிருடன்…

Read More

மஹிந்த ஆணைக்குழுவின் முன் பிரசன்னம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மீண்டும், பாரிய மோசடிகள் மற்றும் ஊழல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரசன்னமாகியுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்காக செய்யப்பட்ட விளம்பரங்களுக்காக சுயாதீன தொலைகாட்சிக்கு நிதி வழங்காமை தொடர்பிலேயே இன்றும் நாளையும், ஜனாதிபதி ஆணைக்குழுவினால் அவரிடம் வாக்கு மூலம் பெறப்படவுள்ளது.

Read More

மன்னிப்பு கேட்ட வோக்ஸ்வேகனின் புதிய சி.இ.ஓ.

ஜப்பானின் நடந்துவரும் வாகன கண்காட்சியில், மாசுக்கட்டுப்பாடு தொடர்பான மென்பொருளில் மோசடி செய்தற்காக வோக்ஸ்வேகனின் புதிய சி.இ.ஓ. மன்னிப்பு கேட்டுள்ளார். கடந்த மாதம் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை, வோக்ஸ்வாகன் டீசல் கார்களின் மாசுக்கட்டுப்பாடு தொடர்பான மென்பொருளில் மோசடி செய்திருப்பதை கண்டறிந்து அது பற்றிய செய்தியை வெளியிட்டது. ஒரு கோடியே 10 லட்சம் டீசல் கார்களின் மாசுக்கட்டுப்பாட்டில் மோசடி செய்திருப்பதை அந்த நிறுவனமும் ஒப்புக்கொண்டது. இதற்காக மன்னிப்பும் கேட்டது. இந்த செய்தி வெளியான பிறகு வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் பங்குகள்…

Read More