Headlines

பிரதி அமைச்சு பதவியை, நிராகரித்த அரசியல்வாதி

மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துடன் இணைந்து கடமையாற்றத் தாம் தயாரில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபால கம்லத் தெரிவித்துள்ளார். இதேவேளை, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சுப் பதவி சிறிபால கம்லத்திற்கு வழங்கப்படவிருந்தது. நேற்று நடைபெற்ற பதவிப் பிரமாண நிகழ்வுகளில் கம்லத் பங்கேற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

ஒலுவில் பிரதேசத்தில், பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு

-Muhajireen Buhary- ஒலுவில் பிரதேசம் கடலரிப்பினால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதை அரசாங்கத்தினதும் அரசியல்வாதிகளினதும் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில்  வெள்ளிக்கிழமை (11) ஒலுவிலில் மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் நடைபெறவுள்ளன. ஒலுவிலுள்ள பள்ளிவாயல்களின் நிருவாக சபைகள், சமூக சேவை அமைப்புக்கள், பொது நிறுவனங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் போன்றன ஒன்றிணைந்து ஒழுங்கு செய்துள்ள இவ்வார்ப்பாட்டப் பேரணி, ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து பி.ப. 1.15 மணியளவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. ஒலுவில்…

Read More

‘105 பயணிகளின் உயிர் காக்கப்பட்டது’

விமானியின் சாமர்த்தியத்தால் 105 பயணிகள் காப்பாற்றப்பட்ட சம்பவமொன்று சென்னையில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி வருமாறு, இலங்கையில் இருந்து 105 பயணிகளுடன் நேற்று இரவு விமானம் ஒன்று சென்னைக்கு புறப்பட்டு வந்தது. இன்று அதிகாலை 2.30 மணியளவில் அந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்க முயன்றது. அப்போது விமானத்தின் சக்கரத்தில் பழுது ஏற்பட்டிருப்பதை விமானி கண்டு பிடித்தார். இதையடுத்து மிகவும் லாவகமாக அந்த விமானத்தை தரை இறக்கினார். விமானியின் சாமர்த்தியத்தால் சக்கரம்…

Read More

சீனி, உருளைக்கிழங்கு இறக்குமதி வரி அதிகரிப்பு

இன்று முதல் அமுலாகும் வகையில் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் சீனிக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் கிலோ ஒன்றுக்கான வரி ரூபா 10 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, இறக்குமதி செய்யப்படும் சீனியின் கிலோ ஒன்றுக்கான வரி ரூபா 12 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய உற்பத்தியாளர்களின் உற்பத்திகள் சந்தையில் கிடைப்பதாலும் அவர்களை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும்…

Read More

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு அதிகாரி உட்பட பலர் விபத்தில் பலி

மினுவாங்கொட, யாகொடமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு அதிகாரி உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பஸ்கள் மற்றும் ஜீப் ஒன்றுடன் ஒன்று மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த ஐவர் இதுவரை கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read More

முழு பாரா­ளு­மன்­றத்தையும் அர­சாங்­க­மாக மாற்­ற­வுள்ளோம் – பிரதமர்

புதிய பாரா­ளு­மன்­றத்தில் அமைச்­சர்கள், இரா­ஜாங்க அமைச்­சர்கள் மற்றும் பிரதி அமைச்­சர்கள் தமக்கு வரும் கேள்­வி­க­ளு க்கு பதில் அளிக்கும் வகையில் கட்­டா யம் பாரா­ளு­மன்ற ஆச­னத்தில் அமர்ந்­தி­ரு க்க வேண்டும். இதற்­கான விசேட கட்­ட­மைப்­பினை நாம் கொண்டு வர­வுள்ளோம். இதன்­ பி­ர­காரம் அமைச்­சர்­க­ளுக்­கான வெளிநாட்டு பய­ணங்­க­ளையும் மட்­டுப்­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். மோதிக் கொண்­டி­ருந்த இரண்டு பிர­தான கட்­சி­களும் ஒன்று சேர்ந்­துள்­ளன. இது நாட் டின் வர­லாற்று புரட்­சி­யாகும். மேலும் நாட்டின் அனைத்து பிரச்­சி­னை­க­ளுக்கும்…

Read More

பாகிஸ்தான் நான்கு துண்டுகளாக்கப்படும் – சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக இந்­தியா யுத்­தத்தை பிர­க­ட­னப்­ப­டுத்­தாது. ஆனால், இந்த முறை யுத்தம் நடந்தால் பாகிஸ்­தானை இந்­தியா 4 நாடு­க­ளாக பிள­வு­ப­டுத்­தி­விடும் என்று பா.ஜ.க.தலை­வர்­களில் ஒரு­வ­ரான சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார். ஜம்மு – காஷ்மீர் எல்லைப் பகு­தியில் கன­ரக ஆயு­தங்­க­ளுடன் பாகிஸ்தான் தொடர்ச்­சி­யாக தாக்­கு­தலை நடத்தி வரு­கி­றது. இந்த நிலையில் இந்­தியா- , பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் இந்­தி­யா­வுக்­குதான் பேரி­ழப்பு ஏற்­படும் என்று பாகிஸ்தான் இராணுவ தலைமை தள­பதி ரஹீல் ஷெரீப் மிரட்டல் விடுத்­துள்ளார். இது தொடர்­பாக…

Read More

புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளில் 3 நாட்களுக்கு மின்வெட்டு

புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய காலை 8.30 மணி முதல் மாலை 4 மணிவரையான காலப்பகுதிக்குள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் புத்தளம் மாவட்ட மின் பொறியிலாளர் பணிம​னை அறிவித்துள்ளது. உயர் அழுத்த மின் கம்பி கட்டமைப்புகளில் முன்னெடுக்கப்படவுள்ள அவசர திருத்த வேலை காரணமாக மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலாவி தொடக்கம் கற்பிட்டிக்கு இடைப்பட்ட பல பகுதிகளில் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது ….

Read More

பிரதி மற்றும் இராஜாங்க முஸ்லிம் அமைச்சர்களின் விபரம்

இராஜாங்க அமைச்சர்கள் ஏ.எச்.எம்.பௌசி – தேசிய ஒருமைப்பாட்டு ஹிஸ்புல்லாஹ் – மீள்குடியேற்றம் பைசல் முஸ்தபா – உள்ளுராட்சி பிரதியமைச்சர்கள் அமீர் அலி – கிராமிய பொருளாதாரம் பைசல் காசிம் – சுகாதாரம் முகம்மட் ஹரீஸ் -விளையாட்டு

Read More

அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவோம் – அமைச்சர் றிஷாத் பதியுதீன் அழைப்பு

கட்சி அரசியலை ஒரு புறம் வைத்துவிட்டு இந்த நாட்டு மக்களின் அபிலாஷைகளுக்கு முன்னுரிமையளிக்கும் வகையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவோம் என இன்று தமது அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக் கொண்ட கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கண்டவாறு அழைப்பு விடுத்தார். கொழும்பு நவம் மாவத்தையில் அமைந்துள்ள தமது அமைச்சின் முன்றலில் இடம் பெற்ற பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த நாட்டில் ஒரு நல்லாட்சியினை ஏற்படுத்த வேண்டும்…

Read More

களுத்துறையில் நீர்வெட்டு

களுத்துறை பிரதேசத்தின் சில பகுதிகளில் இன்று நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. குறித்த நீர் வெட்டு இன்று காலை 8 மணி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த நீர்வெட்டானது வாதுவ, களுத்துறை, பயாகல, அளுத்கம, பேருவளை ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தப்படவுள்ளது. களுத்துறை கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளவுள்ள திருத்தப் பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More