Headlines

பெரியமடு மஹா வித்தியாலயத்தில் நவோதய கட்டிடம் திறப்பு

இன்று  எமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதிகளையும்,சவால்களையும் முகம் கொடுக்கும் துணிவை இறைவன் கொடுத்துள்ளான் என தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் அரசியலை மக்களின் விமோசனத்திற்காக பயன்படுத்தாமல் தனிப்பட்ட நோக்கங்களுக்காக செயற்படுத்துகின்ற போது அது மக்களின் முன்னேற்றத்திற்கு பெரும் பின்னடைவாகும் என்றும் கூறினார். மன்னார் மாவட்டத்தின் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியமடு மஹா வித்தியாலயத்தில் 90 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நவோதய கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். மடு…

Read More

முசலி பிரதேச பரிசளிப்பு விழா

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற கழகங்களுக்கான பரிசளிப்பு விழா செவ்வாய்க்கிழமை முசலி தேசிய பாடசாலையில் இடம் பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அழைத்துவரப்படுவதையும்,முசலி பிரதேச சபை தவிசாளர் தேசமான்ய யஹ்யான்,வடமாகாண இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் எம்.முனவ்வர் ஆகியோர் அமர்ந்திருப்பதயும்,வெற்றி பெற்ற அணிக்கு வெற்றிக் கிண்ணத்தினை மாகாண சபை உறுப்பினர் வழங்கி வைப்பதையும் படத்தில் காணலாம்.

Read More

விபத்தில் 20 பேர் காயம்!

தலவாக்கலை – லோகி தோட்டம் பகுதியில் பவுஸர் ஒன்றும் பஸ் வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்!

ஊவா மாகாணத்தில் வேலையில்லா  பட்டதாரிகளுக்கு உடன் தொழில் வழங்க கோரி ஊவா மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்ட பேரணி பதுளை பஸ் தரிப்பிடத்திலிருந்து ஊவா மாகாண சபை வரை ஊர்வலமாக சென்று அதன்பின் ஊவா மாகாண சபைக்கு முன்பு சுமார் 3 மணி நேரம் பொலிஸ் பாதுகாப்புடன் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதன்போது 150ற்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டகாரர்கள் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு…

Read More

இலங்கைக்கு அமெரிக்கா பாராட்டு

இலங்கையில் மீண்டும் ஜனநாயக கட்டமைப்புகளை ஏற்படுத்தியதற்காகவும், ஊழலிற்கு எதிரான போராட்டத்திற்காகவும் இலங்கை மக்களுக்கு அமெரிக்கா தனது பாராட்டை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 29 அமர்வு நேற்று ஆரம்பமாகியது. அந்த அமர்வில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே அமெரிக்கா இதனை குறிப்பிட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அதன் பாதையில் தொடர்ந்தும் பயணிக்குமாறும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தினால் ஆகஸ்டில் வெளியிடப்படவுள்ள அறிக்கையை எதிர்பார்த்திருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. செப்டம்பரில் அறிக்கையை…

Read More

நம்பத்தகுந்த பொறிமுறை அவசியம்- செய்ட் அல் ஹுசைன்

இலங்கையில் சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்போது நம்பத்தகுந்த பொறிமுறை ஒன்று அவசியம் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன், 29வது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆரம்ப நிகழ்வில் நேற்று பங்கேற்று இந்த கோரிக்கையை விடுத்தார். இலங்கை அதிகாரிகள் இந்த விடயத்தில் தெளிவான கலந்துரையாடல்களை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இலங்கை அரசாங்கம் நிறைவேற்றிய அரசியல்அமைப்பு திருத்தம், நாட்டில் புதிய ஜனநாயக ஆட்சி தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது…

Read More

வருட இறுதியில் இலங்கை வருகிறார் ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இந்த வருட இறுதியில் இலங்கை வரவுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Read More

பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தல்

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைய, தரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை கட்டளைகள் நிறுவனம் வர்த்தகர்களுக்கு அறிவித்துள்ளது. தரச் சான்றிதழை பெற்றுக்கொள்வதற்குத் தேவையான வசதிகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி லலித் சேனவீர தெரிவித்தார். நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைய, குடிநீர் பாவனைக்கு பயன்படுத்தும் பிலாஸ்டிக் போத்தல்கள் உற்பத்தி, இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் வழிகாட்டல்களுக்கு அமைய முன்னெடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்வுகளுக்கு உணவுப் பொருட்கள் மற்றும்…

Read More

திறந்தவெளி மிருகக்காட்சிசாலைக்கு வருகை தருவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பின்னவல திறந்தவெளி மிருகக்காட்சிசாலைக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் வருகையால், 08 மில்லியனுக்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ரேணுகா பண்டாரநாயக்க குறிப்பிட்டார். நாளாந்தம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகவும் அவர் தெரிவித்தார். பின்னவல திறந்தவெளி மிருகக்காட்சிசாலையில் 40 இற்கும் அதிகமான விசேட உயிரினங்களை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

நீதிமன்றில் மயங்கி விழுந்த வித்தியாவின் அண்ணன்!

யாழ்.ஊர்காவல்துறை நீதிமன்றில் இன்று நடைபெற்ற வித்தியா கொலை வழக்கு விசாரணையில் சாட்சியமளித்த அவரது அண்ணனான நிசாந்தன் மயக்கமடைந்த நிலையில் ஊர்காவல்த்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஊர்காவல்துறை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வித்தியாவின் படுகொலைக்குப் பின்னர் அவரது குடும்பத்தினர் உளவியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதன் காரணமாகவே இன்று நீதிமன்றத்தில் வித்தியாவின் அண்ணன் மயங்கி விழுந்துள்ளதாக அவர்களது உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Read More

சியாம் கொலை – வாஸ் குணவர்தனவுக்கு பிணை?

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐந்து பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. கோடீஸ்வர வர்த்தகரான சியாம் மொஹமட் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட குழுவினர், சுமார் இரண்டு வருடகாலமாக சிறை வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மகனும் அடங்குவார். எனினும் சட்டவிரோத ஆயுதங்களை தம்மிடம்…

Read More