Headlines

றிஷாத் பதியுதீனை புதன் கிழமைக்குள் கைது செய்ய வேண்டும் – சிங்ஹல ராவய எச்சரிக்கை

அமைச்சர் ரிசாத் பதியுதீனை நாளை மறுதினம் புதன் கிழமைக்குள் கைது செய்ய வேண்டும் என சிங்ஹல ராவய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வில்பத்து, மடு போன்ற பகுதிகளில் காடழிக்கப்பட்டு வருவாதகவும் அது தொடர்பிலானவர்கள் உடன் கைது செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள சிங்ஹல ராவய குறித்த தினத்திற்குள் ரிசாத் பதியுதீ;ன் கைது செய்யப்படவில்லையாயின் எமது அமைப்பு பலத்த ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ளும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. காடழிப்பு நிறுத்தப்பட்டாலும் அது தொடர்பில் நீதி நிலைநாட்டப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு…

Read More

கல்முனை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தரமுயர்வு

அஸ்ரப் ஏ சமத் கல்முனை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நகர அலுவலகமாக தரமுயர்த்தி 16.06.2015 செவ்வாய்க் கிழமை காலை 10.00 மணிக்கு திறந்து வைக்கப்படுகின்றது. இவ் வைபவம் இன்று திங்கட் கிழமை நடைபெறவிருந்தும் சாய்ந்தமருதூரில் இன்று ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்ட்டதால் இவ் வைபவம் நாளை நடைபெற ஏற்பாடக உள்ளது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர் அலியினால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்படும். ;அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எல். எஸ்…

Read More

முஸ்லிம் மீடியா போரத்தின் போட்டிக்கான இறுதித் திகதி நீடிப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது 20ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடாத்தும் பரிசுப் போட்டிகளுக்கான இறுதித் திகதி ஒகஸ்ட் 01ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Read More

பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு

உடவலவ – மிரிஸ்வெல்பொத்த பாடசாலைக்கு அருகிலிருந்து மாணவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 17 வயதுடைய மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலத்தில் வெட்டுக்காயங்கள் இருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த மாணவன் நேற்று தனியார் வகுப்பிற்கு சென்று  வீடு திரும்பாமையினால்  அவரது தந்தை சம்பவம் தொடர்பில்  பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று காலை குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Read More

இலங்கையில் 107,000 சிறுவர் தொழிலாளிகள்!

2008ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது இந்த தகவல் வெளியானதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் நட்டாஸா பாலேந்திரா தெரிவித்துள்ளார். இந்தநிலையில் சிறுவர் தொழிலாளிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்;டுள்ளார். சிறுவர்களுக்கு உரிய கல்வி வழங்கப்பட வேண்டியது அவர்களின் உரிமையாகும். எனினும் பல சிறுவர்கள் இன்று தொழிலாளிகளாக மாற்றப்பட்டுள்ளனர் என்று நட்டாஸா தெரிவித்துள்ளார். இலங்கையின் கல்விக் கொள்கையை பொறுத்தவரையில், 18வயது வரை அவர்கள் பாடசாலை கல்வியை பெறவேண்டும் இதற்கு கீழ் உள்ள…

Read More

கர்ப்பிணிகள் மைக்ரோவேவ் ஓவன், ஹேர் டிரையர் பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வரும்!

கர்ப்பிணிகள் மைக்ரோவேவ் ஓவன், ஹேர் டிரையர் மற்றும் வேக்கம் கிளீனர் ஆகிய சாதனங்களுக்கு அருகில் நீண்ட நேரம் இருந்தால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வர வாய்ப்பு அதிகம் என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் குழந்தைகளிடம் ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்தனர். மைக்ரோவேவ் ஓவன், ஹேர் டிரையர் மற்றும் வேக்கம் கிளீனர் உள்ளிட்ட மின்காந்த சக்தி(மைக்ரோவேவ்) அதிகம் உள்ள கருவிகளின் பயன்பாடு பற்றி 801 கர்ப்பிணிகளிடம் கருத்து கேட்டனர். பின்னர் அவர்களுக்கு பிறந்த குழந்தைகளின்…

Read More

கொழும்பு -09 ல் புதிய ஜூம்ஆப் பள்ளிவாசல் திறப்பு

அஸ்ரப் ஏ சமத் கொழும்பு -09 ஆரமாய பிளேசில் உள்ள தொடா் மாடி வீடமைப்புத் திட்டத்தில் அருகில் புதிய ஜூம்ஆப் பள்ளிவாசல் நேற்று காலை திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வுக்கு அமைச்சா்கள்  ரவுப் ஹக்கீம், ஏ.எச்.எம் பௌசி, மேல் மாகாண சபை உறுப்பிணா்கள், அர்சத், பைருஸ் ஹாஜி மற்றும் இப்பிரதேச ஹிந்து, பௌத்த,  கிரிஸ்த்துவ மத குருமாா்களும் கலந்து கொண்டனா். அத்துடன் சர்வதேச இஸ்லாமிய நிலையம், நவ்பா் மௌலவி, ஜம்மியத்துல் உலமா  முபாரக் மௌலவி ஆகியோறும் உரையாற்றினாா்கள்.

Read More

சூடான் அதிபரை கைதுசெய்யுமாறு ஐசிசி தென்னாப்பிரிக்காவிடம் கோரிக்கை

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐசிசி) முன்னால் நிறுத்தப்பட வேண்டியவர் என்று அறிவிக்கப்பட்ட சூடான் அதிபர் ஒமர் அல் பஷிர் ஆப்பிரிக்க யூனியன் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ளார். மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகிய குற்றச்சாட்டுக்கள் ஒமர் அல் பஷிர் மீது சுமத்தப்பட்டுள்ளன.அவரைக் கைதுசெய்யுமாறு தென்னாப்பிரிக்க அரசாங்கத்திடம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கோரியுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஏற்றுக்கொண்டுள்ள உறுப்புநாடுகளில் ஒன்றான தென்னாப்பிரிக்கா சூடான் அதிபரைக் கைதுசெய்வதற்கு கடமைப்பட்டுள்ளது. சர்வதேச நீதிமன்றத்தின் இந்த…

Read More

சூடானிய அதிபர் தென்னாப்பிரிக்காவை விட்டு வெளியேறத் தடை

சூடானிய அதிபர் ஓமார் அல் பஷீரை தென்னாப்பிரிக்காவை விட்டு வெளியேறமுடியாதவாறு விதிக்கப்பட்டுள்ள உத்தரவை அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று நீட்டித்துள்ளது. அவரைக் கைதுசெய்து, போர்க்குற்ற விசாரணைகளுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டுமா என்பது தொடர்பான இன்னொரு விசாரணை திங்களன்று நடக்கவுள்ளது. ஆப்பிரிக்க யூனியன் மாநாட்டுக்காக அல் பஷீர் ஜொஹன்னஸ்பர்க் நகரில் உள்ளார். ஏனைய ஆப்பிரிக்கத் தலைவர்களுடன் அவர் சேர்ந்து நிற்கும் நிழற்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அவர் கைதுசெய்யப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் மாநாடு முடிந்து அவர் நாடுதிரும்புவார்…

Read More

நேர்மையாக நடந்து கொண்ட முஹம்மது நிப்ராஸ்!

சகல இலங்கையர்களுக்கும் பெருமையைத் தேடித்தரும் விதத்தில், கட்டார் நாட்டில் இலங்கை இளைஞரின் நேர்மை கட்டார் நாட்டின் பொது இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 90,000 கட்டாரி ரியால்களை இலங்கையைச் சேர்ந்த சகோதரர் முஹம்மத் நிப்ராஸ் என்பவர் அவ்விடத்திற்கு உரிய பாதுகாப்பு அதிகாரியினூடாக போலீஸிடம் ஒப்படைத்ததையிட்டு கத்தார் நாட்டின் பாதுகாப்பு திணைக்களத்தின் Brigadier Nasser Jabr Al-Nuaimi அவர்கள் இவரின் இந்த நல்ல செயலை பாராட்டியதுடன், கத்தார் தலைமை பாதுகாப்பு திணைக்களத்தின் இணையத்தளத்தில் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. இலங்கை ரூபா சுமார் 32…

Read More

விண்ணப்பங்கள் இதுவரை கிடைக்காதவர்கள் கிராம உத்தியோகத்தரை அணுகுமாறு அறிவுறுத்தல்

வாக்காளர் இடாப்பில் பதிவதற்கான விண்ணப்பங்கள் இதுவரை கிடைக்காதவர்கள் சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தர் அல்லது விசேட கணக்கெடுப்பாளர் அதிகாரியை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு தேர்தல்கள் திணைக்களம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் நடவடிக்கைகளுக்கு அமைவாக இந்த நாட்களில் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார். இவ்வருடத்துக்குரிய விண்ணப்பப் படிவங்கள் யாவும் கிராம உத்தியோகத்தர் மற்றும் விசேட கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதென தேர்தல்கள் திணைக்களம் அனுமானித்துள்ளதாக…

Read More

கரையோர பிரதேசங்களின் நிலத்தடி நீர் தொடர்பாக ஆய்வுகள் ஆரம்பம்

ரையோர பிரதேசங்களின் நிலத்தடி நீர் தொடர்பாக ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவிக்கின்றது. கடரையோரப் பிரதேசங்களில் நிலத்தடி நீர் அதிக உப்புத் தன்மையுடன் இருப்பதால் அதனை குடிநீராகப் பயன்படுத்த முடியாது மக்கள் சிரமப்படுவதாக நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபையின் தலைவர் சுல்பிகர் காதர் தெரிவிக்கிறார். மன்னார் உள்ளிட்ட கரையோர பிரதேசங்களில் நிலத்தடி நீரின் தன்மை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். புத்தளம் போன்ற கரையோரத்தை அண்டியுள்ள பிரதேசங்களில் நிலத்தடி நீரை குடிநீராகப் பயன்படுத்த…

Read More