Headlines

வளைகுடாவில் நாளை முதல் ரமழான் நோன்பு!

சவூதி, துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் நாளை வியாழக்கிழமை முதல் ரமழான் நோன்பு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. நேற்று, இரவு சவூதியில் எந்த பகுதிகளிலும் ரமழான்  பிறை தென்படாததால் ஷஃபான் பிறை 30 என கணக்கிடப் பட்டு, நாளை வியாழன் ரமழான்  முதல் நோன்பு கடைபிடிக்கப்படும் இதற்கிடையே நேற்று ரமழான்  பிறை தென்பட்டால் உடன் தகவல் தர வேண்டும் என்று சவூதி வாழ் மக்களுக்கு சவூதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

தரம் ஒன்றிற்கான அனுமதியில் அரசியல்வாதிகளின் தலையீடுகளுக்கு இடமில்லை!

அடுத்த வருடம் தரம் ஒன்றிற்கு பிள்ளைகளை அனுமதிக்கும்போது அரசியல்வாதிகள் தாம் விருப்பிய பிள்ளைகளின் பெயர்பட்டியல்களை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தேசிய மற்றும் மாகாண மட்டத்திலுள்ள அரசியல்வாதிகள் பலர் கடந்த காலத்தில் தம்முடன் நெருங்கிப் பழகுவோரின் பிள்ளைகளை சட்டவிரோதமாக பாடசாலைகளில் சேர்த்துள்ளதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இதனால் உரிய தகைமைகளை பூர்த்தி செய்யாத பிள்ளைகளும் பாடசாலைகளுக்கு சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். நாட்டிலுள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் பாடசாலைகளில் தரம் ஒன்றில்…

Read More

ஹஜ் ஏற்பாடுகளை அரசாங்கம் பொறுப்பேற்பதே தீர்வுக்கு வழி – அமைச்சர் பௌசி

‘ஹஜ்’ கோட்டா பகிர்வில் ஊழல்கள் இடம்­பெற்­றுள்­ள­தாகக் கூறி தொடர்ந்து நீதி­மன்­றத்தை நாடு­வது சமூ­கத்­துக்கு அவப் பெய­ரையே ஏற்­ப­டுத்தும். இதைத்­த­டுப்­ப­தற்கு ஒரே வழி ஹஜ் ஏற்­பா­டு­களை அர­சாங்கம் பொறுப்­பேற்­ப­தாகும் என அனர்த்த முகா­மைத்­துவ அமைச்­சரும் முன்னாள் ஹஜ் குழுவின் இணைத்­த­லை­வ­ரு­மான ஏ.எச்.எம் பௌசி தெரி­வித்தார். இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் கோட்டா பகிர்வில் அநீ­தி­யி­ழைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் நீதி­மன்றம் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்த பொறி­மு­றைக்­கேற்ப கோட்ட பகி­ரப்­ப­ட­வில்லை எனத்­தெ­ரி­வித்து அதற்கு இடைக்­கால தடை­யுத்­த­ரவு விதிக்கக் கோரி மூன்று முகவர் நிலைய உரி­மை­யா­ளர்கள் உயர்­நீ­தி­மன்­றத்தில் வழக்­கொன்று தாக்கல் செய்­ய­துள்­ளமை…

Read More

ரமழான் தலைப்பிறை தொடர்பான மாநாடு இன்று

ரமழான் மாதத்தை தீர்மானிக்கும் விஷேட மாநாடு இன்று 17 ஆம் திகதி புதன் கிழமை மஃரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளியில் இடம் பெறவுள்ளது. இன்றைய தினம் மாலை நேரம் 6.27 மணி முதல் ரமழான் மாதத்திற்கான தலைப் பிறை பார்க்குமாறும் இலங்கையின் எப்பாகத்திலாவது பிறை தென்பட்டால் தகுந்த ஆதாரங்களோடு நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ அறியத்தருமாறு கொழும்பு பெரிய பள்ளி நிர்வாகம் அனைத்து இலங்கை. முஸ்லிம்களயும் கேட்டுக்கொள்கிறது. தொலைபேசி இலக்கங்கள் – 0112432110 0115234044…

Read More

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை நகர காரியாலய திறப்பு விழா

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை நகரகாரியால  திறப்பு விழாவும் வீடமைப்பு அதிகாரசபையின் இரண்டாம் கட்ட நிதி உதவி வழங்கலும் இன்று கல்முனையில் இடம்பெற்றது .அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி yl .சாஹுல் ஹமீட் அவர்களின் அழைப்பின் பேரில் சமுர்த்தி ,வீடமைப்பு பிரதியமைச்சர்  MSS. அமீர் அலி இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த தமிழ்,முஸ்லிம் குடும்பங்களுக்கு வீடமைப்பு அதிகாரசபையின் இரண்டாம் கட்ட நிதி உதவி வழங்கிவைக்கப்பட்டது….

Read More

த.தே.கூ. வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றதுக்கு ஆதரவு வழங்க வேண்டும்

ஏறாவூர் அபூ பயாஸ் கிழக்கு மாகாணசபை நேற்று (16) காலை கூடியபோது ,வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் சம்பந்தமான பிரேரணையில் எனக்கும் பேச சந்தர்பம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்து தனது உரையை ஆரம்பித்த எம்.எஸ்.சுபைர் அவர்கள் தொடர்ந்து உரையாற்றுகையில். இன்று முஸ்லிம் காங்கிரஸின் கௌரவ மாகாணசபை உறுப்பினரான சகோதரர் ஜெமீல் அவர்கள் வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பான பிரேரணையை கொண்டுவந்தமையிட்டு அவருக்கு நன்றி கூறிக்கொள்வதோடு,வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பான விடயங்கள் இன்று தேசிய ரீதியாக…

Read More

மொஹமட் அஸ்மி கிடைத்தார்!

பண்டாரவளையைச் சேர்ந்த மொஹமட் அஸ்மி (17 வயது) என்ற மேற்படி மாணவரை கடந்த (14/06/2015)ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை என www.acmc.lk செய்தி வெளியிட்டு இருந்தது அறிந்ததே.. இது பற்றி பண்டாரவளைப் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டு இருந்த நிலையில் ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி இருந்த அதேவேளை, சற்றுமுன் எம்மை தொடர்பு கொண்ட தகவலை வெளியிட்டவர், குறிப்பிட்ட மாணவர் கிடைக்கப் பெற்றுள்ளதாக எம்ம்மிடம் தெரிவித்தார். பண்டாரவளையைச் சேர்ந்த இவர் வீட்டில் அறிவிக்காமல் கொழும்பில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்று அங்கு…

Read More

காத்தான்குடி பூர்வீக நூதனசாலையை பார்வையிட்ட ACJU

-எம் எச் எம் அன்வர்- காத்தான்குடி பூர்வீக நூதனசாலையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாபத்வா குழு பிரதிநிதிகள் 11 பேர்நேற்றுநேரில் சென்றுபார்வையிட்டனர் பூர்வீக நூதனசாலையானது சிலைகள் வைக்கப்பட்டமை தொடர்பாகஅண்மையில் பல்வேறு விமர்சனங்கள் பலதரப்பாலும் எழுப்பப்பட்டிருந்தன இதன் காரணமாகஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாபிரதிநிதிகள் வந்துபார்வையிட்டு அவர்கள் எதைஎடுக்கச்சொல்கிறார்களோ அல்லது எதைநீக்கச்சொல்கிறார்களோ அது நீக்கப்படும் என தெரிவிக்கப் பட்டது.

Read More

நாட்டின் அபிவிருத்திக்கு ஊடகத்தின் பங்களிப்பும் அளப்பறியது: பிரதி ஊடக அமைச்சர்

நிறைவேற்று அதிகாரம்- அரசியலமைப்பு- சட்டம் நீதி மற்றும் ஊடகம் என்பவற்றினால் ஒரு நாடு அபிவிருத்தியை நோக்கி நடைபோடும் என பிரதி ஊடக அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (16) நடைபெற்ற அமைச்சுக்களின் ஊடக செயலாளர்களுக்கான கருத்தரங்கில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்- ஒரு அரசாங்கத்தை உருவாக்கத்தின் ஊடகம் பாரிய பங்களிப்பை வழங்குகிறது. அது நல்லபடியாக நடக்கவேண்டும். அரசியல்வாதிக்கு ஊடகம் மிகவும் அவசியம். அரசியல்வாதியின் ஒரு…

Read More

புனித நோன்பு நிமித்தம் முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை

நாடளாவிய ரீதியில் உள்ள முஸ்லிம் பாடசாலைகள், முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நாளை (18) விடுமுறை வழங்கப்படவுள்ளது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. புனித நோன்பு ஆரம்பமாகவுள்ளதால் இவ்விடுமுறை வழங்கப்படவுள்ளது. இவ்வாறு விடுமுறை வழங்கப்படும் பாடசாலைகளும் கல்வி நிறுவனங்களும் எதிர்வரும் ஜுலை மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

இனவாத ஊடக அராஜகத்துக்கு எதிரான ராவய பத்திரிகையின் சாட்டையடி!

ஏ எம் எம் முஸம்மில். – பதுளை     இந் நாட்டு மக்களின் நல்லபிமானத்தை பெற்ற, ஊடகத் துறையில் பல இமாலய சாதனைகளை மேற்கொண்ட, இந் நாட்டின் பல ஆட்சி மாற்றங்களுக்கு அச்சாணியாக செயற்பட்ட ராவய பத்திரிகை சிங்கள ஊடகத்துறையில் ஒரு பிரபலமான பத்திரிகையாகும் . இப்பத்திரிகையின் ஊடகவியலாளரான மஹிந்த ஹத்தக  கடந்த வாரம் “வில்பத்து காடழிப்பு” புரளியின் உண்மைத் தன்மைகளை கண்டறியும் நோக்கில் மரிச்சுகட்டி பிரதேசத்திற்கு நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு  கடந்த வார ராவய…

Read More

புனித நோன்பு ஆரம்பமும்; றிஷாதின் வேண்டுகோளும்

ஏ.எச்.எம்.பூமுதீன் புனித ரமழான் மாதம் ஆரம்பமாகியுள்ள இத்தருணத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் உட்பட உலக வாழ் முஸ்லிம்கள் அனைவர் வாழ்விலும் சாந்தியும் சமாதானமும் உண்டாக பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அச்செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளமை வருமாறு, புனித நோன்பு மாதம் ஆரம்பமாகியுள்ள இந்த வேளையில் இந்த 30 நாட்களையும் கண்ணியமிக்கதாகவும் சகோதர இனங்களுக்கு இடையில் பரபஸ்பர நம்பிக்கையை தோற்றுவிக்கும் வகையிலும் எமது செயற்பாடுகளையும்…

Read More