அராஜக நாடுகளுக்கு – அல்லாஹ்வின் தீர்ப்பு தாமதமா..?
– முஹம்மது மஸாஹிம் – பற்றியெறிகிறது மியன்மார், பதறுகின்றது இதயம், பிரார்த்திக்கின்றன கைகள், இன்னும் பார்த்துக் கொண்டா இருக்கின்றான் படைத்தவன்..? எங்கே அவனை நம்பி கலிமாச் சொன்ன மக்களைக் காப்பாற்ற, இன்னும் அவன் அழிவை ஆரம்பிக்கவில்லை..? கண்ணெதிரே இவர்களுக்கு காட்டவேண்டுமல்லவா..? இன்று அதிகமான மக்களின் உள்ளத்திலுள்ள கேள்விதான் இது. ஆம்.. எம்மைப் படைத்த இறைவனை அவ்வளவு சாதாரணமாக எடைபோட்டு விடாதீர்கள். அவனது சூப்பர் படைகளுக்கு முன்னாள், உங்கள் உலக கூட்டுப்படைகள் தூசிப் படைகளே.. உங்களிடம் தரைப்படை உள்ளதா..?…
