பாரம்பரியமாக வில்பத்தை அண்டிவாழ்ந்த முஸ்லிம் மக்களுக்கு நீதி வேண்டி சாய்ந்தமருதில் கவனஈர்ப்புப் போராட்டம்
-எம்.வை.அமீர் – வில்பத்து காட்டுப்பகுதியை அண்டிவாழ்ந்த முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றக் கோரியும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாத் பதியூதீன் அவர்களது செயற்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்தும் 2015-05-29ல் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் முன்பாக கவனஈர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. கல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய பிரதி அமைப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களது தலைமையில் இடம்பெற்ற மேற்படி கவனஈர்ப்புப் போராட்டத்தில் சாய்ந்தமருது பிரதேச அகில…
