அம்மா என்றழைக்காத உயிரில்லையே…. 62 வயது மாற்று திறனாளி மகனை கவனிக்கும் 101 வயது பாச தாய்!
தன் மகனுக்கு தானும் எனக்கு மகனுமாக ஒருவருக்கு ஒருவர் துணையாக உள்ளோம் . என் மகன் வாழ்நாள் உள்ள காலம் வரை தான் உயிரோடிருக்க வேண்டும் ஏனென்றால் எனக்கு பிறகு அவரை கவனிக்க யாரும் இல்லை என்கிறார் மலேசியாவில் 101 வயதுடைய தாயான மூதாட்டி மெலியா தன் மகனான 62 வயதுடைய மாற்று திறனாளியான அப்துல் ரஹமானை வயது முதிர்ந்த நிலையிலும் எவ்வித குறையும் இல்லாமல் மிகுந்த பாசத்தோடு கவனித்து வருவது அனைவரின் உள்ளத்தையும் நெகிழ செய்துள்ளது…
