Headlines

எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து சபாநாயகரிடம் கேள்வி எழுப்பப்படும்!- அனுரகுமார




திர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.

எனவே எதிர்வரும் வாரத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளின் போது எதிர்க்கட்சித் தலைவர் குறித்து சபாநாயகரிடம் கேள்வி எழுப்பப்படும்.

எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன.

இந்தக் கேள்விகளுக்கு இரண்டு மாதங்கள் கடந்தும் சபாநாயகர் பதிலளிக்கவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் குறித்து திடமான ஓர் தீர்மானத்தை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரப்படவுள்ளது.

19ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதனை அரசியல் சாசன சபை நிர்ணயிக்க வேண்டுமென அனுரகுமார திஸாநாயக்க சிங்கள பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *