Headlines

‘யாழ்ப்பாண முஸ்லீம்கள் ஜனாதிபதி தேர்தலில், எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்க மாட்டார்கள்”

யாழ் மாவட்ட முஸ்லீம் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்க மாட்டார்கள் என முன்னாள் யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனத்தின் தலைவரும் சமூக சேவகருமான கே.எம் நிலாம் தெரிவித்தார். தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களிக்க தீர்மானம் எடுத்துள்ளனர் என வினவியபோது மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் கடந்த கால யுத்தத்தின் பின்னர் மீண்டும் மீளக்குடியமர்ந்த மக்களின் அடிப்படை தேவைகள் இன்னும் சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை.அவர்கள் வாழ்வதற்கு காணிகள்…

Read More

கிரான்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதலின் போது நான் தலையிட்டதால் மற்றுமொரு கறுப்பு ஜூலையை தடுக்கமுடிந்தது.பைஸர் முஸ்தபா

ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு பொதுபல சேனா  ஆதரவு வழங்கினால், நான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து விலகிடுவேன் என முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பாக தனது நிலைப்பாட்டை பொது பலசேனா இன்னமும் தெளிவாக அறிவிக்கவில்லை. அவ்வாறு பொதுபலசேனா  நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு வழங்கினால் நான் ஐக்கிய…

Read More

மஹிந்த ராஜபக்ஷவினால்தான் முஸ்லிம்களின் பாதுகாப்பும், நலன்களும் உத்தரவாதப்படுத்தப்படும் – அஸ்வர்

ஜனாதிபதி மஹிந்தராஜ பக்ஷவினால்தான் முஸ்லிம் களின் எதிர்கால பாதுகாப்பும், நலன்களும் தொடர்ந்தும் உத்தரவாதப்படுத்தப்படும். இதனை முஸ்லிம்கள் நன்கு உணர்ந்து உள்ளனர். மூன்றாவது முறையும் அவரை ஜனாதிபதியாக்க முஸ்லிம்கள் என்றோ முடிவெடுத்து விட்டார்கள் என்று ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார, தகவல் ஊடக சிரேஷ்ட ஆலோசகரான ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்துள்ளார்.

Read More

நாங்கள் மஹிந்த அண்ணா, என அழைத்தவரின் பயணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது – மைத்திரிபால சிரிசேன

2010ஆம் ஆண்டிற்குப் பின்னர், தற்போதைய ஜனாதிபதியின் பயணத்தில் மாற்றம் ஏற்பட்டதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். சிலாபம் மஹாவௌ பிரதேசத்தில் 12-12-2014 இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 2005ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது நாட்டின் பெரும்பாலான மக்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர். அந்த காலகட்டத்தில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிறப்பு வாய்ந்தவராக திகழ்ந்தார். நாங்கள் அந்த…

Read More

எனது வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் என்னில் சேறு பூச முயற்சிக்கின்றனர் –கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல் தவம்

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் எனது வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், நேற்று 11.12.2014) நடந்த கண்ணியத்துக்குரிய உலமாக்களுடனான சந்திப்பில் நான் கூறிய கருத்துக்களை கூட திரிபுபடுத்தி என்னில் சேறு பூச முயற்சிக்கின்றனர். நான் கூறியதாவது; “எதிர்காலத்தில் நாம் எத்தனை பேர் எம் பி யாகப் போகிறோம்?எத்தனை பேர் மாகாண சபை உறுப்பினராகப் போகிறோம்? கட்சி எத்தனை வாக்குகள் எடுக்கப் போகிறது? என்பவற்றை மட்டும் தான் மனதில் கொண்டு நாம் தீர்மானம் எடுக்கப்போகிறோமா? அதற்காகத்தான் இந்தக்…

Read More

2014 ஆம் ஆண்டின் சிறந்த மனிதர்களாக எபோலாவுடன் போராடிய மருத்துவ குழு – TIMES பத்திரிகை

டைம்ஸ் பத்திரிகை (Time magazine) இவ்வருடத்துக்கான (2014) மிகச் சிறந்த நபர்களாக மேற்கு ஆப்பிரிக்காவில் தாம் ஓர் ஆட்கொல்லி நோயால் தொற்றப் பட்டு மரணமடைவதற்கான வாய்ப்பு மிக அதிகம் என்ற போதும் தமது உயிரைப் பொருட் படுத்தாது எபோலா நோயால் பாதிக்கப் பட்ட ஆயிரக் கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அதனால் மரணித்த மேலும் இன்னமும் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் அனைத்து டாக்டர்கள் மற்றும் மருத்துவத் தாதியர்களையும் தேர்வு செய்து கௌரவப் படுத்த முடிவு செய்துள்ளது. இது…

Read More

அரசியலில் பணம் சம்பாதிக்கும் அவசியம் கிடையாது!– ரணில்

கிருலப்பனையில் நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்று நேற்று வியாழக்கிழமை உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ராஜபக்ச அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி மைத்திரிபால சிறிசேனவிடம் நாட்டை ஒப்படைப்பதன் மூலம் மைத்திரிபாலவோ,  ரணில் விக்ரமசிங்கவோ, சம்பிக்க ரணவக்கவோ வெற்றியீட்டப் போவதில்லை. உண்மையான வெற்றி மக்களுக்கே கிடைக்கும். ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சியினால் மக்கள் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர். மைத்திரிபால வெற்றியீட்டியதன் பின்னர் பெப்ரவரி மாதமளவில் அரசாங்க மற்றும் தனியார்துறை ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும். சம்பள உயர்விற்கான பொறிமுறைமை உருவாக்கப்படும் வரையில்…

Read More

கட்சித் தாவல்களை தடுக்க கடும் முயற்சி

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக இறுதியாக இன்று நாடாளுமன்றம் கூடவுள்ளது. இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளின் போது ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கட்சித் தாவக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு கட்சித் தாவுவதனை தடுக்கும் நோக்கில் கட்சிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று பிற்பகல் 1.30 அளவில் நாடாளுமன்றம் கூடவுள்ளது. நாடாளுமன்ற அமர்வுகளின் போது மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்து எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளவும், ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவு தெரிவித்து ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளவும்…

Read More

சந்திரிக்கா கலந்து கொண்ட கூட்டம் மீது தாக்குதல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கலந்து கொண்ட கூட்டம் ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கண்டியில் தனியார் விடுதி ஒன்றில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது இதனால் தனியார் விடுதியின் கண்ணாடிகள் உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

மறுத்தது இந்தியா, கொடுத்தது சீனா

இந்தியாவில் மருத்துவ கல்வியைத் தொடர தடைவிதிக்கப்பட்ட அகதி மாணவி நந்தினிக்கு சீனாவின் பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைத்துள்ளது. 1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகத்துக்கு அகதியாக குடும்பத்துடன் சென்ற இவர் அரச்சலூர் நவரசம் மெட்ரிக் பாடசாலையில் சென்ற வருடம் உயர்தரப் பரீட்சையில் (பிளஸ் – 2) சித்தியெய்தி மருத்துவ கல்விக்குத் தெரிவானார். இருப்பினும் இந்திய மருத்துவ சபையின்  சட்டத்திட்டபடி அகதியாக வருபவர்கள் மருத்துவ கல்வி கற்க முடியாது,என்பதனால் பொறியியல் கல்வியைக் கற்க முடியுமென கூறப்பட்டது. ஆனால் அதற்கு…

Read More

ஐ.தே.கவை ; கேலி செய்யும் திஸ்ஸ அத்தநாயக்க!

ஐக்கிய தேசியக் கட்சியின் பரப்புரை இயந்திரம் “சுவிச் ஓவ்” செய்யப்பட்டுள்ளது. அதன் சாவியைத் தேடி எடுக்கவே மைத்திரிபால சிறிசேனவுக்குப் பல மாதங்களாகும் என்று தெரிவித்தார், அரசு பக்கம் தாவிய ஐ.தே.க முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க. அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணியின் முதலாவது பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பின்னணியில் சர்வதேச சக்திகளே உள்ளன. அவரின் வெற்றி…

Read More

விமான விபத்து; நான்கு பேர் பலி (இரண்டாம் இணைப்பு)

கொழும்பின் புறநகர்ப் பகுதியான அத்துருகிரிய, ஹோகந்தரவில் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான அன்டனோவ் 32 ரக விமானமே இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பில் விமானப்படையின் பேச்சாளர் கீதன் செனவிரட்ன தெரிவிக்கையில், ரஸ்யாவின் தயாரிப்பான அன்ரனோவ் 32 ரக விமானம் இன்று காலை கட்டுநாயக்கவிலிருந்து ரத்மலானை நோக்கிப் பறப்பில் ஈடுபட்டிருந்தது. இது ஐந்துபேர்…

Read More