Headlines

மத்திய கொழும்பில் 85,000 மேலதீக வாக்குகளால் மைத்திரிபால வெற்றியடைவார் – பைரூஸ் ஹாஜி

கொழும்பிலிருந்து ஒட்டமாவடி அஹமட் இர்ஸாட் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவை வெற்றியடைய செய்யுமுகமாக நேற்று (15) திங்கட் கிழமை மத்திய கொழும்பு ஆசனத்தில் உள்ள கொச்சிக்கடை பிரதேசத்தில் மக்கள் ஒன்று கூடலுடனான பொதுக்கூட்டம் இடம்பெற்றது. எப்போதும் போல இன, மத, மொழி, வேறுபாடின்றி சமூமளித்திருந்த வாக்காளர்கள் மத்தியில் உரையாற்றிய மேல் மாகான சபை உறுப்பினரும், மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளர்களுள் ஒருவரான பைரூஸ் ஹாஜி, இம்முறை ஜானாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேன 85,000…

Read More

மைத்திரியின் ஆலோசனைக்கேற்ப வெளிநாடு சென்றேன், இனி உயிர் பற்றி கவலையில்லை – ஹிருனிகா

ஆலோசனைக்கு அமையவே தாம் வெளிநாடு சென்றதாக மேல் மாகாணசபையின் உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட நிலையில் தமக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமையவே இவ்வாறு நாட்டை விட்டு தாயுடன் தாம் வெளியேறியதாகக் குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்க எடுத்தத் தீர்மானத்தை தொடர்ந்தே இவ்வாறு தமக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மைத்திரிபால சிறிசேனவும், ராஜித சேனாரட்னவுமே வெளிநாடு செல்லுமாறு ஆலோசனை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். தமது உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை கருத்திற்…

Read More

அல் முனீர் அஹதிய்யா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா (படங்கள் இணைப்பு)

நாங்கூறுகம அல் முனீர் அஹதிய்யா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா சென்ற 14ம் திகதி ஞாயிறு காலை 8.30 மணியளவில் நாங்கூறுகம முஸ்லிம் வித்யாலயத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நாங்கூறுகம அல் முனீர் அஹதிய்யா பாடசாலையின் பரிசளிப்பு விழா நிகழ்ச்சிகள் ஆரம்பம் முதல் இறுதிவரை மாணவர்களால் ஒழுங்கு படுத்தப்பட்டு நடாத்தப்பட்டமை ஒரு விஷேட அம்சமாக பலராலும் நோக்கப்பட்டது. நிகழ்சிகள் மாணவன் எம்.என்.எம்.ஷுரைபின் இனிய கிராஅத்துடன் ஆரம்பமானதைத் தொடர்ந்து மாணவிகளான எம்.எம்.எப்.முர்ஷிதா மற்றும் ஏ.எப்.சுமையா ஆகியோரால் அனைத்து நிகழ்ச்சிகளும்…

Read More

2007ஆம் ஆண்டு நான் பதவி விலகப்போவதாக ஜனாதிபதியிடம் தெரிவித்தேன் – மைத்திரிபால சிரிசேன

மொரகஹாகந்த, களுகங்கை பிரதேசத்தில் செயல் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட காணிகளை மாணிக்ககல் அகழ்வதற்கு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன தனது அதிர்ப்தியினை வெளியிட்டுள்ளார். சுற்றாடல் ஜனநாயகத்திற்கான மக்கள் விவாதம் இன்று கொழும்பில் இடம்பெற்றபோதே, அவர் இதனை தெரிவித்துள்ளார். மொரகஹாகந்த பகுதியில் 2007ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டி செயல்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில், குறித்த பிரதேசத்தில் மாணிக்ககல் அகழ்வதற்கான அனுமதியினை வழங்க கோரி பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. இரு உறுப்பினர்கள் அமைச்சரவைக்கு இந்த பிரேரணையைக் கொண்டு வந்து,…

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதீனின் துரித முயற்சியால் பட்டதாரிகளுக்கு புலமைப்பரிசில் (படங்கள் இணைப்பு)

ஏ.எச்.எம்.பூமுதீன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீனின் துரித முயற்சியினால் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டு கல்வி பயிலும் பட்டதாரி மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று (14) இடம்பெற்றது. மருதானை வை.எம்.எம்.ஏ கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதற்கட்டமாக வன்னி மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 230 பட்டதாரிகளுக்கு குறித்த புலமைப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டது. அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இப் புலமைப் பரிசில்களை வழங்கி வைத்தார். அமைச்சர்…

Read More

இஸ்லாத்தில் பெண்ணின் விருப்பம் பெற்று திருமணம் செய்யப்பட வேண்டும்

பழுலுல்லாஹ் பர்ஹான் இலங்கை முஸ்லிம்களின் குடும்பச் சட்டம் படிப்படியாக பொதுச் சட்டத்தின் செல்வாக்கைவிட, இஸ்லாமிய சட்ட விதிகளின் செல்வாக்கிற்கு உட்பட்டு வருகிறது. ஆயினும் எம் நாட்டில் அதிகமானவர்கள் பொதுச் சட்டத்தினாலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இலங்கைப் பிரஜைகள் தனியார் சட்டங்களினாலும், ஆளப்படுகின்றனர். குடும்பம் என்பது இஸ்லாமிய சமூக அமைப்பின் அடிப்படையாகும். மனிதனின் இச்சையை நெறிப்படுத்தி, ஆக்க சக்தியாக மாற்றி இஸ்லாம் வகுத்துத் தந்த வழிமுறையே திருமணம் ஆகும். இவ்வாறு உரிய முறையில் நெறிப்படுத்தப்படாத போது, அது ஒரு பாரிய…

Read More

டிசம்பர் 23, 24 இல் தபால் மூல வாக்களிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு டிசம்பர் 23 ஆம், 24 ஆம் திகதிகளில் நடைபெறுமென தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாடு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தார். தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே கோரப்பட்ட நிலையில் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். இதேபோல ஏனைய வாக்காளர் பட்டியல்கள் அந்தந்த கிராம சேவகர் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், மாவட்டச் செயலகங்கள்…

Read More

நான் இனவாதி அல்ல; ஜனாதிபதி

நான் எந்தவொரு சகோதரரையும் அரசியலுக்கு கொண்டுவரவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்‌ச தெரிவித்துள்ளார். ஆளும் தரப்பின் “பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மீது நம்பிக்கை வைக்க முடியாது.ஏன் என்றால் இரவு 12 மணி வரை என்னுடன் இருந்து அப்பம் உண்டவர் என்னிடம் கூறாமலேயே மறுநாள் காலையில் எதிரணிப் பக்கம் மாறி எனக்கு எதிராகக் களமிறங்கினார். இவரை நம்பி எவ்வாறு நாட்டை பொறுப்புக் கொடுப்பது என அவர்…

Read More

மைத்திரியை ஆதரித்து இளைஞர் முன்னணியின் கூட்டம் இன்று

பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவை ஆதரித்து ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் முன்னணியினால் பரப்புரைக் கூட்டம் ஒன்று இன்று மாலை பொலன்னறுவையில் இடம்பெறவுள்ளது. மாவட்ட மட்டத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கூட்டத்தொடரின் முதலாவது பரப்புரையே இன்று நடைபெறவுள்ளதாக ஐக்கிய இளைஞர் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

Read More

பொதுமக்களை சிறைப்பிடித்த தீவிரவாதிகள் ; மஹிந்த கவலை

அவுஸ்திரேலிய சிட்னி நகரத்தில் 20 பொது மக்களை ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளால் சிறைபிடித்து வைத்துள்ள சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார். அவுஸ்திரேலிய நேரப்படி இன்று காலை 9.30 மணியளவில் ஆயுதம் தாங்கியவர்களால் 20 பொதுமக்கள் பணயக் கைதிகளாக அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு கவலை வெளியிட்டுள்ள ஜனாதிபதி பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இலங்கை ஆஸ்திரேலியாவுடன் ஒன்றுபட்டு நிற்குமென அவரது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Read More

தேர்தலுக்கு பின்னர் ராஜபக்ச ரெஜிமண்ட் நாட்டை விட்டு வெளியேறலாம்; மைத்திரிபால சிறிசேன

மக்கள் பணத்தை கொள்ளையடித்த ராஜபக்ச ரெஜிமண்ட் நாட்டை விட்டு வெளியேற முடியாதபடி ஜனவரி 8ம் திகதி இரவு 11 மணிக்கு பின்பாக கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படும் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தலில் எமது வெற்றி உறுதி ஆகிவிட்டது. மக்கள் பணத்துக்கு பதில் சொல்ல வேண்டியவர்களை இந்தியா போன்ற நாடுகள் காப்பாற்றுவதற்கு சந்தர்பம் வழங்கப்பட மாட்டாது. இலங்கைத் தீவில் மக்கள் முன்பாக இதற்கு பதில் சொல்லும் பொறுப்பு முன்னைய ராஜபக்ச ரெஜிமண்டுக்கு உள்ளது. தோல்வியின்…

Read More

எனது ஆதரவு பொது வேட்பாளருக்கே: சியாம்டீன்

இக்பால் அலி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை தான் ஆதரிப்பதாக கண்டி மாவட்ட, சமூக அபிவிருத்தி மற்றும் இன நல்லிணக்கத்துக்கான அமைப்பின் தலைவர் எஸ்.எச்.எம்.சியாம்டீன் தெரிவித்தார். எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) சந்தித்து உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

Read More