Headlines

கொழும்பில் விமான விபத்து (படங்கள் இணைப்பு)

கொழும்பின் புறநகர்ப் பகுதியான அத்துருகிரிய ஹோகந்தரவில் விமானமொன்று இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.  அன்ரனோவ் 32 ரக விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விமான விபத்து காரணமாக இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. 6.20 மணியளவில் ஹோகந்தர கத்தரீன் பார்க் பகுதியில் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விமானத்தில் நால்வர் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தற்போது பொலிஸாரும் மீட்புப் பணியாளர்களும் இணைந்து காயமடைந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை…

Read More

ஹிருனிகாவுக்கு அச்சுறுத்தல்!

அஸ்ரப் ஏ சமத் மேல்மாகணசபை உறுப்பிணர் ஹிருனிக்கா தனது தாயுடன் உடன் வெளிநாடு சென்றுள்ளார். முல்லேரியா பிரதேச சபைத் தலைவர் சோலங்க ஆராச்சி எனது தங்கை ஹிருனிக்கா எதிர்க்கட்சியில் சேர்ந்தாதல் அரசாங்கத்திலிருந்து பல இன்னல்களையும் கஸ்டங்களையும் அவருக்கு ஏற்படுத்துகின்றனர். இதனால் அவர் உடன் வெளிநாடு சென்றுள்ளார். ஆனால் அவர் சிலநாற்களின் பின் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு அவர் மீண்டும் இலங்கை வருவார். அத்துடன் எனது உயிருக்கும் அச்சுருத்தலாக உள்ளது. எனது வீட்டுக்கு எஸ.டி.எப். மற்றும் சீறுடை…

Read More

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது முஸ்லிம்களது அபிலாசைகளும் தேர்தல் விஞ்ஞாபனத்தில்

அஸ்ரப் ஏ சமத் இன்று பி.பகல் 03.30மணிக்கு எதிர்கட்சித் தலைவரும் ஜ.தே.கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுகையிர், பேராசிரியர் றிஸ்வி சரீப் சட்டத்தரணி இல்யாஸ், தலைமையிலான குழுவினர் எதிர்க்கட்சி தலைவர் அழுவலகத்தில வைத்து முஸ்லீம்களது பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடினார்கள்;. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது முஸ்லீம்களது அபிலாசைகளும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உட்படுத்தல் வேண்டும். ஏன இக் குழு கோரிக்கை விடுத்தனர் அத்துடன் வடக்கு முஸ்லீம்களது மீளக் குடியேற்றல் ஒரு குறிப்pட்ட தினத்தில் அவர்களது பிரச்சினைகளுக்கு…

Read More

இறுதி முடிவை வழங்குபர்கள் மக்களே கம்மன்பிலவுக்கு வாழ்த்துக்கள்

ஹெல உறுமயவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள அக்கட்சியின் பிரதி பொது செயலாளர் உதய கமன்பில தொடர்பாக ஹெலஉறுமயவின் பொதுசெயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளதாவது, அவர் சிறந்த அரசியல்வாதி, கட்சியிலிருந்து அவர் வெளியேறினார்  என்பதால் எமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அவரது  முடிவில் எமக்கு பிரச்சினை  இல்லை. இறுதி முடிவை வழங்குபர்கள் மக்களே. அவருக்கு வாழ்த்துக்கள்.

Read More

சுகாதார அமைச்சராக திஸ்ஸ பதவியேற்றார்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அண்மையில் அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட நிலையில், சுகாதார அமைச்சராக இன்று வியாழக்கிழமை  பதவியேற்றுக்கொண்டார்.  கண்டியிலுள்ள ஜனாதிபதி இல்லத்தில் இந்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

Read More

உதய கமன்பில அரசாங்கத்தில் இணைந்தார்

ஜாதிக ஹெல உறுமயவின் துணை பொது செயலாளரான உதய கமன்பில ஜாதிக ஹெல உறுமயவிலிருந்து விலகுவதாகவும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Read More

ஜனாதிபதி தேர்தலில் விசித்திர சின்னங்கள்

கவிதா சுப்ரமணியம் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னங்களை, தேர்தல்கள் செயலகம், வெளியிட்டுள்ளது. நேற்று (10) வெளியிடப்பட்டுள்ள சின்னங்களே எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணி முதல் 4 மணிவரை நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க பயன்படுத்தப்படும் வாக்கச் சீட்டுக்களில் அச்சடிக்கப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்ததுள்ளது. 17 அரசியல்; கட்சிகள் மற்றும் 2 சுயேட்சைக் குழுக்களுக்கான சின்னங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி,…

Read More

தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: ரணில்

நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் கீழ் தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் உறுதி செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது இரண்டாம் தவணை ஆட்சிக் காலத்தின் போது ஊடக சுதந்திரத்தை இல்லாமல் செய்துள்ளார். தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை உறுதி செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியமானது. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் கீழ் நாட்டில்…

Read More

ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து 5000த்திற்கும் மேற்பட்ட போலி இணையத்தளங்கள்

சுமார் 5000த்திற்கும் மேற்பட்ட போலி இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தள கணக்குகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து இணையத்தளங்களும், சமூக வலைத்தள கணக்குளும் மூன்று வார காலப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட போலி இணையத்தளங்களைப் போன்றே, பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய சமூக வலைத்தள கணக்குகளும் ஆயிரக்கணக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. செய்தி மூலங்களைக் குறிப்பிடாத செய்திகள், அவதூறு ஏற்படுத்தும் தகவல்கள் அடங்கிய செய்திகள் இந்த புதிய இணையத்தளங்களில் பரவலாக வெளியாகி வருகின்றன. இவ்வாறான…

Read More

மகிந்தவின் முதலாவது பிரசாரக் கூட்டம் இன்று அநுராதபுரத்தில் ஆரம்பம்

இன்று காலை அநுராதபுரத்தில் ஸ்ரீ மா போதியைத் தரிசித்து மகாநாயக்க தேரர்களின் ஆசிகளைப் பெற்றுக் கொள்ளவுள்ள ஜனாதிபதி, அதனையடுத்து அநுராதபுர நகரில் நடைபெறும் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு தலைமை வகிக்கவுள்ளார். அநுராதபுரத்தில் நடைபெறும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

அரசாங்கத்திலிருந்து விலகப் போவதில்லை: வாசுதேவ நாணயக்கார

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து தான் என்றைக்கும் விலகப் போவதில்லை என்று தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைய தளங்களினூடாக பொய்யான, பொறுப்பற்ற தகவல்கள் கட்சி தாவல்கள் தொடர்பில் பரப்பப்படுகின்றன. இதனால் மோசமான நிலைமையே ஏற்படும். தன்னைப் பற்றி தெரிவிக்கப்படும் செய்திகளை தூசளவேனும் தான் பொருட்படுத்த வில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஐக்கிய…

Read More

அமெரிக்கா திட்டமிட்டு முஸ்லிம்களை அழித்துக்கொண்டிருக்கின்றது-ஹிஸ்புல்லாஹ்

அமெரிக்கா திட்டமிட்டு முஸ்லிம் சமூகத்தையும்,முஸ்லிம்களையும் அழித்துக்கொண்டிருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்ஹிஸ்புல்லாஹ் 10-12-2014 நேற்று புதன்கிழமை காத்தான்குடியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார்.

Read More