நாட்டு மக்களின் அச்சத்தைப் போக்கினேன்: ஜனாதிபதி
எம்.ஆர்.சாரா பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவித்தது மட்டுமன்றி மக்கள் மனங்களிலிருந்த அச்சத்தைப் போக்கி, நாட்டை அபிவிருத்திப் பாதையில் கெண்டுசெல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கெலிஓயா நகரில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘நாட்டில் பயங்கரவாதம் தலைவிரித்தாடிய சந்தர்ப்பத்தில் அதனை முடிவுக்குக் கொண்டுவரும் வாய்ப்புக் கிடைத்தது. இப்பங்கரவாதத்தினால் சகல…
