Headlines

முஸ்லிம்களின் விமோசனம், எனது உயிரிலும் மேலானது – றிஷாத் பதியுதீன்

இலங்கை முஸ்லிம்களின் விமோசனம் எனது உயிரிலும் மேலானது. இந்த சமூகத்தின் நலன்கருதி எந்த பெரிய பதவிகளை தூக்கி வீசவும், சமூகத்துடன் இரண்டர கலந்து போராடங்களை முன்னெடுக்கவும் நான் தயார் என அமைச்சர் றிஷாத் பதியுதீன் குறிப்பிட்டார். ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவா அல்லது மைத்திரியா என்று நாங்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை. இதுதான் உண்மை நிலவரமாகும். இரு பக்கத்திலும் கடும் போக்காளர்கள் உள்ளனர். இதனால் தீர்மானம் மேற்கொள்வது சிரமமானது. எமது இறுதித் தீர்மானத்தில் தாமதம் ஏற்படலாம். இந்த தாமதமானது மக்களின்…

Read More

வன்செயலை தூண்டிய யூதர்கள் கைது

அரபு மக்களுக்கு எதிரான வன்செயல்களை தூண்டிய சந்தேகத்தின் அடிப்படையில் இஸ்ரேலிய போலிஸார் யூத தீவிரவாத குழு ஒன்றின் 10 உறுப்பினர்களை கைது செய்திருக்கிறார்கள். யூதர்களும் அரபுக்களும் ஒன்றாக வாழும் கொள்கையை எதிர்க்கின்ற ”லெகவா” என்னும் குழுவைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டவர்களாவர். ஜெரூசலத்தில் யூத மற்றும் அரபுச் சிறுவர்கள் ஒன்றாகப் படித்த பள்ளிக்கூடம் ஒன்றுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் இந்தக் குழுவைச் சேர்ந்த 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து இந்தக் கைது நடந்துள்ளது.

Read More

ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்பு மனுத் தாக்கல் செய்த இரண்டு வேட்பாளர்கள் மகிந்தவை ஆதரிப்பதாக அறிவிப்பு

ஜே.வி.பியின் ஜனநாயகத்திற்கான செயற்பாட்டார்கள் அமைப்பின் தேசிய அமைப்பாளர் அனுருத்த பொல்கம்பொல ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். நேற்று அவர் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார். இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை தேசிய முன்னணியின் தலைவர் டொக்டர் விமல் கீகனகே ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தார். இதன்படி, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தி வேட்பு மனுத் தாக்கல் செய்த ஜனாதிபதி மஹிந்த மற்றும் மைத்திரிபால சிறிசேனவைத் தவிர்ந்த ஏனைய 17 பேரில் இருவர் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர்….

Read More

எதிர்க்கட்சி சிங்கப்பூரில் ஜனாதிபதிக்கு எதிராக சூழ்ச்சி செய்தனர்!– அனுர பிரியதர்சன யாபா

கொழும்பில் உள்ள சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சந்திரிக்கா பண்டாரநாயக்க, ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனாரட்ன, மங்கள சமரவீர, சம்பிக்க ரணவக்க மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் இவ்வாறு சிங்கப்பூரில் கடந்த நவம்பர் மாதம் சந்தித்து ஜனாதிபதிக்கு எதிராக சதித் திட்டம் தீட்டியுள்ளனர். சந்திரிக்கா நம்பர் மாதம் 1ம் திகதி சிங்கப்பூர் சென்றுள்ளார். மைத்திரிபால சிறிசேன நம்பர் 2 முதல் 5ம் திகதி வரையில் சிங்கப்பூரில்…

Read More

ஜனாதிபதி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள பாரியளவில் பணத்தை செலவிடுகின்றார்!– ரோசி சேனாநாயக்க

நீர்கொழும்பு கட்டான பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாம் மிகவும் தீர்மானம் மிக்கதொரு தருணத்தை எட்டியுள்ளோம். நாட்டின் சொத்துக்கள் கொள்ளையிடப்படுகின்றன. நாடு அடைந்துள்ள ஆபத்தான நிலைமையை கருத்திற் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து கொண்டுள்ளனர். நாட்டில் ஊழல் மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. நாட்டிலிருந்து வறுமையை ஒழிக்க மைத்திரிபால சிறிசேன முயற்சிக்கின்றார். இந்த முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை…

Read More

தாஜ் ஹோட்டலில் த.தே.கூ.வுடன் மைத்திரி செய்த ஒப்பந்தத்தை பகிரங்கப்படுத்த வேண்டும்: திஸ்ஸ அத்தநாயக்க

கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தம் என்ன என்பதை பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நாட்டுக்குப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். பாணந்துறையில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றால், பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்குவதாகக் கூறினாலும்…

Read More

இராணுவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்; சம்பிக்க ரணவக்க

இரா­ணுவ ஆட்­சிக்கு முற்­றுப்­புள்ளி வைக்கும் இறுதி சந்­தர்ப்பம் தற்போது வந்துள்ளது என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்­பிக்க ரண­வக்க தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மக்கள் யாரை ஆத­ரிக்க வேண்டும் என்­பது அவர்­களின் விரும்பம். அதற்­காக தமி­ழர்­களை வற்­பு­றுத்த வேண்டாம். ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்டி இருப்­பது வழ­மை­யா­னது. ஆனால் ஆட்­சி­யினை விரும்­பு­வதும் யார் ஆட்­சிக்கு வர வேண்டும் என்­பதை தெரிவு செய்­வதும் பொது­ மக்­களேயாவர். ஆனால் தற்­போது மக்­களின் விருப்­பத்­தினை மீறி ஒரு சிலரின் விருப்­பத்­திற்­காக…

Read More

பொதுவேட்பாளர் பொய் சொல்கிறார்; அனுர பிரியதர்ஷன யாப்பா

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பரப்புரை மேடைகளில் பொய் சொல்கிறார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரான அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு சாதகமான முடிவையே எடுக்கும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் ஆட்சியின்கீழ் ஜனநாயகம் இல்லை என்றும், பொருளாதாரம் சீரழிகின்றது என்றும் பொதுவேட்பாளர் குற்றஞ்சாட்டி வருகின்றார். அத்துடன், குதிரைக் கதை, விமானக் கதை ஆகியவற்றையும் அவர் கூறிவருகின்றார். இவ்வாறு அவர் கூறுவதெல்லாம் பொய். அடிப்படையற்ற கருத்துகளாகும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் ஆட்சியின்…

Read More

மைத்திரியின் செயலாளருக்கு கொலை அச்சுறுத்தல்

எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பிரத்தியேகச் செயலாளர் ரஜித கொடித்துவக்குவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் உச்ச நீதிமன்றில் இன்று மனுவொன்று தாக்கல் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

மஹிந்தவின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் கொழும்பில் இன்று

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்று இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கொழும்பில் நடைபெறவுள்ளது. கொழும்பு, கிருலப்பனை, மாயா எவன்யூவில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கிழக்கு அலுவலக முன்றலில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமை தாங்கவுள்ளார்.

Read More

கட்சித் தாவல்கள் இந்தமாத இறுதிவரை ஒத்திவைப்பு

ஆளும் மற்றும் எதிரணி தரப்பினரின் கட்சி தாவல்கள் இம்மாத இறுதி வாரம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள் குறித்து உறுதியற்ற தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அரசில் உள்ள அரைவாசியினர் தமது பக்கம் வருவர் அப்படி வரமுடியாதவர்கள் அங்கு இருந்துகொண்டே தமக்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதற்கிடையில், ஐக்கிய தேசிய கட்சியின் 20 தொகுதி அமைப்பாளர்கள் அரசுடன் இணைந்துக்கொள்வர் என்று திஸ்ஸ…

Read More

மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் 19ஆம் திகதி வெளியிடப்படும் – ராஜித சேனாரத்ன

ஜனாதிபதி தேர்தலுக்கான மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை எதிர்வரும் 19ஆம் திகதி வெளியிடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவிக்கின்றார். சட்டத்தரணிகளுடனான சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.நல்லாட்சிக்காக சட்டத்தரணிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல், எதிர்கால திட்டங்கள் என்பன குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன விளக்கமளித்தார்.

Read More