இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் – கனடா பிரதமர்
மத்திய கிழக்கில் வளர்ந்து வரும் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக மேலதிக நடவடிக்கை எடுக்கப்போவதாக கனேடிய பிரதம மந்திரி ஸ்டீபன் ஹாப்பர் கூறினார்.பிரித்தானியாவின் லண்டன் நகரில், உரை நிகழ்த்திய அவர், பல்லாயிரக்கணக்கானவர்கள் இஸ்லாமிய தீவிரவாதத்தால் மோசமாக நடத்தப்படுவதாக கூறினார்.ஐஎஸ் வாதிகளின் ஆட்சியில் இருக்கும் பிரதேசம், பயங்கரவாதிகள் பயிற்சி பெறுவதற்கான பெரும் தளமாக மாறலாமென கூறிய அவர், அந்த நிலையில் வெறும் பார்வையாளர்களாக இருக்க முடியாதென தெரிவித்தார்.இதேவேளை, ஈராக்கிற்கு முற்கூட்டியே அறிவிக்கப்படாத பயணம் ஒன்றை மேற்கொண்ட கனேடிய வெளியுறவு அமைச்சர்…
