ஊவா மாகாண சபைக்கான தேர்தல் திட்டமிட்டபடி எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறும்: மஹிந்த தேசப்பிரிய
ஊவா மாகாண சபைத் தேர்தல் திட்டமிட்டபடி எதிர்வரும் (செப்டம்பர் மாதம்) 20ஆம் திகதி நடத்தப்படுமென்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளார். மொனராகலை மாவட்டத்தில் தேர்தல் கால அசம்பாவிதங்கள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து நேற்று பொலிஸ்மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்பே, ஏற்கனவே திட்டமிட்டபடி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணையாளர் இணக்கம் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பில் மொனராகலை மாவட்டத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவாது அனைத்து நிலைமைகளையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக…
