Headlines

அரசாங்கத்துடனான பேச்சுக்கு தயார் – தமிழ்க் கூட்டமைப்பு




இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் நிபந்தனைகளுடன் கூடிய பேச்சுவார்த்​தைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயார் என கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தை சர்வதேசத்திற்கு காட்டும் வகையில் அமையக்கூடாது எனவும் ஒரு ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையாக காணப்படவேண்டும் எனவும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்துடனான இருதரப்பு பேச்சுவார்த்தையானது சர்வதேச கண்காணிப்பாளர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற வேண்டும் எனவும்  அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *