Headlines

ஜனாதிபதிக்கு எதிரான வழக்கில்- சரத் என் சில்வா

நாட்டின் பொதுமகன் என்ற அடிப்படையில் இந்த மனுவை பொதுநலன் மனுவாக கருதி தாக்கல் செய்யவுள்ளதாக சரத் என் சில்வா குறிப்பிட்டுள்ளார்.  தமது கருத்துப்படி மஹிந்த ராஜபக்ச மூன்றாம் முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியற்றவராவார்.  18வது அரசியல் அமைப்பு திருத்தத்தில் மூன்றாம் முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.  எனினும், அதில் சில சிக்கல்கள் இருப்பதாக சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த விடயத்தில் உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தை கோருவதற்கு ஜனாதிபதிக்கு முடியாது என்றும் சரத்…

Read More

இலங்கை அகதிகள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்

திருவண்ணாமலையின் விசேட முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தமது குடும்பங்களுடன் மீளிணைக்க வேண்டும் என்று கோரியே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று பேர் தமது மனைவி மற்றும் பிள்ளைகள் இந்தியாவில் எங்கிருக்கிறார்கள் என்ற விடயம் தெரியாமலேயே இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இந்தப்போராட்டத்தில் 24 பேர் இணைந்துள்ளனர். தாம் கடந்த மூன்று மாதங்களாக எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

அவுஸ்திரேலிய நூதனசாலையில் இலங்கை அகதிகளின் படகு

இலங்கை அகதிகள் 66 பேரை ஏற்றி வந்த இந்த படகு கடந்த வருடம் ஏப்ரல் 9 ஆம் திகதி வடக்கு பேர்த்தை சென்றடைந்தது. இந்த படகு எல்லைப் படையினரின் கண்காணிப்புக்கு அப்பால் எவ்வாறு சுறுசுறுப்பான கெரால்டன் துறைமுகத்துக்கு வந்தது என்பது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் குறித்த படகை பாதுகாக்க முடியாமையை தொடர்ந்து அதனை நூதனசாலைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read More

சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக தமிழக முதல்வர் வழக்கு!

தாம் வழங்கிய ஆலோசனையின் பேரிலேயே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை விடுவித்து, அவர்களின் படகுகளை தடுத்து வைப்பதாக அண்மையில் சுப்பிரமணியன் சுவாமி தகவல் வெளியிட்டிருந்தார். இந்த தகவல் மூலம் சுப்பிரமணியன் சுவாமி அவதூறை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக முதல்வர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இந்த விடயம் தொடர்பில் முதல்வர் ஜெயலலிதா, இந்திய பிரதமர் மோடியின் கவனத்துக்கும் கொண்டு வந்து சுப்பிரமணியன் சுவாமியின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தார்.

Read More

சீனா பொருளாதாரத்தில் அமெரிக்காவைப் பின்தள்ளி விடும்!:IHS

இன்னும் ஓர் தசாப்தத்துக்குள் தற்போதைய உலகில் 2 ஆவது பெரிய பொருளாதார சக்தியான சீனா முதாலாவது பெரிய பொருளாதார சக்தியாக விளங்கும் அமெரிக்காவைப் பின் தள்ளி நம்பர் 1 இடத்துக்கு வந்து விடும் என IHS என்ற அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது. சுமார் ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமாக பொருளாதாரத்தில் நம்பர் 1 இடத்தில் இருந்து வரும் அமெரிக்கா இன்னும் 10 வருடங்களில் 2 ஆவது இடத்துக்கு வந்து விடும் என்பதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. முக்கியமாக சீனாவில்…

Read More

மன்னார் விளையாட்டுப் பெருவிழா – பிரதம அதிதியாக அமைச்சர் ரிசாத்

மன்னார் விளையாட்டுப் பெருவிழா நேற்று முன்தினம் நாணாட்டன்  பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில்  மன்னார் அரசாங்க அதிபர், அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட படம்.

Read More

பேஸ்புக் மூலம் நாட்டில் கிளர்ச்சி

பேஸ்புக் மூலம் கிளர்ச்சியைத் தூண்டி நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த  சர்வதேச சக்திகள் முயற்சித்து வருவதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாட்டின் சிங்கள வாக்குகளை சிதைவடையச் செய்ய மேற்குலக நாடுகள் முயற்சித்து வருகிறது. ரணில் விக்ரமசிங்க, அனுரகுமார திஸாநாயக்க மற்றும் மாதுலுவே சோபித தேரர் ஆகிய பலரும் தேர்தலில் போட்டியிட்டு வாக்குகள் சிதைக்கப்படுவதனையே விரும்புகிறது. சிங்கள வாக்குகளை சிதைப்பதன் மூலம் அறுதிப் பெரும்பான்மையுடன் எவரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டார் மாட்டார்கள் எனவும் இதனையே மேற்குலக நாடுகள் விரும்புகிறது….

Read More

உலக முஸ்லிம்களின் அழிவு ஆரம்பம்- பொதுபல சேனா

அல்-கெய்தாவின் அச்சுறுத்தல் தெற்காசியாவுக்கு மட்டுமல்ல முழு உலகிற்கே அச்சுறுத்தலாகும். அத்தோடு இது உலக முஸ்லிம்களின் அழிவின் ஆரம்பமாகும் என பொது பல சேனா அறிவித்துள்ளார். இலங்கையில் உள்ள மற்றும் இங்கு வரும் பாகிஸ்தானியர்கள், ஆப்கானிஸ்தான் நாட்டவர்களை கடும் சோதனைக்கு உள்ளாக்குவதோடு துறைமுகத்திற்கு வரும் கொள்கலன்களை சோதனை செய்ய விசேட நடவடிக்கைகளை முடுக்கி விவிட வேண்டும் என பொது பல சேனாவின் நிர்வாகப் பணிப்பாளர் டிலந்த விதானகே தெரிவித்துள்ளார். அணையப் போகும் விளக்கு பிரகாசமாக எரியும். அதே போன்று…

Read More

ஐ.எஸ்.ஐ.எஸ்சை அழிக்க அமெரிக்கா அடுத்த திட்டம்

ஈராக்கில் ஆதிக்கம் செலுத்த முயலும் ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சி அமைப்புக்கு எதிரான அமெரிக்காவின் புதிய போர் செயல்திட்ட உத்தி வெளியாகியுள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா சர்வதேச செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் “ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கு எதிரான அறிவிப்பை புதன்கிழமை அன்று வெளியிடவுள்ளேன். இருப்பினும் இந்த அறிவிப்பில் அவர்களுக்கு எதிரான அமெரிக்க தரைப்படைகளின் தாக்குதல் தொடர்பாக எந்த தகவலும் இடம்பெறாது. இவர்களுக்கு எதிரான சண்டையை ஈராக் போர் என்று கூறிவிட முடியாது. இது கடந்த 7 வருடங்களாக அமெரிக்கா…

Read More

மோடியின் பாராட்டை பெற்ற சானியா

அமெரிக்க ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற சானியா மிர்சாவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதியில் வென்று சாம்பியன் பட்டம் வென்ற சானியா மிர்சாவுக்கு எனது வாழ்த்துகள். இந்த சாதனை குறித்து நாங்கள் பெருமையடைகிறோம் என்று தனது வாழ்த்துச் செய்தியில் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் இறுதிக்கு முன்னேறிய ஜப்பான் வீரர் நிஷிகோரிக்கும் பிரதமர் மோடி தனது…

Read More

சவூதிக்கு அச்சம் – 900 மீற்றருக்கு அடுக்கு வேலி!

ஊடுருவல் மற்றும் கடத்தல்களை தடுப்பதற்காக சவ+தி அரேபியா ஈராக்குடனான தனது 900 கிலோமீற்றர் பரந்த பாலைவன எல்லைப்பகுதியில் பல அடுக்கு வேலியை அமைக்க தீர்மானித்துள்ளது. இதன் முதல் கட்டமாக சவு+தியின் ஈராக்-குவைட் எல்லைக்கருகில் இருக்கும் ஹபர் அல் பதீனில் இருந்து ஜோர்தானுக்கு அருகாமையில் இருக்கும் வடகிழக்கு நகரான துரைப் வரையான பகுதிக்கு வேலியை பலப்படுத்தும் திட்டத்தை அறிவித்தது. இதில் ஐந்து அடுக்கு வேலியுடன் இரவுப் பார்வை கொண்ட கெமராக்கள், 50 ராடார்கள் மற்றும் கண்காணிப்பு கொபுரங்களும்; அமைக்கப்படவுள்ளன….

Read More

அரபு நாடுகளின் ஆட்சிக்கு அச்சுறுத்தலாம் – ISIS; ஒழித்துக்கட்ட முஸ்லிம் நாடுகள் தீர்மானம்

ஐ.எஸ். கள் பிடியில் இருக்கும் பகுதிகள் மற்றும் அவர்களின் மறைவிடங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதலை நடத்திவரும் நிலையில், அரபு நாடுகளின் ஆட்சிக்கு அச்சுறுத்தலாக விளங்கி வரும் ஐ.எஸ். களின், அரசியல் ரீதியாகவும், ராணுவத்தைக் கொண்டும் அடக்க அனைத்து அரபு நாடுகளும் முடிவு செய்துள்ளதாக அரபு நாடுகளின் கூட்டமைப்பின் தலைவர் நபில் அல்-அரபி அறிவித்துள்ளார். எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற அரபு நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளை சேர்ந்த வெளியுறவு துறை மந்திரிகளின் மாநாட்டுக்கு பின்னர்…

Read More