Headlines

ஐ.தே.கட்சியுடன் இணைந்தார் சரத் பொன்சேகா

முன்னாள் இராணுவ தளபதியும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சற்றுமுன்னர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தார். இதன்பிரகாரம், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து கட்சி பிரதிநிதித்துவத்தை பெற்றுள்ளார். சிறிகொத்தாவையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில், பிரதமர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. மேலும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்த சரத் பொன்சேகா, ஜனநாயக கட்சியை களைக்கப்பட போவதில்லை எனவும் அவரது கட்சியில் இருந்தபடியே வேறொரு…

Read More

அனைத்து அபிவிருத்திகளையும் ஐ.தே.கட்சியின் அரசாங்கம் செய்தது!- பிரதமர்

ஐக்கிய தேசியக் கட்சி இல்லை என்றால், நாடு முன்னோக்கி செல்லாது எனவும் நாடு முன்னோக்கி செல்ல வேண்டுமாயின் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஒன்று இருக்க வேண்டும் எனவும் அக்கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் நடந்துள்ள அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கமே செய்தது. நாட்டை மேலும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமாயின் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியை சூழ இணைய வேண்டும் எனவும் பிரதமர் குறி்ப்பிட்டுள்ளார். இணையத்தளம் வழியாக…

Read More

ஐக்கிய தேசியக் கட்சியின் APP வெளியீடு

ஐக்கிய தேசியக் கட்சியின் எப் (APP) இன்று (23) கட்சி தலைமையகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்போது கட்சி உறுப்பினர்களுக்கு புதிய இணைய அங்கத்துவ அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. இதில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டிற்கு எப்பொழுதும் புதிய திட்டங்களை ஐ.தே.கட்சியே கொண்டு வந்துள்ளது. இது மகாவளி திட்டம் காலத்திலிருந்தே கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதிலும் தாமே முன்னிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இலங்கையில் முதன் முறையாக ஒரு கட்சி தன்னுடைய எப் (APP) ஐ வெளியிடுவது…

Read More

எமது பொறுமைக்கும் எல்லை உண்டு : அமைச்சர் கபிர் ஹாஷிம்

தேசிய அர­சாங்­கத்தின் கீழ் பல்­வேறு அபி­வி­ருத்தி செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுக்கும் தரு­ணத்தில் அதனை சீர்­கு­லைத்து எமது கட்­சி­யின்­பெ­ய­ருக்கு பங்கம் விளை­விக்கும் வகை­யில் செயற்­படும் பிரி­வினர் தொடர்பில் நாம் தொடர்ந்தும் பொறு­மை­யாக இருக்க முடி­யாது. எமது பொறு­மைக்கும் ஒரு எல்லை உள்­ளது என்று அமைச்சர் கபிர்­ஹாஷிம் தெரி­வித்­துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது தேசிய அர­சாங்­கத்தின் ஒரு­மித்த செயற்­பா­டுகள் மூல­மாக மக்­க­ளுக்கு பல்­வேறு செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். அந்­த­வ­கையில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் அமைச்­சர்­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­படும் செயற்­பா­டு­கள் ­தொ­டர்­பில்­ ஒரு…

Read More

புதிய வாகனங்களை மூன்று பிரதியமைச்சர்கள் நிராகரிப்பு

அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான குறைநிரப்பு பிரேரணையொன்று, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதியமைச்சர்கள் மூவர், தங்களுக்கு அந்த வாகனங்கள் தேவையில்லை என்று அறிவித்துள்ளனர். பிரதியமைச்சர்களான ரஞ்சன் ராமநாயக்க, பாலித்த தெவரப்பெரும மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோரே, தங்களுக்கு புதிய வாகனங்கள் தேவையில்லை என்று அறிவித்துள்ளதுடன், புதிய வாகனத்தைக் கொள்வனவு செய்வதற்கான நிதியையும் வேண்டாமென நிராகரித்துள்ளனர். தற்போது தன்னிடமுள்ள வாகனம் சிறந்த நிலையில் இருப்பதாகக் கூறியுள்ள பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க,…

Read More

ஐ.தே.க வை மறுசீரமைக்கும் அதிகாரம் பிரதமரிடம்

ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைக்கும் அதிகாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்க கட்சியின் மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. சிறிகொத்தாவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று  (25)முன்தினம் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட செயற்குழுக் கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. கட்சியில் ஏற்படுத்தப்பட வேண்டிய கட்டமைப்பு மாற்றங்கள், சங்கங்கள் மற்றும் கிளைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. இதேவேளை, மே தினக் கூட்ட ஏற்பாடுகள் குறித்து தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு பிரதமர் இதன் போது…

Read More

நான் அதிகமாக பழகுவது சிங்களவர்களுடனே – மரிக்கார்

நான் வளர்ந்தது வெஹர விகாரையில்,அதிகமாக பழகுவது சிங்களவர்களுடன் எனவே, நான்இனவாதி இல்லை என்று கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது கொலன்னாவை பிரதேசசெயலகத்திற்குட்பட்ட பகுதியில் சுமார் இரண்டு இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இதன்போது குறித்த பிரதேச மக்களுக்கு பல்வேறு வகையில் நிவாரணங்களைப் பெற்றுக்கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் இணையங்கள் ஊடாக இனவாதியாக சித்தரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராகவே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்தர்ப்பத்தில் பலர் இனவாதங்களை தூண்டும்…

Read More

ரோஸியின் மனு தள்ளுபடி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கொழும்பு மாட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளருமான ரோஸி சேனாநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த பொதுத்தேர்தலின் போது, கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின், விருப்பு வாக்குகளை மீளவும் எண்ணுமாறு கோரியே அவர், மனுத்தாக்கல் செய்திருந்தார்

Read More

கார்ட்போர்ட் துட்டகை முனுக்களுக்கு இடமில்லை : பிரதமர்

எங்களுக்காக அர்ப்பணித்த மக்களுக்களின் நலனுக்காக நான் என்னையே அர்ப்பணிக்க தயாராக உள்ளேன். முழு பாராளுமன்றத்தை அரசாங்கமாக மாற்றி எங்களுடைய வேலைகளை துரிதமாக முன்னெடுத்த பின்னர் மக்களுக்கான பிரச்சினைகளை தீர்ப்போம். ஐக்கிய தேசியக் கட்சியை அழிப்பதற்கு கார்ட்போர்ட் துட்டகை முனுக்களுக்கு இடமில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். உலக மகா திருடர் உதயங்க வீரதுங்கவுடன் கை போட்டு ஒன்றாக விருந்து உண்ணும்  கார்ட் போர்ட் துட்டகை முனு, எதிரணியினர் விசேட நிதி குற்றப் புலனாய்விடம் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்….

Read More

முஸ்லிம்களின் எதிர்காலம் சூனியமாகிவிடும் – முஜிபுர் ரஹ்மான் உருக்கம்

கொழும்பு நகர் கல்வி வலயத்திற்குள்ளே வைத்தியர்கள் சட்டத்தரணிகள் பொறியியலாளர்கள் உருவாக்கத்தின் தேவையை விட ஆசிரியர்களை உருவாக்குவது அத்தியவசியமாக மாறியிருக்கின்றது. இதனை நாம் செய்யாவிடின் எமது சமூகத்தின் எதிர்காலம் சூனியமாகிவிடும் என கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை விடுத்தார். கொம்பனி தெரு மதரஸா ஒன்றின் வருடாந்த மீலாத் தின நிகழ்வு (29) இரவு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அவர்…

Read More

கபீர் ஹாஷிம் உள்ளிட்ட எழுவருக்கு அழைப்பாணை

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் கபீர் ஹாஷிம், தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட பிரதிவாதிகள் 7 பேரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உயர் நீதிமன்றம் இன்று(27) அழைப்பாணை விடுத்தது. அது , அமைச்சர் சரத்பொன்சேகா ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதை ரத்து செய்யுமாறு கோரி தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பிரசன்ன தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதாகும். குறித்த மனு மீதான விசாரணை மீண்டும்…

Read More

பிரதியமைச்சரானார் பாலித்த தேவரப்பெரும

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சராக லக்ஷ்மன் செனவிரத்ன இன்று (06) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், உள்விவகார, வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சராக பாலித்த தேவரப்பெருமவும்,வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சராக, மனுஷ நாணயக்காரவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

Read More