Headlines

கிரிக்கெட் போட்டியால் அதிக லாபம் ஈட்டிய இலங்கை

அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின் மூலம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அதிக இலாபம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால, அவுஸ்ரேலிய சுற்றுலா அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நடைபெற்ற போட்டிக்கான அனுமதி சீட்டுக்கள் விற்பனையிலேயே 2,826,150 ரூபாய் பணம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் டெஸ்ட் போட்டி ஒன்றுக்காக…

Read More

ஐ.சி.சி. கிரிக்கெட் குழுவின் அங்கத்தவரானார் மஹேல

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன சர்வதேச கிரிக்கெட் சபையின்  கிரிக்கெட் குழுவின் அங்கத்தவராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

Read More

குசல் பெரேராவின் தடை நீக்கம்

இலங்கை கிரிக்கட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் விக்கட்காப்பாளருமான  குசல் பெரேராவுக்கு சர்வதேச கிரிக்கட் சபையால் விதிக்கப்பட்டிருந்த தடை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பாவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு,மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் குசல் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு சர்வதேச கிரிக்கட் சபையால் குறித்த தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறித்த தடைக்கு எதிராக குசல் பெரேரா சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார். இதற்கமைய குசல் பெரேராவுக்கு  ஊக்க மருந்து சோதனையை நடத்திய கட்டாரைத் தளமாக…

Read More

கிரிக்கட் தெரிவுக் குழுவின் புதிய தலைவராக சனத் ஜயசூரிய

ஸ்ரீ லங்கா கிரிக்கட் தெரிவுக்குழுவின் புதிய தலைவராக சனத் ஜயசூரியவை நியமிக்க இலங்கை கிரிக்கட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் மே மாதம் 01ஆம் திகதியிலிருந்து அவரது பணிகளை தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் தெரிவுக்குழு தலைவர் அரவிந்த டி. சில்வாவுக்கு ஆலோசகர் பதவியோன்று வழங்க கிரிக்கட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதேவேளை, இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த கிரிக்கட் நிறுவன தலைவர் திலங்க சுமதிபால தெரிவிக்கையில், குசல் ஜனித் பெரேராவுக்கு 4 வருடங்கள்…

Read More

என்னால் நாட்டையும், அணியையும் கைவிட முடியாது – மத்தியூஸ் உருக்கம்

லசித் மலிங்க காயம் காரணமாக தலைமைப்பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டதை தொடர்ந்து தன்னிடம் இருபதுக்கு 20 உலககிண்ணத்தொடரில் கலந்துகொள்ளும் அணியின் தலைமைப்பொறுப்பு வழங்கப்பட்டவேளை  தான்  அதற்கு மனதளவில் தயாராகயிருக்கவில்லை என மத்தியுஸ் கருத்து வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அணியின் தலைமைப்பொறுப்பு என்னிடம் ஓப்படைக்கப்பட்டவேளை அதனை ஏற்பதற்கு நான் மனதளவில் தயாராகயிருக்கவில்லை, எனினும், கடந்த சில வருடங்களாக அணிக்கு தலைமைதாங்கிய அனுபவம் எனக்குள்ளது, ஆகவே, இது தற்போது எனக்கு சவாலாக அமையப்போகின்றது. தெரிவுக்குழுவினர் மலிங்கவுடன் இணைந்து கடந்த பல…

Read More

அனில் பிரசன்னவுக்கு தங்கப் பதக்கம்

ரீ 42 பிரிவைச் சேர்ந்த ஆண்­க­ளுக்­கான 200 மீற்றர் ஓட்டப் போட்­டியை 25.11 செக்­கன்­களில் நிறைவு செய்த அனில் பிர­சன்ன ஜயலத் புதிய ஆசிய சாத­னை­யுடன் தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்தார். இப் போட்­டியை 27.50 செக்­கன்­களில் நிறைவு செய்த புத்­திக்க இந்த்­ர­பால வெண்­க­லப்­ப­தக்­கத்தை வென்றார். இதே­வேளை, ரி 44 பிரிவைச் சேர்ந்த ஆண்­க­ளுக்­கான 200 மீற்றர் ஓட்டப் போட்­டியில் இலங்­கையின் அஜித் ஹெட்­டி­ஆ­ராச்சி (25.05 செக்) மூன்றாம் இடத்தைப் பெற்றபோதிலும் பதக்கம் வெல்லத் தவறினார்.

Read More

மட்டக்களப்பு வீரன் இலங்கை கிரிக்கட் அணிக்கு தெரிவு!

மட்டக்களப்பு  மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவனும் மற்றும் லக்கி விளையாட்டு கழக கிரிக்கட் அணியின் தலைவராகிய ஜெயசூரியம் சஞ்சீவ் இலங்கை 25 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர்  மலேசியாவில் இடம் பெற உள்ள மலேசிய அணியுடனான (Minor team- Sri Lanka tour of Malasia) போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சகலதுறை ஆட்டக்காரர் ஆன இவர் பல தடவை தனது திறமையை வெளிப்படுத்தி 2012ம் ஆண்டு சிங்கப்பூர் அணியுடனான ஒருமைப்பாடு போட்டியிலும் மற்றும் இலங்கை…

Read More

பீஃபா தலைவர் பதவிக்கு ஐவர் போட்டி: இன்று வாக்கெடுப்பு

நிதி மோசடி கார­ண­மாக தலைமைப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்டு தடைக்­குள்­ளான செப் பிளட்­ட­ருக்குப் பதி­லாக சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் சம்­மே­ள­னத்­திற்கு (ஃபீஃபா) புதிய தலைவர் ஒருவர் இன்று தெரிவு செய்­யப்­ப­ட­வுள்ளார். சுவிட்­ஸர்­லாந்தின் சூரிச் நகரில் அமைந்­துள்ள ஹோலென்ஸ்­டியன் அரங்கில் நடை­பெ­ற­வுள்ள ஃபீஃபாவின் அதி­வி­சேட பொதுக்­கூட்­டத்­தின்­ போது இத் தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளது. செப் பிளட்­ட­ருக்கு எதி­ராக நிதி மோசடி தொடர்­பான விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­னதை அடுத்து ஃபீஃபா செயற்­பா­டு­களில் பங்கு­கொள்­ள­மு­டி­யா­த­வாறு அவ­ருக்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் எட்டு வருடத்தடை விதிக்­கப்­பட்­டது….

Read More

இலங்கை வீரர்கள் பல பிரச்சினைக்கு முகங்கொடுத்தனர் – தயாசிறி!

தெற்காசியா விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக் கொண்ட இலங்கை வீரர்களுக்கு பல அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளமை உண்மை என விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, 12 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் .இந்தியாவில்  நடைபெற்று முடிவடைந்திருக்கும் நிலையில் அங்கு போட்டிகளில் கலந்துக் கொள்ளச்  சென்ற இலங்கையின் விளையாட்டு வீர,வீராங்கனைகள் பல்வேறு பிரச்சனைக்கு முகம் கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும் இதற்கான பொறுப்பை இந்தியாவின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே ஏற்கவேண்டும் என அமைச்சர் தயாசிறி தெரிவித்துள்ளார். இதேவேளை, நேற்றைய…

Read More

இலங்கையின் தங்கப் பதக்க எண்ணிக்கை போதாது

– நெவில் அன்­தனி – இந்­தி­யாவின் குவா­ஹாட்­டி­யிலும் ஷில்­லொங்­கிலும் நடை­பெற்ற 12ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் இலங்கை வென்­றெ­டுத்த 25 தங்கப் பதக்­கங்கள் போது­மா­னது என்றோ பெரு­மைப்­ப­டக்­கூ­டி­ய­தென்றோ கூற­மு­டி­யாது என விளை­யாட்டு விழா­வி­லி­ருந்து நாடு திரும்­பிய தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் ஹேம­சிறி பெர்­னாண்டோ தெரி­வித்தார். அவ­ருடன் தொலை­பே­சியில் தொடர்­பு­கொண்டு இவ் விளை­யாட்டு விழாவில் இலங்­கையின் பெறு­பே­று­ பற்றி கேட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். ‘‘இற்­றைக்கு கால் நூற்­றாண்­டுக்கு முன்னர் கொழும்பில் நடை­பெற்ற ஐந்­தா­வது தெற்­கா­சிய விளை­யாட்டு…

Read More