ஐ.நா உலக வர்த்தக அமைச்சர்கள் மாநாட்டில் றிசாத் உரை
-அமைச்சின் ஊடகப்பிரிவு – சர்வதேச முகவரகங்களின் அபிவிருத்தி உதவிகளையும் தேவையான வளங்களையும் பெற்று, சாதகமான இலக்குகளை முன்னெடுத்து 2030 இல் அதன் பயன்களை இலங்கை அனுபவிக்க முடியுமென தாம் நம்புவதாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். நைரோபி, கென்யாட்டா சர்வதேச மாநாட்டு மையத்தில் இடம்பெற்று வரும், ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி மாநாட்டின் 14வது கூட்டத்தொடரில் இலங்கைக்குத் தலைமைத்தாங்கி உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சரின் உரை மாநாட்டு மண்டபத்திலிருந்து ஐ.நா…
